சூரிய சக்தியால் சாதிக்கும் விவசாயிகள்

சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி, 7 ஏக்கர் நிலத்தில் தக்காளி, மஞ்சள் பயிரிட்டுள்ள விவசாயி,’குறைந்த செலவில் கூடுதல் வருமானம் பெற இது ஒரு நல்ல வாய்ப்பு’ என நம்பிக்கை தெரிவித்தார்.
மின்பற்றாக்குறை என்பது, விவசாயத்தையும், சாகுபடி பரப்பையும் வெகுவாக குறைப்பதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதித்து வருகிறது. இதை சமாளிக்க, குறைந்தளவு நீரைக்கொண்டு அதிக மகசூல் பெறும் திட்டங்களை தோட்டக்கலை அதிகாரிகள் அறிமுகப்படுத்தி, விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

இதேபோல், வேளாண் பொறியியல் துறை, சூரிய மின்சக்தி பம்ப்செட் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி, மின்தடை துயரத்தை அகற்றும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. சோலார் மின்சக்தி திட்டத்தில், நிலையான மின்தகடு முறை, ‘தானியங்கி’ கண்காணிப்பு முறை என, இரண்டு வகையாக அமைத்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தானியங்கி கண்காணிப்பு முறை சூரிய மின்சக்தி பம்ப்செட் திட்டம், தொண்டாமுத்துார் அருகேயுள்ள தேவராயபுரத்தைச் சேர்ந்தவர் கதிரேசன் என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
வேளாண் அதிகாரிகள் பரிந்துரையின்படி, அமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.6 லட்சம் லிட்டர் நீர் இறைக்கப்படுகிறது. இந்நீரை பயன்படுத்தி சீரீய முறையில் விவசாயம் செய்து வரும் கதிரேசன் கூறுகையில்,”மின் பற்றாக்குறையும், மின்தடையும் இப்போது இல்லை. ஏழு ஏக்கர் நிலத்தில் வெங்காயம், மஞ்சள், சோளம், தக்காளி சாகுபடி செய்து வருகிறேன். ஐந்து லட்சம் ரூபாய் செலவிலான இத்திட்டத்துக்கு, 1.17 லட்சம் ரூபாய் பங்கு தொகையாக செலுத்தினேன். ஐந்து குதிரைத்திறன் சக்தி கொண்ட சோலார் மின் மோட்டார் வாயிலாக 7 குதிரைத்திறன் அளவுக்கு தண்ணீர் கிடைப்பது திருப்தியாக உள்ளது,” என்றார்.
வேளாண் பொறியியல் துறை அதிகாரி சங்கரன் கூறுகையில்,”சோலார் மின்திட்டத்தால், தற்போது மின்தடை என்ற பேச்சுக்கு இடமில்லாமல் போயுள்ளது. கோவை மாவட்டத்தில் நிலையான சூரிய மின்சக்தி பம்ப்செட்கள் 19ம், தானியங்கி கண்காணிப்பு சூரிய மின்சக்தி பம்ப்செட்கள்67ம் செயல்பட்டு வருகின்றன. வரும் ஆண்டில் இந்த எண்ணிக்கை, இன்னும் அதிகரிக்கும்,” என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “சூரிய சக்தியால் சாதிக்கும் விவசாயிகள்

  1. Dhanasekaran says:

    Dear sir,

    How to apply solar power setup in my land.. is there any requiements required.. pls send me the details..

Leave a Reply to Dhanasekaran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *