கேரள அரசின் கெடுபிடியால் இயற்கை உரத்திற்கு கிராக்கி

தமிழகத்தில் விளையும் காய்கறிகளில் நச்சுத் தன்மை அதிகம் என கூறி மாநிலத்திற்குள் அனுமதிப்பதில் கேரள அரசு கெடுபிடி செய்து வருகிறது. அதிக நச்சு தன்மை இல்லை என ஆய்வு மூலம் தெரிவித்தாலும் அதை கேரளா ஏற்க மறுக்கிறது.நஞ்சில்லா காய்கறி சாகுபடி செய்ய இயற்கை உரங்களை பயன்படுத்துங்கள், அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன் உரம், பூச்சி மருந்து பயன்படுத்துவதை தவிருங்கள் என விவசாயிகளிடம் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு கூட்டம் நடத்துகின்றனர்.

அதன்படி தேனி மாவட்ட விவசாயிகள் தற்போது தோட்டம், வயல்களில் இயற்கை உரம் அதிகம் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

செயற்கை உரம், பூச்சி மருந்துகளை குறைத்து, பழைய முறைப்படி ஆடு, மாடு, கோழிகளின் கால்நடைகளின் கழிவு எருவுகளை வயல்களில் அதிகம் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

இதனால் தேனி மாவட்டத்தில் முத்துத்தேவன்பட்டி, கருவேல்நாயக்கன்பட்டி, போடி, ஆண்டிபட்டி பகுதிகளில் கால்நடை அதிகம் வளர்க்கும் கிராமங்களில் இயற்கை உரங்களை வாங்க வியாபாரிகளிடையே போட்டி நிலவுகிறது.இம் மாவட்டத்தில் மட்டும் தினமும் 30 லாரி இயற்கை உரம் விற்பனையாகிறது.

ராஜன், இயற்கை உர வியாபாரி, ராசிங்காபுரம் கூறியதாவது:

15 ஆண்டுகளாக இயற்கை உரம் வாங்கி விற்கிறேன். முன்பு இந்தளவிற்கு விவசாயிகளிடம் வரவேற்பு இல்லை. தற்போது மூன்று மடங்கு வியாபாரம் கூடியுள்ளது. பச்சை உரமாக இருந்தால் லாரிக்கு 6 டன், காய்ந்த உரமாக இருந்தால் 4 டன் எடை பிடிக்கும். லாரி வாடகையுடன் சேர்ந்து தூரத்திற்கு ஏற்ப ஒரு லாரி உரம் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விலைபோகிறது.இதே உரத்தை மழைகாலத்தில் கேரளாவிற்கு கொண்டு சென்றால் ஒரு லாரி ஆட்டு எருவிற்கு ரூ.25 ஆயிரம், மாட்டு எருவிற்கு ரூ.23 ஆயிரம் விலை கிடைக்கும். உரத் தேவை அதிகமாக உள்ளது. கிடைப்பது குறைவாக உள்ளது, என்றார்.
நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

4 thoughts on “கேரள அரசின் கெடுபிடியால் இயற்கை உரத்திற்கு கிராக்கி

 1. கண்ணன்.சு says:

  நல்லதொரு திருப்பம் ஆனால் இது அண்டை மாநிலங்கள் அழுத்தினால் ஏற்பட்டுள்ளது தான் சற்று வருத்தம்.

 2. Ponmari says:

  இயற்கை முறையில் உற்த்தி செய்து அடுத்த தலைமுறையை Kappom, nandri. P.mari 9976724803

 3. Rajasekar says:

  Sir,
  Organic farming is the future.
  I am glad that this particular move by kerala government will be a big problem now but in the long run we all will be benefitted.
  Tamilnadu government should also ban such pesticide coated vegetables from entering our farms.
  Farmers should get ready for this revolution.

  Rajasekar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *