கொள்ளு, கொண்டைக்கடலை சாகுபடி

கொள்ளு, கொண்டைக்கடலை சாகுபடியில் விதைப் பண்ணை அமைப்பதன் மூலம் அதிக வருவாய் பெறலாம் என மாவட்ட வேளாண் துறை தெரிவித்துள்ளது.

கொள்ளு, கொண்டைக் கடலையில் உற்பத்தியைப் பெருக்கி வருவாய் ஈட்ட தருமபுரி விதைச் சான்று உதவி இயக்குநர் வெ.கிருஷ்ணன் கூறும் வழிமுறைகள்:

velan

 

 

 

 

 

 

சாகுபடி முறை :

  • கொள்ளு பயிருக்கு ஏக்கருக்கு 8 கிலோ விதையும், கொண்டைக் கடலைக்கு ஏக்கருக்கு 30 கிலோ விதையும் தேவைப்படுகிறது.
  • கொள்ளு, கொண்டைக் கடலை பயறு விதைகள் 30 செ.மீட்டருக்கு 10 செ.மீ இடைவெளியில் விதைத்து சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற எண்ணிக்கையில் பயிரிட்டு பராமரிக்க வேண்டும்.
  • இதில் கொண்டைக் கடலையைப் பொருத்தவரை பனிக்காலத்தில் வளர்வதால் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் விதைப்பு செய்ய வேண்டும்.
  • அவ்வாறு விதைக்கும் போது உரிய பருவத்தில் பூ பூத்து நல்ல மகசூல் கிடைக்கும்.
  • விதைகள் விதைக்கும் முன் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நிலத்தை புழுதி பட நன்கு உழ வேண்டும்.
  • விதைகளின் மூலம் பரவும் நோய்களான வேர் அழுகல் நோய், வாடல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிலோ விதையுடன் கார்பென்டாசிம் 2 கிராம் அல்லதும் திரம் 4 கிராம் கலந்து பூஞ்சான விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து பயறுக்கு கொடுக்கும் பொருட்டு விதைப்பதற்கு முன்பு ஏக்கருக்கு தேவையான விதையுடன் ரைசோபிம் ஒரு பாக்கெட், பாஸ்போ பாக்டீரியா ஒரு பாக்கெட் ஆகியவற்றை நன்கு ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்து நிழலில் 15 நிமிஷம் உலர வைத்து பின்பு விதைக்க வேண்டும்.
  • பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கவும் அதிகளவிலான காய்களைப் பெறவும் பூக்கும் பருவத்தில் ஒரு முறை மற்றும் காய் பருவத்தில் ஒரு முறை என இரண்டு முறை 2 சத டிஏபி கரைசலை தெளிக்க வேண்டும்.
  • அதாவது 10 லிட்டர் தண்ணீரில் 4 கிலோ டிஏபி-ஐ முதல் நாள் மாலையில் கரைத்து வைத்திருந்து மறுநாள் காலையில் தெளிந்த கரைசலை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் செடிகள் நனைய தெளிக்க வேண்டும்.
  • கொண்டைக்கடலை பயிரில் தூர் பிடிக்கும் பருவத்தில் தாக்கும் காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
  • கொள்ளு, கொண்டைக் கடலையை விதைத்த உடன் அந்த வயல்களை விதைப் பண்ணையாக அமைத்து தரமான விதை உற்பத்தி செய்து வேளாண் துறைக்கு வழங்கினால் உள்ளூர் சந்தை விலையுடன், ஊக்கத்தொகை மற்றும் உற்பத்தி மானியம் சேர்த்து நல்ல விலை வழங்கப்படும் என்றார் வெ.கிருஷ்ணன்.

தற்போது, கொள்ளு, கொண்டைக்கடலை பயிரிடத் தேவையான விதைகள் போதுமான அளவு மாவட்டத்தில் இருப்பு உள்ளன.

இதில் கொள்ளுக்கு பையூர் 1, பையூர் 2 ரக விதைகளும், கொண்டைக் கடலையில் கோ-4 ரக விதைகளும் தேவையான அளவு அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் தங்களுக்கு தேவையான ரகங்களை வேளாண் துறை அலுவலர்களை அணுகி மானிய விலையில் பெற்று விதைப்பண்ணை அமைக்கலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கொள்ளு, கொண்டைக்கடலை சாகுபடி

Leave a Reply to ம.அன்பு முருகன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *