மண் புழு உரம் தயாரிப்பு – கேள்வி பதில்கள்

பொதுவாக மண் புழு உர படுக்கையில் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டுமா?

முதலில் 15 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் தெளித்து வரவேண்டும். பிறகு ஈரத்தின் அளவை பொருத்து மூன்று நாடகளுக்கு ஒருமுறை தண்ணீர் தெளித்து வரவேண்டும்

சாணக்கரைசல் குளோரின் கலந்த குடிநீரில் தயாரிக்கலாமா?

குடிநீரில் குறைந்த அளவே குளோரின் இருப்பதனால் பயன்படுத்தலாம்.

மண் புழு உரம் பயன்படுத்தும் வயலில் பியூரிடான் குருனை பயன்படுத்தலாமா?

இரசாயன உரம் பயன்படுத்தும் அதே வேளையில் பயன்படுத்த கூடாது.

மண் புழு உர படுக்கையில் எறும்புகளால் பாதிப்பு உண்டா?

மண் புழு உர படுக்கையில் கட்டாயம் எறும்புகள் மற்றும் பூச்சிகளின் பாதிப்பு இல்லாதவாறு கவனிக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் உர படுக்கையை சுற்றி இரண்டு அடி தள்ளி எறும்பு மருந்தை தூவி பாதுகாக்கலாம்.

உர படுக்கையில் தயாராகும் உரத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்?

உரத்தை கண்டிப்பாக பாலித்தீன் பைகளில் அடைக்கக்கூடாது. நல்ல காற்றோட்டம் உள்ள துனிப்பைகளில் சேகரிக்க வேண்டும்.

மண் புழு வடிநீர் (வெர்மி ஸ்ப்ரே) பயிர்களுக்கு எப்படி எந்த அளவுகளில் தெளிக்க வேண்டும்?

ஒரு லிட்டர் மண் புழு வடிநீருடன் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து இலை வழியாக தெளிக்கலாம்.

மண் புழு உர படுக்கை திறந்த வெளியில் அமைக்கலாமா?

திறந்த வெளியில் மண் புழு உர படுக்கை அமைக்கலாம் ஆனால் நேரடியாக சூரிய ஒளி படக்கூடாது. உர படுக்கையில் உள்ள மண் புழுக்கள் இறந்துவிட வாய்ப்புள்ளது ஆகையால் மர நிழல்களில் அல்லது கீற்றுக்கொட்டகை அமைத்து உர படுக்கை அமைக்கலாம்.

மண் புழு உரம் தயாரிக்க என்னென்ன வேளாண் கழிவுகளை பயன்படுத்தலாம்?

தினந்தோரும் வீடுகளில் பயன்படுத்தும் வேளாண் கழிவு பொருட்களான காய்கறி கழிவுகள், வைக்கோல், மர இலை தழைகள், மாட்டுச் சாணம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “மண் புழு உரம் தயாரிப்பு – கேள்வி பதில்கள்

    • gttaagri says:

      மண்புழு கிடைக்கும் சில இடங்கள்:
      1. தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், -கோவை, தொலைபேசி எண்:0422-5511252

      2. செல்வம் ஆர்கநிக்ஸ், 2/103.
      ராகல்வவி மேற்கு தோட்டம், S K பாளையம்
      உடுமலைபேட்டை கோவை-642132, தொலைபேசி எண்: +(91)-7893537253

      3. விருடிகேஷ் ஆர்கானிக், 1/183, பருவை ரோடு,அப்பா நாயகன் பட்டி,
      கோவை,
      தொலைபேசி: (422)-2593834

      4. க்ளிட்டோ எக்ஸ்போர்ட்
      பிளாட் 10, செந்தூர் நகர்,
      மேலபனங்கடி,
      வாகைக்குளம், மதுரை 625017
      தொலைபேசி: 08377807829

      5. விநாயகா
      4, R V L நகர், வரதராஜ புறம் உப்பிலிபாளையம் போஸ்ட் கோவை – 641 015
      தொலைபேசி: 09047057030

      6. லீவேஸ் பயொடேக்
      158, மேற்கு வீதி,
      குரியாமன்கலம் போஸ்ட், சிதம்பரம் 608501
      தொலைபேசி: 09841826624

      7. சக்தி அக்ரோ
      ஸ்ரீ வேல்முருகன் ட்ரடெர்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆயில் மில்ல்ஸ்,165/92-எ தென்னமபாலயம் ரோடு அன்னூர் கோவை – 641 653,
      தொலைபேசி: 09585175228
      இந்த விவரங்கள் இன்டர்நெட் மூலம் கிடைத்தவை.

      இந்த எண்களை தொடர்பு கொண்டு நீங்கள் இந்த விவரங்ககளை அறியலாம்

Leave a Reply to gttaagri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *