வீட்டிலேயே டிரைக்கோடெர்மா விரிடி உற்பத்தி

மண்ணில் இருக்கும் பலவித பூஞ்சைகள் பயிர்களுக்கு தீங்கு செய்கின்றன.இவற்றை கட்டுபடுத்த விவசாயிகள் ரசாயன பூச்சி கொல்லிகளை பயன் படுத்துகின்றனர்.

மண்ணில் வாழும் கெடுதல் செய்யும் பூஞ்சைகளை கட்டுபடுத்தும் இயற்கை உயிர் கொல்லி டிரைக்கோடெர்மா விரிடி (டிவி). டிரைக்கோடெர்மா விரிடி பற்றி முன்பே நாம் படித்துள்ளோம்.

இந்த டிரைக்கோடெர்மா விரிடி மார்கெட்டில் கிடைக்கிறது. தேவைக்கேற்ப விவசாயிகள் தன்னுடைய நிலத்திலேயே டிரைக்கோடெர்மா விரிடி தயார் செய்ய தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் வழி வகுத்து உள்ளது.

30x 40 சென்டிமீட்டர் உள்ள பிளாஸ்டிக் தட்டு எடுத்துகொள்ளவும். அதில் காய்ந்த நெல் கதிர்கள், மர துகள்கள் அல்லது கரும்பு கழிவை நிரப்பவும். அதில் தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகத்தில் இருந்து வாங்கிய  டிரைக்கோடெர்மா விரிடி கல்ச்சர்  பரப்பவும். நீர் ஊற்றி வரவும். மெல்லிய வேஷ்டி துணி மூலம் மூடி வைத்து வீட்டுக்குள்ளே வைக்கவும். 10 நாட்கள் கழித்து டிரைக்கோடெர்மா விரிடி கல்ச்சர் பச்சை நிறத்தில் வர ஆரம்பிக்கும். 2-3 வாரம் வரை இதை வளர விடவும்

ஒரு மாதம் பின்பு டிரைக்கோடெர்மா விரிடி பச்சை நிற பவ்டர் ஆக கீழே உதிரும். இதை நேராக எடுத்து  பயிர்களுக்கும் செடிகளுக்கும் பயன் படுத்தலாம்.

டிரைக்கோடெர்மா விரிடி கல்ச்சர் கிடைக்க அணுக வேண்டிய முகவரி:

அரசு Institute of Forest Genetics and Tree Breeding, கோயம்புத்தூர், போன்: 0422-2484100. Dr கார்த்திகேயன் மற்றும் சிவப்ரியா ஆராய்ச்சியாளர்களை தொடர்பு கொள்ள:  அலைபேசி : 9443374119, ஈமெயில் : karthika@icfre.org

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வீட்டிலேயே டிரைக்கோடெர்மா விரிடி உற்பத்தி

  1. வெங்கடேசன். கோ says:

    விவசாயிகளின் விளைபொருள் தரமானதாகவும்… அதனால் அவர்களது வாழ்வாதாரம் உயரவும் ….. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது…. வாழ்த்துக்கள்.
    நன்றி

Leave a Reply to வெங்கடேசன். கோ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *