தமிழ்நாட்டில் பேரிச்சை விளைவிக்கும் முன்னாள் பொறியியல் பட்டதாரி

முறையான பராமரிப் பும், உரிய உழைப்பும் இருந்தால், எந்த சாகுபடியிலும் நினைத்த மகசூலை பெற முடியும் என்கிறார், பொறியாளராக இருந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிய இளைஞர் ஹரிபிரசாத்.

துபாய் போன்ற வறட்சி மிகுந்த நாடுகளில் மட்டுமே அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் பேரீச்சையை நம் பகுதியிலும் பயிரிடலாம்; இயற்கை சாகுபடி முறையால் சிறப்பான மகசூலையும் பெறமுடியும் என மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழ்கிறார்.

வெளிநாடுகளில் மட்டுமே உற்பத்தி செய்யும் பொருளை நாமும் சாகுபடி செய்து பார்க்கலாம் என்ற பரிசோதனை முயற்சியில் ஐந்தாண்டு கழித்து வெற்றியும் பெற்றுள்ளார்.

பேரீச்சை சாகுபடிதென்னை மரம் போன்று ஒவ்வொரு மரத்துக்கும், 25 அடி இடைவெளி இருக்கும் வகை யில் குறுக்கு வரிசையாக ஏக்கருக்கு, 80 மரங்கள் வரை நடவு செய்யப்பட்டுள்ளது.

நடவு செய்து இரண்டு ஆண்டுகள் கழித்து பலன் கொடுக்க ஆரம்பிக்கும் மரங்கள், ஐந்தாண்டுக ளில் அனைத்து மரங்க ளும் முழுமையான காய்ப்புக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

பிப்., மாதத்தில் பாளை விடும் மரங்களிலிருந்து, ஜூலை மற்றும் ஆக., மாதத்தில் பேரீச்சை பழம் அறுவடை செய்யப்படுகிறது.

செயற்கை பாலினேஷன்மற்ற பயிர்களை போன்று இயற்கையில் அயல் மகரந்த சேர்க்கை நடைபெறாது என்பதால், செயற்கை முறையிலேயே பாலினேஷன் செய்யப்படுகிறது. மரத்திலிருந்து பாளை வந்த இரண்டாவது நாளில் இருந்து ஐந்து நாட்களுக்குள் செய்ய வேண்டும்.

200 கிலோஇயற்கைமுறை சாகுபடி என்பதால் ஆண்டுக்கு ஒருமுறை, பாளை பிடிக்கும் சமயத்தில் மரத்துக்கு, 10 கிலோ வீதம் மண்புழு உரம் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

தென்னை போன்று வாரம்தோறும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாதம் ஒருமுறை, அரைமணி நேரம் பாய்ச்சினால் போதுமானதாகும்.

ஓராண்டு முழுவதும் தண்ணீரே இல்லை என்றாலும் மரங்கள் பட்டுப்போகாமல் காணப்படும். அடுத்து தண்ணீர் பாய்ச்சும் போது மகசூல் கொடுப்பதற்கு தயாராகிறது.

ஒரு மரத்துக்கு குறைந்தபட்சம், 2 முதல், 14 பாளைகள் வரை வளர்கிறது. இதில் சிறப்பாக காணப்படும் பாளைகள் வைத்துக்கொண்டு மற்ற வை அகற்றப்படும் என் றும், அனைத்துமே தரமானதுடன் இருந்தால் அப்படியே விடப்படும் என்று தெரிவிக்கிறார்.

இவ்வாறு வேலை அதிகம் என்றாலும் முறையான பராமரிப்பும், உரிய உழைப்பும் இருந்தால் மரத்துக்கு, 200 கிலோ வரைக்கும் விளைச்சல் பெறமுடியும் என்கிறார். இயற்கை விவசாயி ஹரிபிரசாத் கூறியதாவது;

  • ஒரே பயிர் சாகுபடி என்ற விவசாயிகளின் சிந்தனையில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் பெரிய சோதனை முயற்சியாக பேரீச்சை தேர்ந்தெடுத்தோம்.
  • வறண்ட நிலப்பரப்பில் வளரும் தன்மை யுடையது என்பதால், நம் பகுதிக்கு ஏற்றவாறு மாறுவதற்கு நான்கு ஆண்டுகள் வரைக்கும் எடுத்துக்கொண்டது.
  • நடவு செய்த ஆண்டு முதல் பலன் கிடைத்து வந்தாலும் இந்தாண்டே கிட்டத்தட்ட, 80 சதவீத மரங்களில் காய்ப்பு வந்துள்ளது.எங்கள் பண்ணையே தமிழ்நாட்டில் இயற்கைமுறையில் பேரீச்சை சாகுபடி செய்யப்படும் பண்ணையாகும்.
  • பேரீச்சை மரங்கள் அதிகபட்சமாக, 80 ஆண்டுகள் வரைக்கும் தொடர்ந்து மகசூல் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
  • ஒரு மரக்கன்று, 3 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சம், 30 ஆண்டுகள் பலன் கொடுத்தாலே செலவு செய்ததைவிட வருமானத்தை எடுத்துவிடலாம்.
  • வீடுகளில் கிடைக்கும் சாணத்தை தினமும் ஒரு மரம் வீதம் தென்னை மரத்துக்கு வைக்கப்படுகிறது.
  • மண்புழு உரம் தயாரித்து மல்பெரி மற்றும் பேரீச்சை மரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. தினமும் சாணம் வைப்பதால் தென்னை மரத்தை சுற்றிலும் மண்புழுக்கள் காணப்படுகிறது. மண்புழுக்கள் இருந் தால் மட்டும் போதும் வேறு எதுவும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
  • வறட்சியை தங்கி, தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிக்கலாம். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் அறிவுரைகளின் படியே நாட்டு மாடுகள் வளர்ப்பு, அதன் மூலம் பஞ்ச கவ்யா, ஜீவாமிர்தம், அமிர்தக்கரைசல் தயாரிக்கப்படுகிறது.
  • அவர் கூறிய விவசாய சாகுபடி முறைகளே பொறியாளரான என்னை விவசாயத்துக்கு அழைத்து வந்தது. இன்ஜினியரிங் வேலையை விட்டு விவசாயத்துக்கு வந்தபோது உறவுகள், நண்பர்கள் உட்பட அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு வந்தது. எனது அப்பா மட்டுமே நம்பிக்கை கொடுத்து விவசாயத்திலும் நிறைவான வாழ்க்கையை வாழமுடியும் என்று கூறினார்.
  • விவசாயம் என்பது விருப்பத்துடனும், கடின உழைப்புடனும் மேற்கொள்ளப்படும் போது ஒருநாளும் நம்மை ஏமாற்றாது. குறிப்பாக, அனைவரும் இயற்கை விவசாயத்துக்கு மாறவேண்டும். இயற்கை முறை சாகுபடியால் மட்டுமே நமக்கும், நமக்கு பின்னால் வரும் சந்ததிக்கும் நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்து கொடுக்க முடியும்.

இளைஞர்களும் அதிகளவில் விவசாயத்தை மேற்கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு, ஹரிபிரசாத் தெரிவித்தார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

4 thoughts on “தமிழ்நாட்டில் பேரிச்சை விளைவிக்கும் முன்னாள் பொறியியல் பட்டதாரி

Leave a Reply to p.sadssivam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *