மாடி காய்கறி தோட்ட திட்டம்

தோட்டக்கலைத்துறையின், மாடி காய்கறி தோட்டத்துக்கு, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், ஈரோட்டிலும் அத்திட்டம் அமலாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் விலைவாசியில், மக்களால் தவிர்க்க முடியாத அன்றாட செலவாக இருப்பவைகளில், காய்கறி முதலிடம் வகிக்கிறது. இதனால், நகர்ப்புறங்களில், வீட்டு மாடி தோட்டத்தில், சொந்தமாக குடியிருப்பு வாசிகளே, காய்கறி பயிரிட்டு, சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும், “மாடி காய்கறி தோட்டம்’ திட்டத்தை, கடந்த, 2013 டிச., மாதம், சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து, மதுரையிலும் செயல்பாட்டுக்கு வந்தது.
இத்திட்டத்தில், தங்கள் வீடுகளில் மாடி காய்கறி தோட்டம் வளர்க்க விரும்புபவர்களுக்கு, தோட்டக்கலைத்துறை சார்பில், 50 சதவீத மானியத்தில், கத்தரிக்காய், தக்காளி, பீன்ஸ், மிளகாய், முள்ளங்கி, கொத்தமல்லி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறி விதைகள், பாலித்தின் பை, உரம் போன்றவை வழங்கப்படுகிறது.
வெறும், 100 சதுரடி பரப்பளவில், காய்கறிகளை நடவு செய்தால், மூன்றே மாதங்களில், விளைச்சல் தரும். இதன் மூலம், அதிகபட்சமாக, 16 கிலோ வரை காய்கறிகளை அறுவடை செய்ய முடியும்.
தேங்காய் நார், 9 வகையான வெவ்வேறு காய்கறிகளின் விதை, உரங்கள், பாலிதின் ஸ்பெரட் சீட், வாட்டர் ஸ்பிரேயர் உள்ளிட்டவை, 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. இவற்றின் மதிப்பு, 2,414 ரூபாயாகும். ஒவ்வொரு பயனாளியும், ஐந்து முறை, இந்த மானிய சலுகையை பெற முடியும் என்பதால், சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில், இத்திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதேநேரம்,  தொடர்ந்து மாடியில் காய்கறி சாகுபடி செய்தால், சுவரில் விரிசல் ஏற்படுவதாக கூறுகின்றனர். இதுகுறித்து, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பிரபு கூறியதாவது:

  • சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில், மாடி தோட்ட திட்டத்துக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. 75 சதவீதம் வரை, அத்திட்டம் அங்கு செயல்பாட்டில் உள்ளது. இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளதால், சொந்தமாக காய்கறி விளைவித்து, பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம், மக்களிடையே அதிகரித்துள்ளது.
  • மாடி காய்கறி தோட்டம் அமைப்பதற்கு முன்பு, டிரைனேஜ் வசதியாக, முறையாக அமைக்க வேண்டும். அதற்கென உள்ள வாட்டர் ப்ரூஜப் பெயிண்ட் அடித்தால், சுவர்களில் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றார்

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “மாடி காய்கறி தோட்ட திட்டம்

Leave a Reply to Churchil bell edison Cancel reply

Your email address will not be published. Required fields are marked *