வறட்சியிலும் வெற்றிகண்ட தன்னம்பிக்கை விவசாயி

பருவ மழை பொய்த்துப் போனதால் உயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகள் அதிகரித்த சூழலில், அரசின் நிவாரணத் தொகையோ, இழப்பீடோ வேண்டாம் என்கிறார் திருச்சி விவசாயி ஒருவர்.

தனக்கு அறிமுகமில்லாத மஞ்சள் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்த அவர், கிடைத்த வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி விவசாயத்தில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

திருச்சி, மணப்பாறையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள பொய்கைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி நாகராஜன். வரலாறு காணாத வறட்சியிலும், தனக்கு முன் அனுபவம் இல்லாத மஞ்சள் வேளாண்மையைத் தேர்ந்தெடுத்தார். அதற்காக சுமார் 9 மாதங்களுக்கு முன்னர் ஈரோடு அருகே உள்ள கொடுமுடியில் இருந்து மஞ்சள் விதைகளை வாங்கி இருக்கிறார்.

Courtesy: Hindu

இதுகுறித்து நம்முடன் பேசிய விவசாயி நாகராஜன், ”ஒரு டன் மஞ்சள் விதைகளை ரூ.10,000 ரூபாய்க்கு வாங்கினேன். அவற்றுக்கு 3 வாரங்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சினேன்.

என்னுடைய 2 ஆழ்துளைக் கிணறுகள் அவற்றுக்குத் தேவையான நீரை அளித்தன.

 

மஞ்சள் வேளாண்மை என்னுடைய முதல் பயிராக இருந்ததால், வழிகாட்டலுக்கு வேளாண்மைத் துறை அதிகாரிகளை அணுகினேன். முறையான பயிரிடலுக்குப் பிறகு தற்போது கிடைத்திருக்கும் வருமானத்தை நானே எதிர்பார்க்கவில்லை.

ஈரோடு மஞ்சள் மண்டியில் தற்போது ஒரு டன் மஞ்சள் ரூ.60,000 விலைக்குப் போகிறது. எங்கள் நிலத்தில் 2.5 டன் மஞ்சளை எடுக்கமுடியும். அதை ரூ.1.5 லட்சத்துக்கு விற்க முடியும். இதன்மூலம் செலவு போக ரூ.10,000 லாபம் கிடைக்கும்.

குறைவான லாபம், நிறைய அனுபவம்

இது குறைவான லாபம் என்றாலும், புதிய வேளாண்மையில் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. வருங்காலத்தில் திட்டமிட்டு மஞ்சள் பயிரிட்டு இன்னும் அதிக லாபம் பார்ப்பேன்.

பயிர்கள் இழப்பால் விவசாயிகள் வேதனையில் இருக்கும் சூழலில், அரசிடம் எந்தவித நிவாரணத் தொகையோ, இழப்பீடோ பெறாமல் விவசாயம் செய்து, விற்பனையும் செய்கிறேன் என்பதில் மகிழ்ச்சி” என்கிறார்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *