வளமாக வாழ வைக்கும் வாழை விவசாயம்!

வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்பது பெரியவர்களின் கூற்று. அதற்கு ஏற்ப இரண்டு தலைமுறையாக வாழை விவசாயத்தால் வாழையடி வாழையாக வளர்ந்து வருகிறார் திருச்செந்துார் விவசாயி அற்புதராஜ்.

வளமான வாழை விவசாயம் குறித்து அவர் கூறியதாவது:

  • தந்தை காலத்தில் இருந்தே வாழை விவசாயம்எங்கள் குடும்ப பொருளாதார தேவையை பூர்த்தி செய்கிறது. 5 ஏக்கரில் ஆரம்பித்த விவசாயம் இன்று 30 ஏக்கராக விரிவடைந்துள்ளது.
  • எங்கள் பகுதி செம்மண், கரிசல் மண் பகுதியாக இருப்பதால் மற்ற பயிர்களை விட வாழை நன்றாக வளர்கிறது. வாழைக்கு இதுபோன்ற சத்துள்ள மண் மிகவும் அவசியம்.
  • நாட்டு கருவேல மரங்கள் வளரும் நிலத்தை செப்பனிட்டு விவசாயம் செய்வதால், அதன் தழைகள் நிலத்தில் விழுந்து மக்கி உரமாகிறது.
  • அதனால், வாழை கன்றுகளுக்கு இயற்கையாகவே சத்து கிடைக்கிறது.
  • கால்நடைகள் வளர்ப்பும் இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் என்பதால் இயற்கை உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. வாழை கன்றுகளை ஆந்திரா, தமிழக கிராமங்களில் இருந்து வாங்கி நடுகிறோம்.
  • சொட்டு நீர் பாசனம் இருப்பதால் வறட்சியிலும் வாழை வளர்கிறது.
  • பயிரிட்ட 10 மாதங்களில் வாழை தார்கள் அறுவடைக்கு தயாராகிவிடும். தாய்வாழை செழித்து வளர அதன் கன்றுகளை வெட்டி பராமரிக்க வேண்டும்.
  • நாடு, சக்கை, நேந்திரன், கசிளி, பூலான் செண்டு, செவ்வாழை ரகங்களை பயிரிடுகிறோம். இதில் நாடு, சக்கை, கசிளி வாழை இலை, காய்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு.
  • செவ்வாழை, கோழிக்கூடு, பூலான் செண்டு பழங்கள் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
  • இலை, காய்களை கேரளா, தமிழகத்திற்கு ஏற்றுமதி செய்கிறோம். விழாக்காலங்கள், முகூர்த்த நாட்களில் இலை, வாழை பழங்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது.
  • வாழை விவசாயத்தில் இலை, பூ, காய், தண்டு, நார் என எதுவுமே வீணாகாமல் வருமானம் கொடுக்கும். வாழை என்னை மட்டுமல்ல என்னை சார்ந்த தொழிலாளர்களையும் வாழையடி வாழையாக வாழ வைக்கிறது, என்றார்.

தொடர்புக்கு: 9715605462
– எஸ்.அதிபன் போஸ், மதுரை.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வளமாக வாழ வைக்கும் வாழை விவசாயம்!

Leave a Reply to Kaleel Cancel reply

Your email address will not be published. Required fields are marked *