திராட்சைக்கு போர்டோ கலவை தயாரித்தல் எப்படி

போர்டோ கலவை ஒரு நுண்ணு¡ட்டக்கலவை, இது அடிசாம்பல் நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

1 சதவித போர்டோக் கலவை தயாரிக்கும் முறை:

  • 400 கிராம் காப்பர் சல்பேட்டை 20 லிட்டர் நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு 400 கிராம் சுண்ணாம்பை 20 லிட்டர் நீரில் தனியாகக் கரைத்து வைக்கவம்.
  • காப்பர் சல்பேட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுடன் கலக்கவும். காப்பர் சல்பேட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுக்குள் ஊற்றும் போது சுண்ணாம்புக் கரைசலைத் தொடர்ந்து கலக்கி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.
  • கரைசல்கள் தயாரிக்க மண் பாத்திரம் அல்லது மர வாளிகளைத் தான், உபயோகப்படுத்த வேண்டும். உலோக பாத்திரங்கள் உபயோகப்படுத்தக்கூடாது.
  • கரைசல் சரியான அளவில் உள்ளதா என்பதைக் கண்டறிய ஒரு சக்தியைக் கரைசலில் ஒரு நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். கத்தியில் செம்புழுப்புத் துகள்கள் காணப்பட்டால் மேலும் சுண்ணாம்பு இடவேண்டும். செம்பழுப்புத் துகள்கள் கத்தியில் படியாமல் இருக்கும் வரை சுண்ணாம்பு இடவேண்டும்.
  • இவ்வாறு தயாரித்த கலவையினை திராட்சை பந்தலில் கவாத்து வெட்டிய 2 நாட்கள் கழித்து ஒருமுறையும், துளிர்த்தவுடன் ஒருமுறையும், இலைகள் பெரிதானவுடன் ஒருமுறையும், பூக்கும் தருணத்தில் ஒருமுறையும், காய்பிடிக்கும் தருணத்தில் ஒருமுறையும் என 5 முறைகள் அடிக்க வேண்டும்.

 

தகவல் மூலம்: திருமதி. ஷாகின்தாஜ், பயிர்பாதுகாப்பு & பூச்சியியல் துறை,
வேளாண் அறிவியல் மையம், காந்திகிராமம்.

நன்றி: M.S.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

6 thoughts on “திராட்சைக்கு போர்டோ கலவை தயாரித்தல் எப்படி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *