கோ.ஆர். – 51 புதிய நெல் ரகம்

கோவை வேளாண் பல்கலை உருவாக்கிய, ‘கோ.ஆர். – 51’ எனும், புதிய நெல் ரகத்திற்கு, மத்திய அரசு, அங்கீகாரம் வழங்கி உள்ளது. இந்த வகை நெல்லை, அனைத்து பருவத்திலும் பயிரிடலாம் என்பதால், விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு, கோ.ஆர். – 51 என்ற புதிய நெல் ரக விதையை, பல்கலை உருவாக்கியது. இந்த விதை, முதலில், மாநில ஆராய்ச்சி கழகத்தின் சார்பில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது; பின், மத்திய ஆராய்ச்சி கழக ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

ஜனவரியில், ‘இந்த விதை ரகம் தரமானது’ என, மத்திய அரசு அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட, அனைத்து மாநிலங்களிலும், புதிய ரக நெல் விதை விற்பனை துவங்கி உள்ளது.

Courtesy: DInamalar
Courtesy: DInamalar

 

 

 

 

 

 

 

பல்கலையின் விதை மைய தனி அலுவலர் பாஸ்கரன் கூறுகையில், ”புதிய ரக நெல், அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது என்பதால் விவசாயிகள் மத்தியில், அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. விதையை பயிரிடுவதற்கான செய்முறை குறிப்புகளும், விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன,” என்றார்.

  • புதிய நெல் ரகம், 105 நாட்களில் வளர்ந்து விடும்.
  • பூச்சி, நோய்களின் தாக்கத்தை எதிர்த்து வளர்ந்து, அதிக விளைச்சலை தரக் கூடியது;
  • நேரடி நெல் விதைப்பில் பயிரிடக் கூடியது.

இதனால், இந்த ரக விதை நெல்லை வாங்குவதில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

நன்றி:  தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

8 thoughts on “கோ.ஆர். – 51 புதிய நெல் ரகம்

  1. mohandoss says:

    திருவண்ணாமலைமாவட்டத்தில் உள்ளவர்களுக்கு கோ.ஆர் 51 ரகம் விதை நெல் எங்குகிடைக்கும்

    • gttaagri says:

      தெரிந்தவுடன் தெரிவிக்கிறேன். நன்றி – அட்மின்

  2. ப.விஜய் says:

    சிவகங்கை மாவட்டத்தில் கோ.ஆர் 51எங்கு கிடைக்கும். தெரிந்தவர்கள் பதிவிடவும்.

  3. mohandoss says:

    கோ.ஆர்.51,என்ற ரகம் விதைநெல் எங்கு கிடைக்கும்.
    தயவுசெய்து பதிவிடுங்கள்.

Leave a Reply to tamilarasan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *