மண்ணை வளப்படுத்தும் நுண்ணுயிர் கரைசல்!

மண்ணை வளப்படுத்தினால் அனைத்து பயிர்களும் நன்றாக வேர்விட்டு வளரும். நல்ல மகசு லும் கிடைக்கும். அதற்கு மண்ணை சத்தூட்டம் உள்ளதாக மாற்ற வேண்டும். மண்ணை அதிக சத்துள்ளதாக மாற்ற நுண்ணுயிர் கரைசல் தயாரிக்கும் முறை பற்றி காணலாம்.

நுண்ணுயிர் கரைசல் :

  •  காற்றில்லாத சு ழலில் வளரும் நுண்ணுயிர்களை ஆங்கிலத்தில் அனரோபிக் பாக்டீரியா என குறிப்பிடுவர்.
  • இது போன்ற ஒரு காற்றில்லாத சு ழலை செயற்கையாக உருவாக்கி அதில் இந்த பாக்டீரியா என்ற நுண்ணுயிர்களை வளரச் செய்து மண்ணுக்கு கொடுக்கலாம்.
  • இதற்கு தொல்லுயிர் கரைசல் முறையில் நுண்ணுயிர்களை உருவாக்க முடியும்.

தயாரிப்பு முறை :

  •  50 லிட்டர் கொள்ளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம்மை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதில் புதிய மாட்டுச்சாணம் 5 கிலோ, நாட்டுச் சர்க்கரை முக்கால் கிலோ, கடுக்காய் தூள் 25 கிராம், அதிமதுரம் பொடி 25 கிராம் என்ற அளவில் போட வேண்டும்.
  • பின்னர் 45 லிட்டர் அளவுக்கு தண்ணீர் எடுத்து இந்த பிளாஸ்டிக் டிரம்மில் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
  • பின் அந்த டிரம்மை இறுக காற்றுப்புகாமல் மூடி விட வேண்டும்.
  • 10 நாட்கள் வரை இதனை இவ்வாறு இறுக மூடி வைக்கும் போது இதில் மீத்தேன் வாயு உருவாகி இருக்கும்.
  •  10 நாளில் மூடியை லேசாக திறந்து விட்டால் வாயு வெளியேறும். இந்த நிலையில் கேனில் உள்ள கலவையில் காற்றில்லாத சு ழ்நிலை இருந்தால் நுண்ணுயிர்கள் பல மடங்கு பெருகி இருக்கும். இதுவே, சத்தூட்டமுள்ள உரக்கலவை ஆகும்.

பயன்படுத்தும் முறை :

  •  1 முதல் 2 லிட்டர் கரைசல் எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்குத் தௌpக்கலாம்.
  •  ஒரு ஏக்கருக்கு 10 முதல் 20 லிட்டர் கரைசல் போதுமானது.

பயன்கள் :

இந்த கரைசலை தௌpப்பதால் பயிரில் இலைபரப்பு அதிகரிக்கும்.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மண்ணை வளப்படுத்தும் நுண்ணுயிர் கரைசல்!

  1. சீ.கணபதி says:

    கெண்டை மீன் வளர்ப்பு பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன்​.

Leave a Reply to சீ.கணபதி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *