இயற்கை பூச்சி விரட்டிகள்

விவசாய பயிர்களை அழிக்கும் பூச்சிகளை ஒழிக்க ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகிறோம். இதனால் மக்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. அதை தவிர்க்க மூலிகை தாவரங்களை பயன்படுத்தி பூச்சிகளை விரட்டலாம்.

  • நொச்சி இலை, சங்குப்பூ, எருக்கன் பூஇலை, சோற்றுக்கற்றாழை இலை, வேப்பஇலை, ஆடாதோடா இலை, கருவேலம் இலை, புங்கமர இலை மற்றும் விதை, அரளிப்பூ இலை மற்றும் விதை, காட்டாமணாக்கு இலை, ஊமத்தை இலை மற்றும் காய், பப்பாளி இலை, புகையிலையில் உலர்தூள், உண்ணிச்செடி இலைகள், விளாம்பழ இலைகள், பிரண்டையில் அனைத்து பாகங்கள், மஞ்சள்தூள், தும்பைச்செடி,காட்டுப் புகையிலை மற்றும் ஆர்டீமிங்சியா இலைகள் ஆகியவை பயன்படும்.
  • இவற்றில் குறைந்தது 10 தாவரங்களில் இருந்து தலா அரை கிலோ வீதம் எடுத்துக் கொண்டு 20 லிட்டர் பசுங்கோமியம் மற்றும் 2 கிலோ பசுஞ்சாணம் ஆகியவற்றை கலந்து பிளாஸ்டிக் கொள்கலனில் அடைக்க வேண்டும்.
  • நாள் ஒன்றுக்கு அந்த கலவையை இருமுறை கலக்க வேண்டும்.
  • 10 முதல் 15 நாட்களில் நொதித்தல் முறையில் மருந்து தயாராகி விடும்.
  • பிறகு இதை வடிகட்டி தெளிவான கரைசலை பயன்படுத்தி பூச்சிகளை விரட்டியடிக்கலாம்.
  • மற்றொரு முறையில் குறைந்தது 10 தாவரங்களை சேகரித்து 15 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்பானையில் 3 மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
  • கலவை குளிர்ச்சி அடைந்ததும் 2 கிலோ மஞ்சள் தூள் சேர்த்து 12 மணி நேரம் வைக்க வேண்டும்.
  • பிறகு அதை வடிகட்டி விட்டு 100 லிட்டர் தண்ணீருக்கு 5 லிட்டர் கரைசல் வீதம் கலந்து பயிர்கள் மீது தெளித்தால் போதும்.
  • இதன்மூலம் அனைத்து வித பூச்சிகள் தாக்குதலின்றி பூரண பயிர் பாதுகாப்பு கிடைக்கும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “இயற்கை பூச்சி விரட்டிகள்

  1. Muthu says:

    தோட்டத்தில் எறும்புகளை கட்டுபடுத்துவது எப்படி

    • gttaagri says:

      வீட்டு தோட்டத்தில் எறும்புகளை விரட்ட மஞ்சள் பொடியை எறும்புகள் அதிகமாக வரும் இடங்களில் தெளிக்கலாம்

Leave a Reply to gttaagri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *