அதிக மகசூல் பெற தென்னை டானிக்

தென்னை பயிரிடும் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக பயனளிக்கும் விதத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் “தென்னை டானிக்’ என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • தென்னை டானிக் ஊட்டப்பட்ட மரங்களில் குரும்பை உதிர்வது குறைந்து காய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், காய்களின் பருமனும் தரமும் அதிகரிக்கிறது.
  • தென்னை டானிக்கில் நைட்ரஜன், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, போரான், மாலிப்டினம் உள்ளிட்ட மரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் சரியான விகிதத்தில் கலந்து ஆக்சின், அஸ்கார்பிக் அமிலம் ஆகிய வளர்ச்சி ஊக்கிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
  • மரத்தின் கார அமில நிலைக்கு டானிக்கின் கார அமில நிலையை அமைத்து இந்த டானிக் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம், மரங்களில் டானிக் காரணமாக வேதியியல் செயல்பாடு பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும், மரத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகளையும், வளர்ச்சி ஊக்கிகளையும் சேதாரமின்றி தருகிறது.
  • தென்னை மரங்களுக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துகளை சரியான விகிதத்தில் நேரடியாக மரத்துக்குள் செலுத்த முடியும். நோய், பூச்சித் தாக்குதல், வறட்சியைத் தாங்கும் வகையில் இயற்கையான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

 

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

 

 

 

 

 

 

 

டானிக் செலுத்தும் முறை:

  • மரத்திலிருந்து 3 அடி தள்ளி மண்பறித்து பென்சில் கனமுள்ள வெள்ளை நிற உறிஞ்சும் வேர் ஒன்றைத் தேர்வுசெய்து வேரின் நுனியை மட்டும் கத்தி மூலம் சாய்வாகச் சீவ வேண்டும்.
  • பின்னர், டானிக் உள்ள பையின் அடிவரையில் வேரை நுழைத்து, வேரையும் பையின் மேல் பாகத்தையும் நூலால் கட்டி டானிக் சிந்தாத வகையில் மண் அணைக்க வேண்டும்.
  • மண்ணின் ஈரத்தன்மை குறைவாக இருந்தால் 12 மணிநேரத்துக்குள் டானிக்கை வேர் உறிஞ்சிவிடும்.
  • எனவே, வெயில் நேரத்திலும், மழை, பாசனம் இல்லாத நேரத்திலும் டானிக் கொடுப்பது சிறந்தது. தென்னை டானிக்கை தயாரித்த 30 நாள்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
  • ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய பலன்தரும் தென்னை மரத்துக்கு ஆண்டுக்கொரு முறை 50 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்டு, 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இடுவது அவசியம். மேலும், இத்துடன் ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு 1 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 3 கிலோ பொட்டாஷ் உரங்கள் தேவைப்படும்.
  • இவற்றை இரு பிரிவாக 6 மாதங்களுக்கு ஒருமுறை இட்டு உடனடியாக நீர்பாய்ச்ச வேண்டும். மேலும், ஆண்டுதோறும் 6 மாதங்களுக்கு ஒருமுறை வேர் மூலம் டானிக் செலுத்துவதால் நுண்ணூட்டச் சத்து குறைபாடு நீங்கும். வளர்ச்சி ஊக்கிகள் தட்டுப்பாடும் நீங்கும். மரங்கள் செழிப்பாக வளர்ந்து உயர்விளைச்சல் கொடுக்கும்.
  • ஒரு மரத்துக்கு 200 மில்லி டானிக் தேவை. இது பாலிதீன் பையில் அடைத்து சீலிட்டு ரூ.10-க்கு விற்கப்படுகிறது. தென்னை விவசாயிகள் அனைவரும் இந்த டானிக்கை பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, 04622575552 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

7 thoughts on “அதிக மகசூல் பெற தென்னை டானிக்

  1. Ramkumar says:

    சார் சிறப்பான பதிவு விவசாயிகளின் உற்ற நண்பன் நீங்கள். நன்றி டானிக் எவ்வாறு தயாரிப்பது?

    • G.Navalavan says:

      சார் தஞ்சாவூர் மாவட்டம் வேப்பங்குளத்தில் கிடைக்கிறது.

  2. கதிரவன் says:

    சிறப்பான கட்டுரை
    ஆனால் கிடைக்கும் இடம் பற்றி சரியான தகவல் இல்லாத வருத்தம்

  3. Ashok says:

    Thangal kooriyathu unmai
    Nan kadantha 10 varuda kalam
    Veril moolam marunthu kodukkum
    Tholilthan seithu varugiren
    Uthavikku 9894523582 enra ennai thodarbu kollavum

Leave a Reply to கதிரவன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *