கரும்பு தோகை இயற்கை உரம

கரும்பு அறுவடைக்கு பின்னர், கரும்புத் தோகையை வயல்களில் எரிக்காமல், தூளாக்கி மூடாக்கு செய்வதால் மண்ணின் ஈரம் பாதுகாக்கப்படுவதோடு அடுத்த பயிருக்கு சிறந்த இயற்கை உரமாக அமைகிறது என்று வேளாண் இணை இயக்குநர் கே.எம். ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.

  • கரும்பு அறுவடை முடிந்தவுடன், டிராக்டரில் இயங்கும் இயந்திரத்தின் உதவியுடன் கரும்பு தோகையினை தூளாக்கி வயல்களில் பரப்பினால் சிறந்த மூடாக்காக செயல்பட்டு, மண்ணில் உள்ள ஈரம் ஆவியாகாமல் தடுக்கப்படும்.
  • மேலும், தூளாக்கப்பட்ட கரும்பு தோகை விரைவில் மக்கி இயற்கை உரமாக பயிருக்கும் கிடைக்கும். இயற்கை உரங்கள் அரிதாக உள்ள இந்த சூழ்நிலையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும்.
  • தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஒரு ஏக்கருக்கு ரூ. 800 மானியமாக வழங்கப்படுகிறது என்றார்.

நன்றி:தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “கரும்பு தோகை இயற்கை உரம

  1. gobi says:

    ஐய. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஒரு ஏக்கருக்கு ரூ. 800 மானியமாக வழங்கப்படுகிறது என்றார்.இதை வாங்க எந்த முகவரியை அனுக வேண்டும்.

    • gttaagri says:

      Ayya,
      nandri. Pasumai tamilagam ippodu Android app aaka kidaikiradhu. idhai kondu ungal mobile phonil padikkalam.
      Android phonil Google Play sendru Pasumai endru thedi install seiyyavum
      nandri
      ungal admin

Leave a Reply to sivalingam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *