காசு அள்ளித் தரும் கடம்ப மர சாகுபடி

  • மருத்துவ குணம், பென்சில், தீக்குச்சி, காகிதம் தயாரிக்க பயன்படும் வெள்ளை கடம்ப மரத்தை மகசூல் செய்வதன் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டிற்கு பல லட்ச ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
  • ஆந்தோசெபாலஸ் கடம்பா’ என்ற தாவரவியல் பெயரை கொண்டது கடம்ப மரம்.
  • இம்மரத்தின் இலை மற்றும் பட்டைகளில் இருந்து காடமைன், ஐசோகாடமைன், கடம்பைன் போன்ற அல்கலாயிடுகள் தயாரிக்கப்படுகின்றன.
  • இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் குளோரா ஜெனிக் அமிலம் ஈரல் பாதுகாப்பு மருத்துவ குணம் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த மரத்தில் இருந்து அதிக இலைகள் கொட்டுவதால் மண்ணில் அங்கக கரிமவளத்தை கூட்ட உதவுகிறது.
  • கடம்ப மரம், பென்சில் மற்றும் தீக்குச்சி தயாரிப்பு, காகிதம் தயாரிப்பு, வீடுகளின் மேல்தள பலகை மற்றும் தேயிலை பெட்டிகள் செய்யவும் பயன்படுகிறது.
  • இப்பூக்களில் இருந்து நீராவி வடித்தலின் மூலம் கிடைக்கும் தைலம், சந்தன எண்ணெய் உடன் சேர்ந்து வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுகிறது.
  • சாதாரணமாக 10 மீட்டர் உயரம் மற்றும் இரண்டு மீட்டர் சுற்றளவுள்ள அடி மரமும் கொண்டதாக உள்ளது.
  • மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் 23 மீட்டர் உயரமுள்ள மரங்களும் உள்ளன.
  • நடுமரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்த நிலையில், தலைப்பகுதியில் பெரிய பந்து போன்ற தழையமைப் புடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
  • மே, ஜூலை மாதங்களில் பூந்தலைகள் தோன்றிடும்.வெள்ளை கடம்ப மரம் கடல் மட்டத்தில் இருந்து 300 – 800 மீட்டர் உயரம், வருட வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ், வருட மழையளவு 1,600 மி.மீ., உள்ள பகுதிகளில் நன்கு வளரும்.
  • ஆழமான, ஈரமான, நல்ல வடிகால் உள்ள வண்டல் மண் நிலங்களில் மிக வேகமாக வளரும்.
  • மலை அடிவாரங்களில் உள்ள நிலங்களுக்கு ஏற்ற மரமாக கடம்ப மரம் உள்ளது.
  • வளமற்ற மற்றும் மண்ணில் காற்றோட்டம் இல்லாத நிலங்களில் மரம் வளராது.
  • கடற்கரை பகுதிகளில் நடலாம். ஆனால், உப்பு நீர்ப்பகுதிகளில் வளராது.
  • நீர் செழிப்பு மிக்க சதுப்பு நிலங்களில் நன்கு வளரும். எனவே, கிராமங்களில், ஏரிகளின் உட்பகுதியில் உள்ள நிலங்களிலும், ஏரியின் கரையை ஒட்டிய நிலங்களிலும், ஆற்றோர நிலங்களிலும் இம்மரத்தை வளர்க்கலாம்.
  • இம்மரத்தை பென்சில் தொழிற்சாலைக்கு விற்பனை செய்யும் போது, கன அடிக்கு 250 ரூபாய் என ஒரு மரம் 2,750 ரூபாய் வரை விலை போகும்.
  • இதன்படி, 3.25 து3.00 மீட்டர் இடைவெளியில் நடப்பட்ட தோட்டத்தில் ஏக்கருக்கு 400 மரங்கள் இருக்கும்.
  • 10 ஆண்டுகளில் 10 லட்ச ரூபாய் கிடைக்கும். இதன்படி, ஆண்டு வருவாயாக ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் பெறலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “காசு அள்ளித் தரும் கடம்ப மர சாகுபடி

Leave a Reply to சுசி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *