‘தண்ணியில்லா காடு’ என்று சொல்லப்படும் ராமநாதபுரத்தில், பழ தோட்டம் போட்டு அசத்தும், ஆசிரியை ஸ்ரீதேவிகூறுகிறார் :
- சிறு வயதில் இருந்தே, டீச்சர் ஆகணும்ங்கிறதுதான் என் ஆசை. ஆனால், அதற்குள் திருமணம் ஆகிவிட்டது. ஆனாலும், என் கணவர், என் ஆசையை புரிந்து, டீச்சர் டிரெயினிங் படிக்க வைத்தார்; நானும் படித்தேன். கொஞ்ச வருஷம் வேலையும் பார்த்தேன்.
- ஆனால், குழந்தைகளின் எதிர்காலத்துக்கு விவசாயம் தான் நல்ல தொழில் என புரிந்து கொண்டு, வேலையை விட்டுட்டேன்
- .வறண்டு கிடக்கும் எங்கள் பகுதியில், விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே, 1972ல், தென்னை அபிவிருத்தி திட்டத்தில், கடலாடி, நரிப்பையூர், மூக்கையூர் பகுதிகளில், 5 ஏக்கர் அளவில், கூட்டுப்பட்டாவாக நிலம் கொடுத்தது அரசு. ஆனால், தென்னை அபிவிருத்தி திட்டம் தோல்வி அடைந்தது.
- எங்களுக்கு கொடுக்கப்பட்ட இடமும், கடற்கரையை ஒட்டி இருந்ததால், மண்ணும் உவர்ப்பாக இருந்தது. விவசாயத்துக்கு பயன்படாத உவர் மண்ணை, ‘மண் மாதிரி’ ஆய்வுக்கு அனுப்பி, மக்கிய இயற்கை உரங்களான, கால்நடை கழிவுகள், மண்புழு உரம் மூலம், நுண்ணுாட்டம் செய்து, அதிகளவில், விவசாயம் செய்வதற்கு ஏற்றபடி மாற்றினோம்.
- அந்த நிலத்தில், மா, புளி, முந்திரி, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா, நார்த்தங்காய், கொடுக்காப்புளி, நாவல், தென்னை மற்றும் தேக்கு என, பலவிதமான மரங்களை நட்டோம். கூடவே, ஆடு, மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கப்படும் கட்டைப்புல்லையும் ஊடுப்பயிராக வளர்த்தோம்.
- இத்துடன், ஆடு மற்றும் மாடுகளும் வளர்த்தோம். மரங்கள் எல்லாம் பழமும், பலனும் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.
- என்னைப் போல படித்தவர்கள் விவசாயத்தில் ஈடுபட, இலவச மின்சாரமும், மானியமும் தந்து, அரசு ஊக்குவிக்க வேண்டும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்