அதிக மகசூலுக்கு தொழில்நுட்பம்

சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற, தொழில்நுட்பம் குறித்து, திருத்துறைப்பூண்டி கிரியேட் இயற்கை வேளாண் பயிற்சி மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு (2013) சம்பா சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கும், இயற்கை வேளாண்மை தொழில்நுட்பம் குறித்து ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பயிற்சி இயக்குனர் ஜெயராமன் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

  • திருவாரூர், நாகை மாவட்டங்களில், சம்பா சாகுபடி நேரடி விதைப்பு செய்து விதை முளைக்க, சரியான நேரத்தில் மழை பெய்து, விதையும் முளைத்து அரை அடி உயரம் நெற்பயிர் வளர்ந்துள்ளது.
  • தற்போது, ஆற்றில் வரும் தண்ணீரை சீராக வைத்து, தொழிலாளர்களை கொண்டு களை எடுப்பதன் மூலம், அதிக தூர்கட்டும். களை என்பது விவசாயிகளுக்கு தடை அல்ல. இதற்காக களைக்கொல்லியை பயன்படுத்துவது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
  • களைக்கொல்லி இடும் நிலத்தில் மண்வளம் கெடும்.மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும்.
  • விவசாயிகள் நண்பன் என, அழைக்கப்படும் மண் புழு இனமும் அழியும்.
  • இதனால் சுற்றுச்சூழல் பாதித்து, பயிரின் வளர்ச்சியும் குறைந்து விடும்.
  • களைக்கொள்ளியை பயன்படுத்தி உற்பத்தியாகும் அரிசி விஷத்தன்மை உடையதாக இருக்கும்.
  • குறைந்த செலவில் அதிக மகசூலை, இயற்கை வேளாண்மை தொழில்நுட்பத்தில் பெற முடியும்.
  • ஒரு ஏக்கருக்கு, 50 அன்னக்கூடை அளவு தொழுஉரம், 20 லிட்டர் பஞ்ச காவ்யா, சூடோமோனாஸ் ஒரு லிட்டர், பாஸ்பாக்டீரியா, 10 பொட்டலம், அசோஸ்ஸ்பைரில்லம், 10 பொட்டலம் ஆகியவற்றை கலந்து, நிழற்பகுதியில், ஈர சாக்கு போட்டு மூடி வைத்து, 3 தினங்கள் கிளறி விட்டு, சீராக தண்ணீரை வயலில் பாய்ச்சி விட்டு, பயிர்களுக்கு தொழு உரத்தை தெளிக்க வேண்டும்.
  • இதனால் பயிர் நன்கு வளர்ந்து, அதிக தூர்கட்டும்.
  • இதற்கு ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்து தேவையில்லை.
  • ஒரு மாத பயிரியில் மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்த வேண்டும்.
  • அதற்கு ஆடு, மாடு தின்னாத இலை, ஒடித்தால் பால் வளர்க்கும் செடி உதாரணமாக, புங்கன், எருக்கன், ஊமத்தை, வேப்பிலை, நெய்வேலி காட்டாமணக்கு, காட்டாமணக்கு, பப்பாளி போன்ற செடிகளில் ஏதாவது, ஐந்து இலைகளை, மொத்தமாக 3 கி., எடுத்து, இடித்து, 10 லி., கோமியத்தில் போட்டு ஊற வைத்து, 15 தினங்களுக்கு பின் வடிகட்ட வேண்டும்.
  • இதை கைத்தெளிப்பான் மூலம், ஏக்கருக்கு, ஒரு டேங்குக்கு 10 லி., வீதம், 500 மி.லி., மூலிகை பூச்சி விரட்டியை கலந்து, 10 டேங்க் பயன்படுத்த வேண்டும். 75 சதவீதம் பூச்சி விரட்டப்பட்டு, 25 சதவீதம் பயிர் வளர்ச்சிக்கு பயன்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “அதிக மகசூலுக்கு தொழில்நுட்பம்

Leave a Reply to Amarnath Cancel reply

Your email address will not be published. Required fields are marked *