களைகொல்லி மருந்தும் மரபணு மாற்றபட்ட விதைகளும்

வயல் வெளிகளில் களை செடிகள் வருவது இயற்கை. அவற்றை பிடுங்கி எடுப்பது பரம்பரை பரம்பரையாக வந்த முறை. அமெரிக்காவில், எல்லாம் இயந்திர மயமாகபட்ட விவசாயத்தில், இதற்கு ஒரு வழி தேடினார்கள்.

மொன்சாண்டோ Monsanto நிறுவனம் glyphosate (Roundup) என்ற ஒரு களை கொல்லி கண்டு பிடித்தார்கள்.

ஆனால் இந்த ரசாயன களை கொல்லி வயலில் தெளித்தால், வயலில் உள்ள சோளம், சோயா போன்ற செடிகளும் பாதிக்க படுமே? உடனே, சோளத்தில் உள்ள மரபணுவை மாற்றி களை கொல்லி (Genetically modified for glyphosate resistance) எதிர்ப்பு சக்தியை கொண்டு வந்தார்கள்.
அதாவது, விவசாயிகள், கண்ணை மூடி கொண்டு glyphosate வயலில் தெளிக்கலாம். களை செடிகள் அழிந்து போகும். ஆனால் சோளம் செடிக்கு ஒன்றும் ஆகாது.

ஆனால், இயற்கை என்று ஒன்று இருப்பதை எல்லாரும் மறந்து விட்டார்கள். இயற்கைக்கு மாறாக எதாவது நாம் செய்தல், இயற்கை மிகவும் பலமாக எதிர் தாக்கு  கொடுக்கும்.

இந்த மாதிரியான விஷ சோதனைக்கு எதிராக இயற்கையின் பதிலடி இப்போது அமெரிக்காவில் களைகொல்லி எதிர்ப்பு களை செடிகள் (Herbicide resistant weeds) புதிதாக வந்துள்ளன. இவை glyphosate மருந்திற்கு எதிர்ப்பு கொண்டுள்ளன. அது மட்டும் இல்லாமல், இவை வெகு வேகமாக வளர்கின்றன. எந்த ஒரு மருந்திற்கும் கட்டு படுவதில்லை. அமெரிக்காவில் மில்லியன் ஏகரில் இவை பரவி உள்ளன. இது ஒரு பெரிய பிரச்னையாக உரு எடுத்து உள்ளது.

வயல் வெளியில் பூதாகரமாக வளர்ந்துள்ள களை செடிகளை பார்க்கிறார் அமெரிக்க விவசாயி  Courtesy: USNews
வயல் வெளியில் பூதாகரமாக வளர்ந்துள்ள களை செடிகளை பார்க்கிறார் அமெரிக்க விவசாயி Courtesy: USNews

இதை எதிர்கொள்ள விவசாயிகள் 2,4-D என்ற சக்தி வாய்ந்த களை கொல்லிக்கு மாறினார்.

இப்போது டொவ் (Dow ) என்ற நிறுவனம், இப்போது glyphosate மற்றும் 2,4-D களை கொல்லி இரண்டையும் எதிர்க்க கூடிய புதிய வகை மரபணு மாற்றப்பட்ட விதைகள் உருவாக்கி இருக்கின்றனர்.

இப்படியே இயற்கைக்கு எதிராக ஒரு போரே ஆரம்பித்து விட்டது. மனிதன் செய்யும் மாற்றங்களை எதிர்க்கும் புது வகை களை களும் பூச்சி மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டுள்ள பூச்சிக்களுக்கும் இடையே போர்.
மேலும் மேலும் சக்தியும் side effects கொண்ட இப்படி பட்ட தொழிற்நுட்பம் தேவையா?

நன்றி: wired.com

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “களைகொல்லி மருந்தும் மரபணு மாற்றபட்ட விதைகளும்

Leave a Reply to jesurajan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *