குதிரைவாலி விதைப்பண்ணை

விருதுநகர் மாவட்டத்தில் பாரம்பரிய தானிய வகையான குதிரைவாலி விதைப்பண்ணையம் மூலம் சாகுபடி செய்யும் பரப்பளவை அதிகரிக்கச் செய்யும் வகையில் சமச்சீர் வளர்ச்சி நிதி ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பாரம்பரிய தானிய வகைகளை பயிர் செய்வதற்கு வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதேபோல், விருதுநகர் மாவட்டத்திலும் தானிய வகையான குதிரைவாலிச் சாகுபடி மேற்கொள்வதற்கும், விதைப்பண்ணையம் அமைப்பதற்கும் வேளாண்மைத்துறை மூலம் வத்திராயிருப்பு வட்டார பகுதி மானாவாரி விளைநிலங்கள் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டன. இதில், வேளாண்மை பல்கலை ஆராய்ச்சி மையத்திலிருந்து குதிரைவாலி விதை 260 கிலோ வாங்கி அந்தந்த வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலம் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை என்கிற அளவில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

வத்திராயிருப்பு பகுதியில் குதிரைவாலி விதைப்பண்ணை தவிர்த்து, இம்மாவட்டத்தில் மொத்தம் 900 ஹெக்டேரில் மானாவாரியில் பயிரிட்டதில் எதிர்பார்த்ததை விட சாகுபடி கிடைத்தது. இதில், விதைப்பண்ணையத்தில் சாகுபடி செய்ததில் தரமான குதிரைவாலி விதை கிடைத்ததால் வேளாண்மை விதை ஆய்வு மையம் மூலம் சுத்தகரிப்பு செய்து, தமிழகத்தில் அனைத்து வேளாண்மை விதை மையத்திற்கும் விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஏறகனவே இம்மாவட்டப் பகுதியில் குதிரைவாலி சாகுபடி செய்யும் பரப்பளவும் கடந்த 2012-13ல் 850 ஹேக்டேரும், 2013-14ல் 900 ஹெக்டேரும் மற்றும் 2014-15ல் 1800 ஹெக்டேராகவும் அதிகரிக்க உள்ளது.

இது குறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எஸ்.சுப்பையா கூறியதாவது: கடந்தாண்டு நீர்வள நிலவளத்திட்டம் சார்பில் கோவை வேளாண்மை விதை ஆராய்ச்சி மையத்திலிருந்து 260 கிலோ குதிரைவாலி விதை வாங்கி வத்திராயிருப்பு பகுதி உள்ளிட்ட பகுதியில் விதைப்பண்ணையம் அமைத்து சிறு, குறு விவசாயிகள் தேர்வு செய்து ஒரு ஏக்கருக்கு 2 கிலோ மூலம் விநியோகம் செய்தோம். இதில், சாகுபடி எதிர்பார்த்ததை விட 20 டன் விதை கிடைத்தது.

இதை, தமிழகம் முழுவதும் விதை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்பயிர் மானாவாரியில் தண்ணீர், உரம் இல்லாமல் 3 மாதத்திற்குள் சாகுபடி செய்யும் குறுகிய கால பயிராகும். இதன் தேவையும் அதிகரித்துள்ளதால் கூடுதல் விலையும் கிடைக்கிறது. இம்மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டார பகுதியிலும் குதிரைவாலி விதைப்பண்ணை சாகுபடி செய்யும் பரப்பளவை அதிகரிப்பதற்காக நிகழாண்டில் சமச்சீர் வளர்ச்சி நிதி மூலம் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

5 thoughts on “குதிரைவாலி விதைப்பண்ணை

  1. dhinesh says:

    Please mention price of the product.. kuthiraivali virpanai seyya yaarai anuguvathu . I really interesting with to do this things

  2. D.SivasangarTSR says:

    குதிரைவாலி உளுந்தூர்பேட்டை பகுதியில் விளையுமா?

  3. சு.சரவணன் says:

    எனக்கு குதிரை வாலி விதைகள் தஞ்சை மாவட்டம் திருக்கோவில் பத்து கிராம த்துக்கு விதை 6கிலோ எனக்கு வேன்டும்

Leave a Reply to D.SivasangarTSR Cancel reply

Your email address will not be published. Required fields are marked *