விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்காததற்கு காரணங்கள் – 1

விவசாயத்தை அதிகம் பாதிக்கும் ஒரு விஷயம், விளைபொருளுக்கு அர்த்தமுள்ள விலை பெறுவது.

ஒவ்வொரு வருடமும், தக்காளி வெங்காயம் அரிசி விவசாயிகள் எப்படி தம் விளைபொருளை நஷ்டத்தில் விற்கிறார்கள், ரோட்டில் கொட்டுகிறார்கள் என்று செய்திகளில் பார்க்கிறோம்.

விவசாயிகளின் சந்தை விலை பற்றிய பிரச்னைகளை ஆராய்ந்த பாராளுமன்ற குழு அறிக்கையில் இருந்து நமக்கு உண்மைக்கு காரணங்கள் தெரிகின்றன. இவற்றை பார்ப்போமா?

கிட்டத்தட்ட 70% சதவீதம் அரிசி கோதுமை அரசினால் கொள்முதல் செய்யப்படவில்லை

இப்படி 70% சதவீத வித்தியாசத்தால் விவசாயிகள் முக்கால் வாசி நேரம் தன விளைபொருட்களை தானே தானே விற்க வேண்டி உள்ளது.

மத்திய அரசும், FCI ம அவர்களின் கொள்முதல் இலக்கை விட மிகவும் குறைந்தே கொள்முதல் செய்துள்ளனர். 1340 மில்லியன் டன் சாகுபடியில் அவர்கள் வெறும் 358 மில்லியன் டன் மட்டுமே கொள்முதல் செய்தனர். இது 2002 முதல் 2017 வரை இருந்த நிலவரம்

அதனால் மிச்சம் உள்ள சாகுபடியை பல விவசாயிகள் கட்டுப்படியாகாத விலையில் (Less than Minimum Support Price) தரகர்களுக்கு குறைந்த பட்ச விலையை விட குறைவாக விற்க ஏதுவாகிறது..

இந்தியாவில் 86 சதவீதம் சிறிய விவசாயிகள் 2 ஹெக்டீர் குறைவாக நிலம் கொண்டவர்கள். இவர்களுக்கு பல விதமான தடைகள் உள்ளன: அரசு இயந்திரம் குறைவாக வாங்குவது, சந்தை இடம் தூரத்தில் இருப்பது, பணம் பட்டுவாடாவில் தாமதம், அக்கறை இல்லாத அரசு அதிகாரிகள் என்று பல காரணங்கள்.

இதை தவிர வேறு சந்தை வழிமுறைகள் குறைவாக இருப்பது பெரிய காரணம்.

மற்ற காரணங்களை நாளை பாப்போம்..

References:

  1. Dalwai Committee Report on doubling farmers’ income
  2. 62nd Parliamentary Standing committee report on Agriculture Marketing

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *