திரட்சியான கடலை பெற வேளாண் துறை யோசனை

நிலக்கடலை சாகுபடியின்போது பொக்குகளற்ற திரட்சியான எடை அதிகம் உள்ள நிலக்கடலை பெற ஜிப்சம் இடவேண்டும் என வேளாண் துணை இயக்குநர் ஆர்.அரிவாசகன் தெரிவித்தார்.

  •   நிலக்கடலை சாகுபடியில் பூக்கள் விழுதுகளாக மாறி பூமியினுள் சென்று கடலைகளாக மாற்றம் பெறுகின்றன. இந்த விழுதுகள் பூமியில் இறங்கும்போது மண் பொல பொலப்பாக இருக்க வேண்டும்.
  •   நிலக்கடலையில் பூக்கும் பருவம் 26-ம் நாளில் துவங்கி 45-ம் நாள் விழுதுகள் மண்ணில் இறங்க ஆரம்பிக்கும். அந்த காலகட்டத்தில் மண்ணை கிளறிவிட்டு ஜிப்சம் இட்டு மண் அணைப்பதால் விழுதுகள் எளிதில் மண்ணுக்குள் சென்று காய்கள் பிடிப்பதை அதிகப்படுத்தும்.
  •   தற்போது கார்த்திகைப் பட்டத்தில் மானாவாரியில் செய்யப்பட்ட நிலக்கடலை சாகுபடியில் அடியுரமாக ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இடவேண்டும். அடியுரமாக இடாதபட்சத்தில் 160 கிலோ ஜிப்சத்தை 40 முதல் 70-ம் நாளுக்குள் செடிக்கு அருகில் இட்டு மண் அணைத்துக் கொடுக்கலாம்.
  •   இதனால் பொக்குகளற்ற, திரட்சியான, எடை அதிகமுள்ள கடலை பெற முடியும். ஜிப்சமானது வேரின் வளர்ச்சியை அதிகப்படுத்தி, நீரை அதிகம் இழுத்து பயிருக்கு கிடைக்கச் செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என அவர் கூறினார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “திரட்சியான கடலை பெற வேளாண் துறை யோசனை

Leave a Reply to K.கார்த்திகேயன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *