இயற்கை மூலிகை மருந்து தெளித்து தென்னை மரத்தில் 300 காய்கள்!

தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது தென்னந்தோப்பு அனுமந்தன்பட்டியில் உள்ளது. இவரது தோப்புகளில் உள்ள தென்னைமரங்களில் வருடத்துக்கு 50 காய்கள் காய்ப்பதே அரிதாக இருந்தது.

தனது தோப்பில் உள்ள தென்னை மரங்களில் உற்பத்தியை பெருக்குவதற்காக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த இயற்கை வேளாண் மூலிகை மருந்து கண்டுபிடிப்பாளர் ஜெயவீரனை அணுகினார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பிசினஸ் கமிட்டி உறுப்பினராக உள்ள இவருக்கு வேளான் தொடர்பான இவரது கண்டுபிடிப்புக்காக மத்திய வேளாண் அமைச்சகம் விருது வழங்கியுள்ளது.

Courtesy: Dinakaran
Courtesy: Dinakaran

 

 
கடந்த 2013ம் ஆண்டு இவரது ஆலோசனையின்படி இயற்கையாக தயாரிக்கப்பட்ட மூலிகை மருந்துகளை முருகன் தனது தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு தெளித்தார். அவரது தோட்டத்தில் உள்ள அனைத்து மரங்களிலும் தற்போது ஒரு வெட்டுக்கு 300 காய்கள் வரை காய்த்து வருகின்றன. இந்த தென்னைமரம் கொச்சின் கோக்கனெட் வகையை சேர்ந்ததாகும்.

ஜெயவீரன் தற்போது தென்னை உள்பட அனைத்து மர விவசாயம் மற்றும் பயிர்கள் மற்றும் விவசாயத்திற்கு இலவச ஆலோசனை வழங்கி வருகிறார். விவசாயிகள் இவரிடம் ஆேலாசனை பெற 09865388806 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “இயற்கை மூலிகை மருந்து தெளித்து தென்னை மரத்தில் 300 காய்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *