தரிசுநிலத்தில் புளி சாகுபடி

ரகங்கள்: பிகேஎம்1, உரிகம், தும்கூர் மற்றும் ஹாசனூர்

மண் மற்றும் தட்பவெப்பநிலை:

  • மணல் கலந்த மண் இதன் வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.
  • வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.
  • சராசரி மழை அளவு வருடத்திற்கு 500 முதல் 1500 செ.மீ. வரை போதுமானது.
  • மானாவாரியாகப் பயிர் செய்ய ஏற்ற பயிர் ஆகும்.
  • பருவம்: ஜூன் – டிசம்பர்
  • இனப்பெருக்கம்: விதை, ஒட்டுக்கட்டிய செடிகள் மற்றும் மொட்டுக்கட்டுதல

நடவு:

  • 1 மீட்டர் நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்க வேண்டும்.
  • குழிகளில் மேல் மண்ணோடு தொழு உரத்தைக் கலந்து குழிகளில் மத்தியில் செடிகளை நடவேண்டும்.
  • ஒவ்வொரு குழிக்கும் 1.3 சதவீதம் லிண்டேன் மருந்து 50 கிராம் தூவ வேண்டும்.
  • செடிகளை நட்டவுடன் கன்றுகளைக் காற்றிலிருந்து பாதுகாக்க குச்சிகளை ஊன்றி கட்டிவிட வேண்டும்.

நீர்ப்பாசனம்:

  • கன்றுகள் நன்கு துளிர்த்து வளரும் வரை நீர் பாய்ச்ச வேண்டும்.

அறுவடை:

  • நான்காவது வருடத்திலிருந்து காய்க்க ஆரம்பித்தாலும் ஒன்பதாவது வருடத்தில்தான் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • பழங்களை ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல்-மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.

மகசூல்:

  • ஒரு வருடத்திற்கு ஒரு மரத்திலிருந்து 150-200 கிலோ.
  • இதன் அடிப்படையில் தரிசு நிலத்தில் புளி சாகுபடி ஒரு லாபகரமான தொழிலாகும்.

தொடர்புக்கு: எம்.அகமது கபீர், வேளாண்மை ஆலோசகர்,
அக்ரி கிளினிக்,268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர் போஸ்ட், தாராபுரம்-638 657. அலைபேசி எண்:093607 48542.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

4 thoughts on “தரிசுநிலத்தில் புளி சாகுபடி

  1. gugan says:

    என்னுடைய புளியமரம் நன்றாக பூக்கிறது ஆனால் காய்ப்பது இல்லை என்ன செய்யலாம் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *