திருந்திய நெல் சாகுபடி போட்டி

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்று ரூ.5 லட்சம் பரிசு பெறலாம் என, வேளாண்மை இணை இயக்குநர் செ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் கூறியது:

திருந்திய நெல் சாகுபடியில் மாநில அளவில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு முதலிடம் பெறுவோர் தேர்வு செய்யப்படுவர். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, பதிவுக் கட்டணமாக ரூ. 150 செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை அந்தந்தப் பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவுசெய்து கட்டண ரசீது பெறலாம். பதிவுக் கட்டணம் திருப்பி வழங்கப்படமாட்டாது.

போட்டியில் பங்கேற்கும் விவசாயிகள் தங்களது அறுவடை தேதியை 15 நாள்களுக்கு முன்பே வட்டார வேளாண் உதவி இயக்குநர்களுக்கு நேரிலோ, பதிவு தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும். போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலம், வேளாண்மை உதவி இயக்குநரால் பார்வையிடப்படும். நிலத்தின் மகசூல் ஏக்கருக்கு 2,500 கிலோவுக்கு குறைவாக இருந்தால் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வகையில் தேர்வு செய்யப்படும் வயலின் அறுவடையை 4 பேர் கொண்ட குழு மேற்பார்வையிடும். போட்டியின்போது குறைந்தபட்சம் 50 சென்ட் நிலப்பகுதியில் அறுவடை செய்து அவற்றை ஹெக்டேருக்கு மாற்றம் செய்து கணக்கிடப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பெறப்படும் மகசூலை ஒப்பிட்டு மாநில அளவிலான தேர்வுக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும். இந்த நிதியாண்டில் தேர்வு செய்யப்படும் நபருக்கு அடுத்த குடியரசு தின விழாவில் பரிசு வழங்கப்படும் என்றார் அவர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “திருந்திய நெல் சாகுபடி போட்டி

    • gttaagri says:

      Dear Sir,

      Thanks for your mail. as and when I get the information about these events, I will certainly post them in the site.

      Thank you
      -admin

Leave a Reply to dhinesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *