இயந்திர நடவு அறிவுரை

விவசாயிகள் இயந்திரம் மூலம் நெல் நடவுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • சாதாரண முறையில் நெல் நடவு செய்வதை விட இயந்திரம் மூலம் நடவு செய்யலாம்.
  • இதற்கு குறைந்த அளவு விதையே போதுமானது.
  • 15 நாள் வயதுடைய நாற்றுகளை நடவுக்குப் பயன்படுத்தலாம்.
  • நடவுக்கு முன் ஒரு ஏக்கருக்கு நெல் நுண்ணுரம் 5 கிலோவை தேவையான மணலுடன் கலந்து வயலில் இட வேண்டும்.
  • பயிருக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்து குறைவின்றி கிடைப்பதால் பயிர் செழித்து வளரும்.
  • உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா ஆகியவற்றை தேவையான மக்கிய தொழு உரத்துடன் கலந்து வயலில் தூவி பின்னர் இயந்திரம் மூலம் நடவு மேற்கொள்ளலாம்.
  • உயிர் உரங்களை 50 சதவீதம் மானியத்தில் வாங்கி பலனடையலாம்.
  • நடவு இயந்திரம் மூலம் நடவு மேற்கொள்வதற்கு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை அணுகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இயந்திர நடவு அறிவுரை

Leave a Reply to m.ganesan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *