பசுமை விகடனின் மதிப்பூட்டல் பற்றிய இலவச பயிற்சி

அரிசி, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், காய்கறிகள், பழங்கள் என அனைத்திலும், இன்றைய நவீன யுகத்திற்கு ஏற்ப, பல தரப்பினரையும் ஈர்க்கக்கூடிய வகையில் விதவிதமாக மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தலாம்.

விவசாயிகள், கடும் உழைப்பையும், முதலீட்டையும் செலுத்தி விளைபொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால், தங்களுக்கு அதற்கேற்ற லாபமோ, உத்தரவாதமான வருமானமோ கிடைப்பதில்லை என்பது அவர்களது ஆதங்கமாக உள்ளது. இதற்கு தீர்வு தரும் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது, மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பம்.

மதிப்புக்கூட்டுதல்

சமீபகாலமாக, இத்துறையானது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதில் உருவாக்கியுள்ள தொழில் வாய்ப்புகள், விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு பெரிதும் கைகொடுக்கிறது. அரிசி, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருள்களை அப்படியே விற்பனை செய்யும்போது, விவசாயிகள் பலவிதமான சவால்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.

மதிப்புக்கூட்டிய பொருள்களாக மாற்றினால், அதுபோன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல். கூடுதல் லாபமும் கிடைக்கிறது. இதற்கு கண்முன் சான்றாகத் திகழ்கிறார்கள், இதில் ஏற்கெனவே சாதித்து வெற்றிநடைபோடும் விவசாயிகள் பலர்.

முனைவர் அனந்தராமகிருஷ்ணன்

முனைவர் அனந்தராமகிருஷ்ணன்

அவர்களது வெற்றிக்கதைகளை அவ்வப்போது பசுமை விகடனில் பதிவு செய்து வந்துள்ளோம். அரிசி, தேங்காய், தக்காளி, வெங்காயம், எலுமிச்சை, மா, வாழை, சிறுதானியங்கள் என அனைத்திலும், இன்றைய நவீன யுகத்திற்கு ஏற்ப, பல தரப்பினரையும் ஈர்க்கக்கூடிய வகையில் விதவிதமாக மதிப்புக்கூட்டும் பொருள்களைத் தயார் செய்ய முடியும்.

பயிற்சி இலவசம்

“எந்தெந்த உணவுப்பொருள்களை, எப்படியெல்லாம் மதிப்புக்கூட்டலாம்… இதற்கான சந்தை வாய்ப்புகள்… விரைவில் கெட்டுப்போகக்கூடிய விளைப்பொருள்களை எவ்வாறு பதப்படுத்தி, நீண்ட நாள்களுக்கு தரம் இழக்காமல் பாதுகாக்கலாம்…” பசுமை விகடன் நடத்தும் மதிப்புக்கூட்டும் மந்திரம் ஆன்லைன் பயிற்சி, இதற்கு வழிகாட்டும்.

தஞ்சாவூர் ஐ.ஐ.எஃப்.பி.டி

தஞ்சாவூர் ஐ.ஐ.எஃப்.பி.டி

தஞ்சாவூரில் இயங்கி வரும் இந்திய உணவு பதனீட்டு தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் முனைவர் அனந்தராமகிருஷ்ணன், இப்பயிற்சியை வழங்குகிறார். இந்நிறுவனமானது, உணவுப்பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பத்தில் ஆசிய அளவில் புகழ் பெற்றது. இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்று, ஏராளமான விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்கள் பயன் அடைந்துள்ளார்கள். இந்நிறுவனத்தின் இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன், இத்துறையில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். மதிப்புக்கூட்டும் மந்திரம் என்ற தலைப்பில் பசுமை விகடன் நடத்தும் இந்த நேரலை [ஆன்லைன்] பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இது இலவச பயிற்சி. கட்டணம் கிடையாது.

  • நாள்: 16.07.20 [வியாழக்கிழமை]
  • நேரம்: மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
  • பயிற்சி இலவசம்
  • இதில் கலந்துகொள்ள இந்த லிங்கை https://store.vikatan.com/events/53-pasumai-series/ க்ளிக் செய்யவும்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “பசுமை விகடனின் மதிப்பூட்டல் பற்றிய இலவச பயிற்சி

Leave a Reply to Suganthi B Cancel reply

Your email address will not be published. Required fields are marked *