பசுமைப்புரட்சியால் மண்வளம் பாதிக்க படுமா?

“பசுமைப் புரட்சி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி விவசாயத்தில் மண் வளத்தையும் நீர் வளத்தையும் சீரழித்து விட்டார்கள்.​ ஆகையால் விவசாயத்தை மீண்டும் சீரமைத்தால் மட்டுமே இந்தியாவில் உணவு பற்றாக்குறையை போக்க முடியும்” என்று கூறினார்,​​ இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்.

“பாலாறு வடிநில பகுதியில் சுற்றுச்சூழல் நீர் பாதுகாப்பு மற்றும் நிலைத்த வேளாண் மை’ என்ற தலைப்பில்,​​ தமிழ்நாடு நீர்வள,​​ நிலவளத் திட்டம் சார்பில் ஒரு நாள் கரு த்தரங்கு நடைபெற்றது.​ ​ உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு கிராமத்தில் உள்ள செல்வம் மண் புழு பண்ணையில் புதன்கிழமை நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் ந.கணேசன் தலைமை வகித்தார்.​ செயற்பொறியாளர் க.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.​ நீர்வள ஆதாரத் துறை செயற்பொறியாளர் இரா.இளங்கேவன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி முனைவர் கோ.நம்மாழ்வார் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியது:

  • ரசாயனப் பூச்சி மருந்துகளும்,​​ களைக்கொல்லிகளும் செயற்கை உரங்களும்,​​ மண்ணில் உழவர்களின் நண்பர்களான மண்புழுக்கள்,​​ தட்டான்கள்,​​ நுண்ணுயிரிகளை அழித்து விட்டன.
  • உழவு,​​ உணவு,​​ உடல் நலம் ஆகிய மூன்றையும் நாம் பிரித்து பார்க்கக் கூடாது.
  • உணவுத் தட்டுப்பாடு மற்றும் உணவு பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுக்கு மூலகாரணம் விவசாய நிலங்கள்,​​ மக்களின் அடிப்படைத் தேவையான உணவு உற்பத்திக்கு போதுமான அளவு பயன்படாதது தான்.
  • விவசாய மேலாண்மை மற்றும் நிலப் பயன்பாட்டை முறைப்படுத்தினாலே இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
  • இயற்கை வேளாண்மை முறையை நமது முன்னோர்கள் சிறப்பாகக் கடைபிடித்து வந்தனர்.​  ஆனால் பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்தி பாரம்பரிய வேளாண்மை முறையை தகர்த்து மண் வளத்தையும்,​​ நீர்வளத்தையும் பாதிப்படையச் செய்து விட்டார்கள்.
  • உழவர்கள் தங்கள் நிலத்தில் இருந்து சமூக மாற்றத்தை இயற்கை வேளான்மை மூலம் ஏற்படுத்த வேண்டும்.​ உடல் நலம் காக்கும் உழவு மூலம் உணவில் தன்னிறைவு அடைய வேண்டும்,​​ என்றார்.
  • செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் மூலம் ஏற்படும் மண்வள பாதிப்பை தடுத்து நிறுத்த முடியும் என்பதை,​​ இயற்கை விவசாயி ப.செல்வராஜ் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கத்தின் மூலம் கருத்தரங்கில் விளக்கினார்.

மேலும் விவரங்களுக்கு:தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பசுமைப்புரட்சியால் மண்வளம் பாதிக்க படுமா?

Leave a Reply to santhoshi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *