தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற் றும் தொலைதூர கல்வி இயக்ககத் தின் மூலம் 21 சான்றிதழ் படிப் பிற் கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.
பருத்தி மற்றும் மக்காசோளம் வீரிய ஒட்டு விதை உற்பத்தி, நவீன கரும்பு சாகுபடி, காய்கறி விதை உற்பத்தி, தோட்டக்கலை பயிர்களில் நாற்றங்கால் தொழில் நுட்பங்கள், காளான் வளர்ப்பு, பழங்கள், காய்கறிகளை பதப்படுத்துதல், தரிசு நில மேம்பாடு, தேனீ வளர்ப்பு, திடக்கழிவுகளும், மண்புழு உரம் தயாரித்தல், பண்ணை கருவிகள் இயந்திரங்கள் பழுது பார்த்தல், தென்னை சாகுபடி, பருத்தி சாகுபடி, அலங்கார தோட் டம் அமைத்தல், நவீன பாசன மேலாண்மை, மூலிகை பயிர்கள், அடுமனை பொருட்கள், மிட்டாய் மற்றும் சாக்லெட் தயாரித்தல், நவீன களை மேலாண்மை, காட்டாமணக்கு சாகுபடி மற்றும் பயோடீசல் தயாரித்தல், மலர் சாகுபடி, பட்டுப் புழு வளர்ப்பு, அங்கக வேளாண்மை ஆகிய 6 மாத சான்றிதழ் படிப்புகளும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூர இயக்ககத்தில் நடத்தப்படுகிறது.
இந்த 21 வகையான பயிற்சிகளில் சேர தமிழை வழிமொழியாக கொண்டு 6ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஆறு மாத பயிற்சி காலமும், 1500 ரூபாய் பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு நபர் ஒரே நேரத்தில் ஒரு பாடத்தில் மட்டுமே சேர முடியும். நேர்முக பயிற்சி வகுப்புகள் மாதம் ஒருமுறை சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். பயிற்சி கட்டணம் எக்காரணத்தை கொண்டும் திருப்பி தரமாட்டாது.
விண்ணப்பத்தை பெறுவதற்கும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படி வத்தினை அனுப்புவதற்கும் இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை-641 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் பயிற்சி கட்டணத்தை நேரடியாக வைக்க வேண்டும். மேலும், இது குறித்து விபரங்கள் அறிய 04226611229, 09442111047, 09442111048 என்ற தொலைபேசியை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்