வாழையில் மஞ்சள் இலைப்புள்ளி நோய்

மஞ்சள் இலைப்புள்ளி நோய்: 
தாக்குதலின் அறிகுறிகள்:

  • வாழையில் ஆரம்பத்தில் இலையின் மேற்புறத்தில் சிறு சிறு வெளிர் மஞ்சள் நிற அல்லது பச்சை நிற புள்ளிகள் தோன்றும்.
  • இப்புள்ளிகள் பின்‌‌‌‌‌பு விரைந்து நீள் வடிவத்தில் பழுப்‌‌பு நிறப் பெரும் புள்ளிகளாக மாறுகின்றன.
  • பின்பு இப்புள்ளிகளின் மையப்பகுதி வெளிர் சாம்பல் நிறமும் அதைச் சுற்றிலும் மஞ்சள் நிற குழி‌ப்பகுதி‌யும் தோன்றும்.
  • இச்‌ சிறு சிறு புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பரவுகிறது. பின் இவை காய்ந்து இலை முழுவதும் வாடிவிடும். இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு வளர்ச்சி பெரிதும் தடைபடுகிறது.
  • விரைவில் இலைகள் காய்தல் மற்றும் இலை உதிர்தல் இந்நோயின் முக்கிய அறிகுறி.
  • பொதுவாக குலை தள்ளும் சமயத்தில் 15-18 இலைகள் மரத்தில் இருப்பது அவசியம். ஆனால் இச்சிகாடகா இலைப்புள்ளி நோயின் விளைவாக வெறும் 15 இலைகள் இருப்பதே அரிதாகிவிடும்.
  • நோய்த்தாக்கம் அதிகம் இருப்‌பின் குலைகள் சிறுத்தும், கோணலாகவும் தென்படும்.இதனால் மரத்தில் காய் பிஞ்சிலேயே பழுத்து விடுகிறது.
வெளிர் மஞ்சள் அல்லது பச்சை நிற புள்ளிகள் நீள் வடிவத்தில் பழுப்‌‌பு நிறப் பெரும் புள்ளிகள் காய்ந்து இலை சிறியதாய் பழங்கள்
நோய்க்காரணி:

  • இந்நோய் மைக்கோஸ்போரைல்லா மியூசிக்கோலா எனும் பூஞ்சையின் கொனிடியா மற்றும் கொனிடய தாங்கிகளால் பரவுகிறது.
  • கொனிடய தாங்கிகள் பாட்டில் வடிவத்தில்‌ கொனிடியாக்களைத் தாங்கிக் கொண்டிருக்கும். கொனிடியாக்கள் பல தடுப்பு இழைகளைக் கொண்டதாக, குறுகியவையாக இருக்கும்.
  • வித்துக் க‌லவைகள் அடர்‌‌ ‌பழுப்பு நிறத்தில், கருமை நிறத்தில், துளைகளுடன் காணப்படும்.
  • அஸ்கோஸ்போர்கள் ஒற்றை இழைகளைக் கொண்டவை. நிறமற்றவை மேற்புற செல்கள் ‌சற்று அகலமாக, எலிப்சாய்டுடன் காணப்படும்.
  • இந்நோய் பரப்பும் கிருமியின் ‌கொனிடியாக்கள் காற்று நீர் மற்றும் உலர்ந்த நோய்த் தாக்கப்பட்ட இலைகளினால் பரவுகின்றது.
  • இந்நோய் நிழற்பாங்கான பகுதிகளிலும், வளம் குன்றிய மண் வகைகளிலும் அதிகம் பரவுகின்றது.
  • நெருக்கமான நடவு, மண்ணில் அதிகக் களைகள் மற்றும் வடிகால் வசதியில்லாத மண் ஆகியவை இந்நோய்த் தாக்குதலைத் தீவிரப்படுத்தும். நோய்க்காரணிப் பூஞ்சாணம் இலையின் அடிப்பாகத்திலுள்ள நுண்ணிய துளைகளின் மூலம் பரவுகிறது.
மைக்கோஸ்போரைல்லா மியூசிக்கோலா கொனிடியா
கட்டுப்படுத்தும் முறை:
உழவியல் முறை:

  • நோய்த் தாக்கப்பட்ட இலைக‌ளை அகற்றி அழிக்கவும்.
  • இடைக்கன்றுகள், களைகளை அவ்வப்போது நீக்கி சுத்தமாக வைக்கவும்.
  • நெருங்கிய இடைவெளி, குறைந்த நடவு முறையைத் தவிர்க்கவும்.
  • சரியான வடிகால் வசதி அமைப்பதால் வயலில் நீர்தேங்காமல் தடுக்கலாம்.

இரசாயனமுறை

  • போர்டக்ஸ் கலவை 1% + ஆலிவித்து எண்ணெய் 2 % சேர்த்துத் தெளிக்கவும்.
  • காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது ஜினப் மருந்தினை எரிபொருள் எண்ணெய் அல்லது வெள்ளை எண்ணெயுடன் சேர்த்து தெளிக்கவும்.
  • கார்பென்டஸிம் 0.1% அல்லது புரப்பிகோனஸோல் 0.1% அல்லது மேன்கோ‌‌‌‌ஷெப் 0.25% அல்லது காலிக்ஸின் 0.1% ஏதேனும் ஒரு மருந்துடன் ஒட்டுந் திரவமான டிப்பால் சேர்த்து 10-15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் ஆரம்பித்ததிலிருந்து இலையின் அடிப்பகுதி‌யில் கரும்புள்ளிகள் தெரிந்த நாளிலிருந்து 3 முறை தெளித்து வரவேண்டும்.
Content Validator: Dr. G.Thiribhuvanamala, Assistant professor, Department of fruits, HC&RI, TNAU, Coimbatore-641003.
Source of Plate:
M.S.Ambawade and G.R.Pathade. 2015. Isolation, characterization and ultra structure of Mycosphaerella musicola-etiological agent of yellow sigatoka isolated from banana. International journal of current microcbiologu and applied sciences. Vol 4 (1), pp.659-671.
source of microscopic image:
J.Henderson and K.Grice. 2008. Mycosphaerella spp. Causing leafspot disease on bananas. Advanced Methods Supplement.  Unviersity of Queensland, pp 16.

நன்றி: தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வாழையில் மஞ்சள் இலைப்புள்ளி நோய்

Leave a Reply to Murugan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *