ஆமணக்கு சாகுபடி

அழகு சாதனங்கள் உற்பத்திக்கு பயன்படும் ஆமணக்கு சாகுபடியில் கோபி விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

 • கோபி வட்டாரத்தில் வாய்க்கால் பாசனப்பகுதியை தவிர்த்து, கிணற்று பாசனம் மற்றும் மானாவாரி நிலங்கள் அதிகளவில் உள்ளன.
 • மானாவாரியில் நிலக்கடலை, கொள்ளு, எள், சோளப்பயிர் போன்றவை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.
 • கோபி, நம்பியூர், கொளப்பலூர், கெட்டிசெவியூர், பள்ளிபாளையம், சிறுவலூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரியில் நிலக்கடலை, கொள்ளு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
 • நிலக்கடலை, கொள்ளுச் செடியில் ஊடுபயிராகவும், கலப்பு பயிராகவும் ஆமணக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை, கொள்ளு ஆகியவை 100 நாட்கள் பயிர்.
 • ஆமணக்கு செடிகள் நன்கு வளர்ந்து காணப்படுகிறது. ஆமணக்கு கொட்டைகள் அழகு சாதனப் பொருள் உற்பத்திக்கும், சித்த மருத்துவத்தில் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.
 • இதனால், ஆமணக்கு விதைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கோபி சுற்று வட்டார விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி செய்து வருகின்றனர்.

கோபி வட்டார வேளாண் உதவி இயக்குனர் பொறுப்பு ஆசைத்தம்பி கூறியதாவது:

 • கோபி வட்டாரத்தில் மானாவாரியில், 200 ஏக்கரில் ஆமணக்கு ஊடுபயிராகவும், கலப்பு பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. டி.எம்.வி., 4, 5, 6 ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. டி.எம்.வி.,- 6 ரகம் ஆறு மாத பயிராகும். டி.எம்.வி., 4, 5 ஆகியவை நான்கு மாதப் பயிர்.
 • ஒரு ஏக்கரில் ஆமணக்கு கலப்பு பயிராக சாகுபடி செய்து இருந்ததால் 200 முதல் 500 கிலோ வரை கிடைக்கும்.
 • ஒரு கிலோ ஆமணக்கு 40 ரூபாய் என விற்பனை செய்தால், ஏக்கருக்கு 8,000 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் லாபம் பெற முடியும்.
 • ஆமணக்கு செடியை பொறுத்தவரை கடும் வறட்சியிலும் பசுமையாக வளரக் கூடிய தன்மை கொண்டது.
 • ஆமணக்கு பயிரிட்டால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
 • கோபி வட்டார விவசாயிகள் எள்ளு, கொள்ளு, நிலக்கடலை போன்ற பயிர்களுடன் ஊடுபயிராக ஆமணக்கு பயிர் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்

Related Posts

ஆமணக்கில் பூச்சிகளை ஒழிக்கும் வழிகள்... ஆமணக்கில் பூச்சிகளை ஒழிக்க விவசாயிகள் அக்கறை காட்ட...
மஞ்சள் செடிகளை பாதுகாக்க ஊடுபயிராக ஆமணக்கு... கள்ளக்குறிச்சியில் மஞ்சள் பயிரின் பாதுகாப்பிற்கு ஆ...
ஆமணக்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்... அழகு சாதனங்கள் உற்பத்திக்கு பயன்படும் ஆமணக்கு (Cas...
ஆமணக்கு சாகுபடி ஆமணக்கு உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா பரப்பள...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *