ராமேஸ்வரம் மல்லி சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, தர்காஸ் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி டி. பத்மநாபன் கூறியதாவது: ராமேஸ்வரம் மல்லி செடிகளை வாங்கி நட்டுள்ளேன். இதில், குண்டு, மெலிது, நடுத்தரம் என, மூன்று விதமான மல்லி ரகங்கள் சாகுபடி செய்யலாம். ஒரு முறை நட்டுவிட்டால், 12 ஆண்டுகளுக்கு மகசூல் கொடுக்கும். அதற்கு ஏற்ப, ஆண்டுதோறும் செடிகளை வெட்டி விட வேண்டும். மல்லி சாகுபடி பொருத்தவரையில், கோடை காலத்தில் செம்பேன் மற்றும் பச்சை நிற பூச்சிகள் மேலும் படிக்க..
Author: gttaagri
களிமண் நிலத்திலும் பயிராகும் பரங்கி ரக கத்திரிக்காய்
பரங்கி ரக கத்திரிக்காய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது: காய்கறி, கீரை உள்ளிட்ட பல வித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீதி காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன். மணல் கலந்த களிமண் நிலத்தில், பரங்கி ரக கத்திரிக்காய் சாகுபடி செய்துள்ளேன். இது, நம்மூர் மண்ணுக்கு அனைத்து வித நாட்டு கத்திரிக்காய்களும் அருமையாக மகசூல் கொடுக்கிறது. மேலும் படிக்க..
testing
[kiasa upivpa=9845409146@paytm” price=”1″ msg=”click to donate!”]
உலக சதுப்பு நில தினம்
உலக சதுப்பு நில தினம் (World Wetlands Day) என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்து கொள்ள கொண்டாடப்படும் தினமாகும்.. இந்த நாள் பிப்ரவரி 2 ஆம் தேதியாகும். உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியே சதுப்பு நிலங்களாகும்.இவை சுற்றுச் சுழலுக்கு பெரிதும் துணை நிற்கின்றன.புலம் பெயர் பறவைகள் பலவற்றிக்கு இவையே புகழிடங்கள். பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு மேலும் படிக்க..
இயற்கை காய்கறிக்கு எப்போதுமே மவுசு
ரசாயன உரம் கலக்காத, பூச்சிமருந்து தெளிக்காத இயற்கை சாகுபடி காய்கறிகளுக்கு மக்களிடத்தில் எப்போதுமே மவுசு உள்ளது என்கிறார் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அழகனேரியைச் சேர்ந்த விவசாயி மாடசாமி. மக்களின் வரவேற்பு குறித்து அவர் கூறியதாவது:மொத்தம் 3 ஏக்கர் உள்ளது. 60 சென்டில் பிச்சிப்பூ, 8 சென்டில் கனகாம்பரம், 15 சென்டில் ரோஜாப்பூ பயிரிட்டுள்ளேன். பூக்களை சக விவசாயிகளுடன் சேர்ந்து துாத்துக்குடி, கோவில்பட்டி பூ மார்க்கெட்டுக்கு அனுப்புகிறேன். அதிலும் உரம், பூச்சிமருந்து பயன்படுத்துவதில்லை. 30 சென்டில் கத்தரிக்காய், 30 மேலும் படிக்க..
ஆகாய தாமரையில் இயற்கை கொசு மருந்து கண்டுபிடிப்பு
தாம்பரம் : ஆகாய தாமரையில் இருந்து இயற்கையாக கொசு ஒழிப்பு மருந்து தயாரிக்கும் முறையை, மாநில வன ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது திட்டமாக செயல்பாட்டுக்கு வந்தால், நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகள் படர்வதை தடுக்க முடியும் என, அவர்கள் கூறியுள்ளனர். நீர்நிலைகள், நீர்வழித்தடங்களில் படர்ந்து கிடக்கும் ஆகாயத்தாமரைகளில் இருந்து, இயற்கையாக கொசு ஒழிப்பு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சியை, மாநில வன ஆராய்ச்சி மைய ஆய்வாளர்கள் செய்து வருகின்றனர். இது குறித்து ஆராய்ச்சியாளர்களுடன் உரையாடியதில் இருந்து:ஆகாயத்தாமரை குறித்து?நீர்நிலைகளில் நிறைந்திருப்பது மேலும் படிக்க..
வருமானம் தருகிறது கோதுமைப் புல் பொடி!
கோதுமைப் புல் வளர்த்து அதை அரைத்துப் பொடியாக்கி, ‘அமேசான்’ வாயிலாக விற்பனை செய்து வரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார் கூறுகிறார் : திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பு படித்து, துபாய், கத்தார், ஒமன் நாடுகளில் வேலைப் பார்த்தேன். வீட்டுத் தோட்டம் அமைத்து கொடுப்பது, பசுமைக் குடில் போட்டுத் தர்றது, பூங்கா உருவாக்குறது, சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது என, பல வேலைகளைப் பார்த்தேன்.ஒரு கட்டத்தில், மனதில் வெறுப்பு ஏற்பட்டது. இந்த வருமானத்தை மேலும் படிக்க..
சோலார் முறையில் விவசாயம்!
ஆற்றுப் பாசனத்தில் ஒருபோக சாகுபடியில் அப்பப்போ லாபம் கிடைச்சது. கிணற்று பாசனத்தில் சோலார் முறைக்கு மாறிய பின் இருபோக சாகுபடி பொய்க்காமல் நடக்கிறது என்கிறார் மதுரை குலமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணன். அவர் கூறியது: வாடிப்பட்டி தாலுகா தண்டலை கிராமத்தில் இரண்டரை ஏக்கரில் நெல் சாகுபடி செய்கிறேன். ஆற்றுப்பாசனத்தில் தண்ணீரை நம்பி சாகுபடி செய்யமுடியாது. எனவே ஜூலையில் ஒரு போக சாகுபடி மட்டுமே செய்து வந்தேன். கிணற்றில் வற்றாமல் தண்ணீர் இருக்கிறது. ஆனால் டீசல் இன்ஜின் மூலம் மேலும் படிக்க..
13000 km Non-stop பறந்த பறவை
Bar-tailed Godwit என்ற பறவை, நம் ஊரில் உள்ள பல நீர் பறவை போன்றே பார்ப்பதற்கு இருக்கும். அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் வாழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க இவை பசிபிக் மகா சமுத்திரம் மீது பறந்து நியூ ஸிலண்ட் செல்கின்றன. இதில் என்ன ஒவ்வொரு ஆண்டும் தான் பறவைகள் குளிர் தேசங்களில் இருந்து நம் நாட்டுக்கு வருகின்றன என்கிறீர்களா ? ஒரு Bar-tailed Godwit காலில் GPS கருவி கட்டி அது எப்படி பறக்கிறது மேலும் படிக்க..
நெல்லுக்கு தேவை நுண்ணுயிர் உரங்கள்
நுண்ணுயிர் உரங்கள் பயிர்களுக்கு தொடர்ந்து சத்துக்களை உற்பத்தி செய்து கொடுப்பவை. நுண்ணுயிர் உரமான அசோஸ்பைரில்லம் தழைச்சத்தை நிலைப்படுத்தும். இதன் மூலம் ஏக்கருக்கு 25 கிலோ தழைச்சத்து கிடைக்கிறது. மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்தை பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் கரைத்து பயிர்களுக்கு தருகிறது. பயிர்களின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு மண்வளம், சுற்றுப்புற சூழ்நிலையும் பாதுகாக்கப்படுகிறது. 25 கிலோ மட்கிய தொழு உரம் அல்லது 25 கிலோ மணலுடன் தலா 2 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கலந்து நடவிற்கு முன்பாக சீராக மேலும் படிக்க..
கால்நடைகளுக்கான ஊறுகாய் புல் தயாரிப்பது எப்படி
சீசனில் அதிகமாக கிடைக்கும் பசுந்தீவனங்களை காற்றுபுகாத முறையில் ஊட்டமூக்கிகளை கலந்து பசுமை மாறாமல் ஊட்டமேற்றி சேமிக்கும் முறை பதனத்தாள் அல்லது ஊறுகாய் புல் எனப்படும்.. மக்காச்சோளம், சோளத்தில் மாவுச்சத்து நிறைந்திருப்பதால் பதனத்தாள் தயாரிப்பதற்கு ஏற்றது. கம்பு நேப்பியர், ஒட்டுப் புற்கள், காராமணி, குதிரை மசால், பெர்சீம் மற்றும் வேலிமசால் போன்ற பயறு வகை தீவனப்பயிர்களை கொண்டும் பதனத்தாள் தயாரிக்கலாம். பயறுவகை தீவனங்கள் 25 முதல் 30 சதவீதம் பூக்கும் தருணத்திலும் சோளம், கம்பு, தானியங்கள் பால்பிடிக்கும் தருணத்திலும் மேலும் படிக்க..
2 ஏக்கர்… 2,63,000 ரூபாய் லாபம் தரும் எலுமிச்சை!
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் இயற்கை முறையில் எலுமிச்சைச் சாகுபடி செய்து வருகிறார். கோவில்பட்டி, குருமலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது ஊத்துப்பட்டி கிராமம். அங்குள்ள தோட்டத்தில் அறுவடை செய்த எலுமிச்சைப் பழங்களைச் சந்தைக்கு அனுப்பும் பணியி லிருந்தவரை ஒரு காலைவேளையில் சந்தித்தோம். “முதல்ல இந்த எலுமிச்சை ஜூஸைக் குடிங்க. உடம்பு கொஞ்சம் குளுந்தாப்புல இருக்கும்’’ எனச் சொல்லி ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றைக் கொடுத்தார். நாம் குடித்த பிறகு, ‘‘ஜூஸ் எப்புடி இருக்கு? நம்ம தோட்டத்துப் மேலும் படிக்க..
கொய்யாப்பழத்தில் விதைகளை குறைக்கும் வழி
குறைந்த முதலீடு செய்து நல்ல லாபத்தை தரக்கூடிய பழவகைகளில் கொய்யாவும் ஒன்று. மழை குறைவான, உப்பு மிகுந்த மற்றும் வளமில்லாத மண், நீர் தேங்கிய நிலம், வறண்ட நிலம் எதிலும் வளரக்கூடியது. ஆண்டில் இரு முறை காய்க்கும். தரை மட்டத்திலிருந்து ஒருமீட்டர் வரை உயரம் வரை கிளைகள் விரியக்கூடாது. பின்னர் 3 அல்லது 4 கிளைகளை சரியான இடைவெளியில் அனுமதிக்கலாம். அடிப்பக்கத்தில் தோன்றும் கிளைகளை நீக்க வேண்டும். இளந் தண்டுகளிலேயே பூப்பதால் செப்டம்பர், அக்டோபர் மற்றும் பிப்ரவரி, மேலும் படிக்க..
எலிகளை கையாள்வது எப்படி
இந்தியாவில் 90 வகை எலிகளும் தமிழகத்தில் 15 வகை எலிகளும் உள்ளன. எனினும் வரப்பெலி எனப்படும் கறம்பை எலி, வெள்ளெலி, புல் எலி மற்றும் சுண்டெலி ஆகியவை பயிர்களை அழிக்கும் முக்கிய இனங்கள். பயிரைத் தாக்கும் எதிரிகளில் நுட்பமான அறிவும், தந்திரமும் கொண்டது எலி. இவை வயல்கள், வீடுகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் ஆண்டுக்கு 70 முதல் 80 லட்சம் டன் உணவுப் பொருட்களை சேதப்படுத்துவதன் மூலம் ரூ.800 கோடி அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. தஞ்சை மேலும் படிக்க..
சிம்ரன் கத்தரி, புல்லட் ரங்கா மிளகாய், சிவம் தக்காளி!
மற்ற தொழில்களைப் போல தான் விவசாயமும். விதைகள் மற்றும் நாற்றுகளை உற்பத்தி செய்யலாம், விளைந்தபின் அறுவடை செய்யலாம், விளைபொருளை மதிப்பு கூட்டி சந்தையில் விற்கலாம். அவரவர் வசதிக்கேற்ப தேர்ந்தெடுத்து கவனிப்பாக செய்தால் வெற்றியும் லாபமும் நிச்சயம் தான். சொந்த தோட்டத்தில் கத்தரி, தக்காளி விளைந்தாலும் மற்ற விவசாயிகளுக்கு குழித்தட்டு நாற்றாங்கால் முறையில் சிம்ரன் கத்தரி, புல்லட் ரங்கா மிளகாய், சிவம், லட்சுமி ரக தக்காளி நாற்றுகளை விற்று லாபம் பார்க்கிறார் மதுரை திருமங்கலம் தங்கலாச்சேரியைச் சேர்ந்த விவசாயி மேலும் படிக்க..
தேவாங்குகளுக்கு காப்புக்காட்டில் விரைவில் சரணாலயம்
“கடவூர் பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காட்டை அரியவகை உயிரினமான தேவாங்குகளுக்கான (Slender Loris) சரணாலயமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். 2016-17 ம் ஆண்டு தேவாங்கு கணக்கெடுப்பின்படி 3,200 தேவாங்குகள் இப்பகுதியில் உள்ளதால், அதனை பாதுகாக்க இந்த காப்புக்காடு பகுதியினை சரணாலயமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று வனத்துறையினரால் கோரிக்கை வைக்கப்பட்டது.ஒரு அடி வரை வளரும் இவை, மரங்கள் மேலே வாழும். மெதுவாகத்தான் நகரும். பூச்சிகள், செடிகள் மேலும் படிக்க..
செவ்வாழை நேரடி விற்பனையில் நல்ல லாபம்!
`விவசாயத்துல எப்பவுமே அகலக்கால் வைக்கக் கூடாது’னு நம்மாழ்வார் ஐயா சொன்னதை மாதிரி, முதல்முறையா 50 சென்ட்ல செவ்வாழைச் சாகுபடியில கணிசமான வருமானம் கிடைச்சிருக்கு. அடுத்த முறை ரெண்டு ஏக்கர்ல சாகுபடி செய்யலாம்னு இருக்கேன்”. வாழையில் பல ரகங்கள் இருந்தாலும் செவ்வாழைக்குத் தனி மவுசு உண்டு. இந்த ரக வாழைக்குச் சந்தையில் எப்போதும் அதிக தேவை இருப்பதால், விற்பனையும் எளிதாகிறது. அந்த வகையில், செவ்வாழையைச் சாகுபடி செய்து கணிசமான வருமானம் பார்த்து வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த இயற்கை விவசாயி மேலும் படிக்க..
உலகத்திலே விலை உயர்ந்த மாம்பழம்!
மத்திய பிரதேசத்தில் உலகின் அதிக விலை உயர்ந்த மாம்பழம் (Miyazaki Mango) கிடைக்கிறது. ஒரு கிலோ 2.70லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. தோட்டத்தில் உள்ள 7 மாம்பலங்களை பாதுகாக்க 4 நாய்கள், 6 பாதுகாவலர்களை அதன் உரிமையாளர் நியமனம் செய்துள்ளார். கடந்த ஆண்டு இந்த மாம்பலத்தை திருடர்கள் திருடி சென்றதால இந்த முறை பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் ஜபால்பூரைச் சேர்ந்தவர் சங்கல்ப் பரிஹார். இவரது மனைவி ராணி. இவர்கள் தங்களுடைய தோட்டத்தில் மாம்பழ கன்றுகளை மேலும் படிக்க..
பூச்சிமருந்து பயன்படுத்தும்போது கவனிக்கவேண்டியவை
பூச்சிமருந்து பயன்படுத்தும்போது கவனிக்கவேண்டியவை பூச்சி (௮) நோய் தாக்குதலை கண்காணித்து தேவைகேற்ப மருந்து தெளிக்கவும். பரிந்துரைக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட மருந்துகளை மட்டும் தெளிக்கவும். மருந்து கலன் மேல் உள்ள பரிந்துரைகளை கவனமாக பின்பற்றவும். பரிந்துரைக்கப்பட்ட அளவு மருந்து மற்றும் தெளிப்பு நீரை உபயோகிக்கவும். தெளிப்பான் மற்றும் தெளிப்பு முனைகளை சரியாக பராமரிக்கவும். கலக்கப்பட்ட மருந்தை உடனடியாக உபயோகிக்கவும். மருந்து தெளிக்கும்போது பாதுகாப்பு உடைகளை அணியவும். தெளிக்கும் மருந்துகளை பற்றிய குறிப்புகளை பதிவு செய்யவும். மருந்துகளை மேலும் படிக்க..
குறைந்து வரும் நம் உடல் தட்பம்
கொரோனா காலங்களில் எந்த ஒரு கடைக்கு சென்றாலும் ஒரு தெர்மோமீட்டர் மூலம் உடலில் ஜுரம் உள்ளதா என்று கண்காணிக்கின்றனர். முதலில் ஒரு நாள் தற்செயலாக பார்த்தேன் – என் ரீடிங் 96.5F இருந்தது. ஏதோ சரி தெர்மோமீட்டர் சரி இல்லை என்று நினைத்தேன். ஆனால், பல இடங்களில் என் ரீடிங் 97F தாண்டவே இல்லை நாம் பள்ளிக்கூடங்களில் 98.6F தான் சரியான உடல் நிலை என்று. சரி ஏதோ சரி இல்லை என்று கூகுளை பண்ணி பார்த்ததில் மேலும் படிக்க..
கடலுக்கு கூட பிடிக்குமா சளி?
மனிதர்களின் உடல்நலம் குன்றினால் சளி பிடிக்கும். கடலுக்கு சளி பிடிக்குமா? வியப்பாக இருக்கிறதா? இது வியப்படைய வேண்டிய ஒன்றல்ல, வேதனை அடைய வைக்கும் விஷயம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். நம் உடலின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பதனால் பெரும்பாலும் சளி ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது சளி தோன்றுவது, உடல் சூடு அதிகரிப்பின் அறிவிப்பு மணியாகிறது. நம் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதற்குத் தேவையான ஆற்றலை உடல் வெப்பமே அளிக்கிறது. ஆனால், அளவுக்கு மீறினால் வெப்பமும் நஞ்சுதான். சளி என்னும் மேலும் படிக்க..
கத்தரியில் ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு
தமிழகத்தில் அதிக பரப்பளவில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றை தாக்கும் நோய்களை ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாண்டால் மகசூல் இழப்பின்றி வெற்றி பெறலாம். கத்தரியில் நாற்றுப்பருவத்தில் அழுகல் நோயால் தண்டு அழுகி சாய்ந்துவிடுகின்றன. வடிகால் வசதி இல்லாத சூழ்நிலையிலும் விதையளவை கூட்டிவிதைப்பு செய்யும் போது இந்நோய் அதிகமாக தோன்றுகிறது. மண் மூலமாகப் பரவும் இந்த நோய் விதைகளை அழுகச் செய்து முளைக்க விடுவதில்லை. வாடல் நோய் தாக்கினால் செடிகளின் அடி இலைகள் பழுத்தும் துவண்டும் தொங்கிக் மேலும் படிக்க..
ஊரடங்கில் உருவாகிய உணவுக்காடு
கொரோனா ஊரடங்கில் பொழுதை வீணாக்காமல் ஜீரோ பட்ஜெட்டில் ஐந்து அடுக்குமுறை உணவுக் காட்டை உருவாக்கி உற்பத்தியை துவக்கி உள்ளார் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு விருவீடு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ். பன்னாட்டு கம்பெனி மேலாளராக இருந்த இவரை, தந்தையின் இறப்புக்குப் பின் வந்த கொரோனா ஊரடங்கு கிராமத்திற்கு இழுத்து வந்தது. இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தார். இதற்காக ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை உலகிற்கு அறிமுகம் செய்த சுபாஷ் பாலேக்கர், இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் ஐந்து மேலும் படிக்க..
எண்ணெய் வித்துக்கள் இயற்கை சாகுபடி
எவ்வளவு சம்பாதித்தாலும் நஞ்சில்லா உணவை சாப்பிட்டால் தான் நன்றாக வாழ முடியும். ஒரு விவசாயியாக நஞ்சில்லா உணவை நானும் என் குடும்பத்தினரும் சாப்பிட நினைத்தோம். இப்போது மற்றவர்களுக்கும் அதையே கொடுக்கிறோம் என்கிறார் மதுரை பாரபத்தியைச் சேர்ந்த சுரேஷ். பி.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். எங்களுக்கு 6 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 2 ஏக்கர் மல்லிகை சாகுபடி செய்கிறோம். கண்மாய் பாசனம் இல்லை. கிணற்றில் தண்ணீர் இல்லை. போர்வெல் சொற்ப தண்ணீரில் மல்லிகைக்கு மேலும் படிக்க..
பப்பாளி இலையில் இருந்து ஸ்டரா தயாரிப்பு
நாம் கூல் ட்ரின்க் குடித்து விட்டு தூக்கி போடும் ஸ்டரா (straw) 500 ஆண்டுகள் வரை இருக்கும். இதுவும் ஒரு வழியில் நெகிழி மாசே. இதற்கு கேரளாவில் இருந்து 2 இளைஞர்கள் மாற்று கண்டு பிடித்து உள்ளார்கள். பப்பாளி இலையின் தண்டில் இருந்து ஸ்ட்ரா தயார் செய்கின்றனர். திருவனந்தபுரம் அருகே வாழும் பாரிக் மற்றும் ஜேக்கப் இதை கண்டு பிடித்து விற்றும் வருகின்றனர். இவற்றை அதிக அளவில் தயார் செய்யும் உற்பத்தி திறனையும் கண்டு பிடித்து உள்ளனர். மேலும் படிக்க..
இன்று இடம் பெயரும் பறவைகள் நாள்
இன்று இடம் பெயரும் பறவைகள் நாள். ஒவ்வொரு வருடமும் பறவைகள் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் அதே பாதையில் செல்கின்றன. GPS எதுவும் இல்லாமல் நம் பேட்டையிலேயே நமக்கு போவது சிரமம்! எப்படி தான் இவை இவ்வளவு அழகாக செல்கின்றன? அறிவியல் இன்றும் பதில் சொல்லாத ஒரு வியப்பு இந்தியா இடம் பெயரும் பறவைகளுக்கு முக்கியமான இடம். வேடந்தாங்கல் போன்ற இடங்களுக்கு பல்லாயிரம் கிலோமீட்டர் பறந்து வந்து, குடும்பம் நடத்தி, குழந்தைகளையும் அழித்து தம் தாய்நாட்டுக்கு செல்கின்றன. வியப்போம், இந்த மேலும் படிக்க..
கடலூர்.. மலைக்க வைக்கும் அரியவகை மரங்கள்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 10 ஏக்கர் பரப்பளவில் அரியவகை மரங்கள், மூலிகைச் செடிகள் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார் விவசாயி ஒருவர் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள ஆதிவராக நல்லூரைச் சேர்ந்த பரமானந்தம் என்ற அந்த முதியவரின் வீடு அடர்ந்த வனம்போல் காட்சியளிக்கும் அவரது பூர்வீக தோட்டத்துக்கு நடுவே அமைந்துள்ளது. தேக்குமரம், செம்மரம், வேங்கை, லவங்க மரம், மோகினி ,ஈட்டி, ருத்ராட்சம் , தேன்அத்தி, பிஸ்தா மரம், பாதாம் மரம், கருங்காலி, திருவோடு, தான்றிக்காய், கடுக்காய் ,நெல்லி மேலும் படிக்க..
தென்னையின் ஊடே வாழை, கோகோ, கொய்யா மரங்கள்
மதுரை டோக்நகரைச் சேர்ந்த விவசாயி இருளாண்டி ராஜா தென்னையில் ஊடுபயிராக வாழை, கோகோ, கொய்யா, பப்பாளி, எலுமிச்சை மரங்கள் நட்டு லாபம் ஈட்டி வருகிறார். ஊடுபயிர் விவசாயம் குறித்து அவர் கூறியதாவது: சோழவந்தானில் பத்து ஏக்கரில் தென்னை மற்றும் வாழை மட்டுமே நடவு செய்துள்ளேன். இங்கே தண்ணீர் பிரச்னை குறைவு தான். 700 மரங்கள் வளர்கின்றன. 2 கிணறுகள் மூலம் பாசனமும், கண்மாய் மூலம் கிணற்றுக்கு தண்ணீரும் கிடைக்கிறது. 7 ஏக்கரில் நெட்டை ரகமும், மீதி குட்டைரக மேலும் படிக்க..
வித விதமான வெளி மாநில ஆடுகள் வளர்ப்பு!
வாழ்க்கைக்குப் பணம் முக்கியம்தான். அதைவிட மனமகிழ்ச்சி மிகவும் முக்கியமல்லவா? நமக்குப் பிடிச்ச வேலையைத் தொழிலாக பண்ணும்போது, மனமகிழ்ச்சி, பணம் இரண்டுமே கிடைச்சிடும். அதைத்தான் செய்து வருகிறார் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள புத்தளத்தைச் சேர்ந்த எஸ்.பி.சுதீந்திரன். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து ஆட்டு இனங்களை வாங்கிப் பண்ணையை உருவாக்கி வைத்திருக்கிறார். வீட்டின் பின்புறம் பரண் அமைத்து, ஒவ்வொரு வகை ஆடுகளுக்கும் தனித்தனியாகக் கொட்டகை அமைத்திருக்கிறார். ஒரு காலைப்பொழுதில் ஆடுகளுக்குக் கடலைக்கொடியைக் கொடுத்துக் கொண்டிருந்த சுதீந்திரனைச் சந்தித்துப் பேசினோம். மேலும் படிக்க..
Sunday post: நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் கலைஞர்கள்
நாதஸ்வரம் மங்கள வாத்தியம். எல்லா கோவில்களிலும், திருமணங்களிலும் நிச்சியம் இருந்து வந்த ஒன்று. இந்த வாத்தியத்தை கற்பது நீண்ட காலம் ஆகும். காலத்தின் சுழற்சியால் இதன் பயன்பாடு குறைந்து வருகிறது. கற்று கொடுப்பவர்கள் குறைந்து விட்டதால் இவற்றை செய்பவர்கள் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. கும்பகோணம் அருகே உள்ள ஊர் நரசிங்கம்பேட்டை. இங்கே 4 குடும்பங்கள் நாதஸ்வரம் செய்கின்றனர். இவர்கள் 5 தலைமுறையாக இந்த கலையை விடாமல் செய்து வருகின்றனர். காலை 10 மணிக்கு செல்வராஜ், 53 வயதான மேலும் படிக்க..
மாடி தோட்ட டிப்ஸ்
`அனுபவங்கள்தான் சிறந்த ஆசான்’னு சொல்லுவாங்க. அப்படி நாம வீட்டுத்தோட்டத்துல இறங்கி, ஒவ்வொரு விஷயமா கத்துகிட்டாதான் நாமளும் சிறந்த வீட்டுத்தோட்ட விவசாயியா மாற முடியும். அப்படி அனுபவம் இல்லாம இறங்கி, 10 மாசத்துலயே சிறந்த விவசாயியா மாறியிருக்காங்க சிவப்பிரியா. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவப்பிரியா ஆடை வடிவமைப்புக் கலைஞர். தன்னோட புது வீட்டுல வீட்டுத்தோட்டத்தை ஆரம்பிச்சு, அதுல கத்துகிட்ட அனுபவங்களை நம்மோட பகிர்ந்துக்கிறாங்க. “எங்க வீடு புதுசா கட்டுன வீடு. 2020-ம் வருஷம் மார்ச் மாதம் குடிவந்தோம். இது மேலும் படிக்க..
உயிரியல்முறையில் பப்பாளி மாவுப்பூச்சிக் கட்டுப்பாடு
உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வகையான மாவுப்பூச்சிகள்தான் பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் (பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ்) எனும் பப்பாளி மாவுப்பூச்சி. இப்பூச்சியின் தாக்குதல் தமிழ்நாட்டில் முதன் முதலாக ஜுலை 2008 ஆம் ஆண்டு கோயமுத்தூர் பகுதியில் பப்பாளியில் கண்டறியப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலும் இப்பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. இப்பூச்சிகள் பப்பாளியை மட்டும் அல்லாது மல்பரி, மரவள்ளி, பருத்தி, கொய்யா, கத்தரி, தக்காளி, செம்பருத்தி, செவ்வந்தி, போன்ற பயிர்களையும், களைச்செடிகளையும் தாக்குகிறது எதிர்காலத்தில் மக்காச்சோளம் போன்ற பிற மேலும் படிக்க..
வீடுகளுக்கு நேரடி விற்பனை சாதிக்கும் என்ஜினீயர் விவசாயி
மூன்றரை ஏக்கர் நிலத்தில் அளவெடுத்தாற்போல ஆங்காங்கே பிரித்து கத்தரி, வெண்டை, தக்காளி, பருப்பு கீரை பயிரிட்டு தேவைக்கேற்ப அறுவடை செய்து விற்பனை செய்கிறார் மதுரை கப்பலுாரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சிவக்குமார். அவர் கூறியதாவது: சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்த்தேன். ஐந்தாண்டுகளுக்கு முன் சொந்தஊருக்கு வந்து விவசாயத்தை ஆரம்பித்தேன். ஆர்கானிக் விவசாயம் தான் இலக்காக வைத்திருந்தேன். ஒவ்வொன்றாக மெல்ல கற்றுக் கொண்டேன். ஒன்றரை ஏக்கரில் குதிரைவாலி, சாமை, வரகு, தினை, காடைக்கன்னி என குறுந்தானியங்கள் ஏதாவது மேலும் படிக்க..
மாடி தோட்டத்தில் செய்ய கூடாத தப்புகள்
மாடித்தோட்டத்துல விவசாயம் செய்றவங்க, ஆர்வக்கோளாறுல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களைப் பக்கத்துல பக்கத்துல நடவு செஞ்சிடுறாங்க. அப்படி செய்யக் கூடாது. ஏன் வைக்கக் கூடாது? வெச்சா என்னாகும்னு ஒரு கேள்வி வரலாம். அதுல ஒண்ணும் பெரிய விஷயம் இல்லீங்க. உதாரணமா, தக்காளி, கத்திரி, மிளகாய் இதுக மூணும் ஒரே தாவரக் குடும்பம். ஒரே அப்பார்ட்மென்ட்ல அண்ணன், தம்பி, அக்கா வீடு இருக்குன்னு வெச்சுக்குங்க. அண்ணன் வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்க நம்ம வீட்டுக்கும் வருவாங்க. அக்கா வீட்டுக்கும் போவாங்கதானே… மேலும் படிக்க..
பனை மரக்காடு வளர்க்கும் திருப்பூர் தம்பதியர்
திருப்பூர் அருகே ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி ஒருவர், 9.18 ஏக்கரில் பனை விதை நட்டு பராமரித்து வருகிறார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வசிப்பவர் டாக்டர் முகுந்தன். கரும்பு வளர்ச்சி கழகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற பூச்சியியல் வல்லுனர். இவரது மனைவி சூரியகலா.இத்தம்பதியர், மாதப்பூரில் உள்ள தங்களது நிலத்தில், 9.18 ஏக்கர் பரப்பில், பனைமர தோப்பை உருவாக்க முன்வந்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:பனையில் இருந்து, நீரா, நுங்கு, வெல்லம், கைவினை பொருட்கள் என, 800 வகையான மதிப்பு கூட்டு மேலும் படிக்க..
ஆந்திராவில் ஜீரோ படஜெட் விவசாயம்
ஆந்திராவில் ஜீரோ படஜெட் விவசாயம் பரவியதால், ரசாயன பூச்சி கொல்லி உபயோகம் குறைந்தது. 2014 இல் 4050 டன் இல் இருந்து, 2019-20 இல் 1579 டன் குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் செலவு குறைந்து உள்ளது மட்டும் இன்றி, அவர்களின் உடல்நலமும் சீரடைந்து உள்ளது. சென்ற ஆண்டு ஆந்திர இதற்காக 3011 கிராமங்களில் இதற்கு திட்டம் செய்துள்ளது. சென்ற வாரம் ஏலூரு ஊரில் புது வியாதி பரவியது. இதற்கு காரணம் நீரில் கலந்த ரசாயனங்கள் தான். மேலும் படிக்க..
மழை நீரினால் பாதித்த நெற் பயிர்களை காப்பது எப்படி
வடகிழக்கு பருவ மழையால் தொடர்மழை காரணமாக நெற்பயிர்கள் அவ்வப்போது மழையால் மூழ்குகின்றன. மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் மகசூல் இழப்பை தவிர்ப்பதற்கு முதல்வழி வடிகால் வசதி அமைப்பது தான். நீரினை வடித்து வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும். சமீபத்தில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர் நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், நாற்றங்காலில் மீதமுள்ள நாற்றுக்களை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும். துார் வெடித்த பயிரினைக் கலைத்து வழித்தடங்களில் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம். முழுவதுமாக நடவு பயிர் மேலும் படிக்க..
உணவுகளின் கார்பன் footprint
நீங்கள் உண்ணும் உணவுகளில் எதில் அதிகம் கார்பன் வெளியிட படுகிறது என்பதை காட்டும் படம். உதாரணத்திற்கு, ஒரு கிலோ பருப்புக்கு 0.9கிலோ வெளியிடப்படுகிறது. புலால் உணவுகளான மட்டன், மாட்டு கறி ஆகியவை மிகவும் அதிகம் கார்பன் தேவை படுகிறது. இந்த கார்பன் மூலம் உலகம் வெப்பம் மாயம் பாதிக்கிறது. பல நாடுகளில் Meatless Monday போன்று புலால் உண்ணுவதை குறைக்க வழி செய்து கொண்டு உள்ளனர். 2021இல் புலால் உண்பதை குறைத்து நம் உடல் நலம் காப்போம். மேலும் படிக்க..
விவசாய பயிர்களுக்கு வேண்டாம் யூரியா தயிர் போதும் காணொளி
விவசாய பயிர்களுக்கு வேண்டாம் யூரியா தயிர் போதும் காணொளி நன்றி: ஈகரை Youtube
ஜீரோ படஜெட் வாழை சாகுபடி பசுமை விகடன் பயிற்சி
ஜீரோ படஜெட் வாழை சாகுபடி பசுமை விகடன் பயிற்சி
ஆண்டுக்கு பெரிய வருமானம் தரும் பெருநெல்லி!
விருதுநகர் மாவட்டம் பாலவநத்தத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது மெட்டுக்குண்டு. இந்தக் கிராமத்தின் தொடக்கத்திலேயே உள்ளது வீரபோஸின் நெல்லித் தோட்டம். நெல்லிக்காய்களைப் பறித்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். ‘‘இயற்கை நெல்லி சாப்பிட்டுப் பாருங்க’’ என ஒரு நெல்லிக்காயைக் கொடுத்தபடியே பேசத் தொடங்கினார். “எங்க கிராமத்துல 10 வருஷத்துக்கு முன்னால வாழை, கரும்பு விவசாயம் செழுமையா நடந்துச்சு. தைப்பொங்கலுக்கு இங்கே இருந்தும் கரும்புக்கட்டுகள் கணிசமா வெளி மாவட்டங்களுக்குப் போகும். தண்ணீர்ப் பற்றாக்குறையால கரும்புச் சாகுபடி நின்னுபோச்சு. இப்போ வாழையை மட்டும்தான் சாகுபடி மேலும் படிக்க..
மூங்கில் சாகுபடி – ஓர் அலசல் ஆலோசனை!
உலகின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, மழை குறைந்து வருகிறது, பருவநிலை மாற்றம், காற்று மாசடைந்து வருகிறது என இந்தப் பூமியை நெருக்கும் பிரச்னைகள் ஏராளம். இவற்றுக்கெல்லாம் ஒற்றைத் தீர்வாக அனைவரும் முன்வைப்பது பூமியைப் பசுமையாக்க வேண்டும் என்பதுதான். அதற்கு முதல் தேர்வாக இருக்கிறது மரம் வளர்ப்பு. அதுவும் அதிக ஆக்ஸிஜனை வெளியிடும் மூங்கிலைப் பெரும்பான்மையோர் தேர்வு செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறார் குரோமோர் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர் என்.பாரதி. அவரிடம் பேசினோம். “அடிப்படையில் நான் ஒரு மேலும் படிக்க..
அதிசயமான போபாப் மரம்
மடகாஸ்கர் தென் ஆப்பிரிக்காவில் அருகில் உள்ள பெரிய தீவு. இங்கே போபாப் (Baobab) என்ற மரங்கள் பிரபலம். இவை மிக பெரிதாக வளர கூடியவை. பல ஆயிரம் ஆண்டுகள் வரை வாழும் திறன் கொண்ட இவை இப்போது அரிதாகி வருகின்றன. Gentle Giants இவை என கூறப்படுகின்றன. இவை ஒரு இடத்தில இருப்பதை பார்த்தல் இவற்றிக்கு மரியாதை சல்யூட் அடிக்க தோன்றும். Tree of life என ஆப்ரிக்காவில் அழைக்கப்படுபவை இவை. 5000 ஆண்டுகள் வரை வாழும் மேலும் படிக்க..
பசுமை விகடன் நடத்தும் பீர்க்கன் ஆன்லைன் பயிற்சி Rs 250
பசுமை விகடன் நடத்தும் ‘ஒரு ஏக்கர் 6,00,000…பிரமாதமான வருமானம்… கொடுக்கும் பீர்க்கன்’ நேரலை ஆன்லைன் பயிற்சி. சிறப்புரை: நாகலிங்கம். முன்னோடி விவசாயி, 22.11.2020 காலை 10மணி முதல் 12 மணிவரை. கீழேயுள்ள லிங்கில் முன் பதிவு செய்யவும்.
7 பேர் வேலையை செய்யும் ஒரே கருவி வீடியோ
மானாவாரி நிலத்தில் விதைகளைத் தனியாகவும், உரத்தைத் தனியாகவும் தூவி வருகின்றனர் விவசாயிகள். இதனால், வேலையாட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் கூடுதல் செலவும் ஆகிறது. இதைத் தீர்க்கும் வகையில், ஒரே நேரத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் விதைகள், உரம் இடும் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர் இரண்டு பொறியியல் மாணவர்கள். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள தோப்புரெட்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் ராஜகுமார் மற்றும் பிரதாப்குமார். நன்றி: பசுமை விகடன்
மண்ணை பொன்னாக்கும் பசுந்தாள், பசுந்தழை உரங்கள்
மண் வளத்தை காப்பதில் பசுந்தாள் மற்றும் பசுந்தழை இயற்கை உரங்களின் பங்கு அதிகம். ஒவ்வொரு பயிர் சாகுபடியின் போதும் பசுந்தாள், பசுந்தழை இயற்கை உரங்களை நிலத்தில் இட வேண்டும். இவற்றை நிலத்தில் விதைத்து மடக்கி உழுவதன் மூலம் உரச்செலவின் தேவை குறையும். தக்கைப்பூண்டு, சணப்பூ, கொளுஞ்சி, மணிலா, அகத்தி, சித்தகத்தி, நரிப்பயறு போன்றவை பசுந்தாள் உரங்கள். வேம்பு, எருக்கு, நொச்சி, கிளரிசிடியா போன்றவை பசுந்தழை உரங்கள். தக்கைப்பூண்டு நீர் தேங்கும் பகுதியிலும் வறட்சி தாங்கியும் வளரும். களர், மேலும் படிக்க..
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் சாதிக்கும் பொறியிலாளர்
பத்தரை ஏக்கர் நிலத்தில் மரம், செடி, கொடிகளுடன் ஆடு, கோழிகளை இயற்கை முறையில் வளர்த்து லாபம் ஈட்டி வருகிறார் வாடிப்பட்டி எர்ரம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஞானப்பிரகாஷ் ராஜா. இயற்கை முறை விவசாயம் குறித்து அவர் கூறியதாவது: பி.இ., சிவில் இன்ஜினியரிங் எம்.டெக் முடித்து விட்டு ரியல் எஸ்டேட் மற்றும் பிசினஸ் செய்து வந்தேன். ஐந்தாண்டுகளுக்கு முன் விவசாயத்தின் மீது ஈடுபாடு வந்தது. நிலம் வாங்கினேன். சாத்தையாறு அணைக்கு அருகில் தான் நிலம் இருக்கிறது. ஆனால் தண்ணீர் வருவது மேலும் படிக்க..
Onon: 5 நாட்களில் 5000 கிலோமீட்டர் நிறுத்தாமல் பறந்த பறவை
மங்கோலியாவை சேர்ந்த ஒனன் என்ற குயிலினப் பறவை ஒன்று பல ஆயிரம் கிலோ மீட்டர்களை ஓய்வின்றி கடந்து இந்தியாவின்றி கடந்து இந்தியாவின் மத்தியப் பிரதேசம் வந்தடைந்துள்ளது. பொதுவாக ஒரு பொருள் தரையில் செல்வதற்கும் புவியின் மேற்பரப்பில் செல்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளன. தரைவழியில் ஒரு தூரத்தை கடப்பதை காட்டிலும் ஆகாய மார்கமாக ஒரு தூரத்தை கடப்பது என்பது மிகவும் கடினமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் காற்றின் வேகம், புவியீர்ப்பு விசை, கொரியாலிஸ் தாக்கம் என பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. மேலும் படிக்க..
கெர்கின்ஸ் வகை வெள்ளரிக்காய் சாகுபடி
கள்ளக்குறிச்சி பகுதியில் வெளிநாடுகளில் ஊறுகாய் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் கெர்கின்ஸ் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில், அதிகளவிலான அரிசி ஆலைகள், கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளதால் நெல், கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.அதேபோன்று, பருவநிலை மாற்றத்திற்கேற்ப வெண்டை, சின்ன வெங்காயம், கத்திரிக்காய், மிளகாய் போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியிலும் விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயத்தில் லாபம் ஈட்டும் வகையில் நவீன மேலும் படிக்க..
விதைநேர்த்தி செய்வது எதற்காக?
மண், நீர், காற்று, விதைகள் மூலம் பூஞ்சாண நோய் மற்றும் பாக்டீரியா நோய்கள் பரவுகின்றன. விதை நேர்த்தி செய்வதன் மூலம் பயிர்களை நோயில் இருந்து பாதுகாக்கலாம். விதை அழுகல், நாற்று அழுகலில் இருந்து பாதுகாத்து விதையின் முளைப்புத்திறனை அதிகரிக்கிறது. என்னென்ன பயிர்களுக்கு எந்த வகையான விதை நேர்த்தி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். மானாவாரி பயிர்களுக்கு உயிர் உரம், பூஞ்சாணகொல்லி மற்றும் விதை கடினப்படுத்துதல் முறைகளில் விதைநேர்த்தி செய்யலாம். உயிர் உரங்கள் மண்ணில் கரையாமல் உள்ள மேலும் படிக்க..
ப்ராய்லர் கோழி மூலம் மனித குலத்திற்கே ஆபத்து!
கோலிஸ்டின் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? இதற்கும் நீங்கள் உண்ணும் பிரியாணிக்கும் உள்ள உறவு எப்படி நம் மனித குலத்தையே அழிக்கும் அளவுக்கு ஆபத்து தெரியுமா? நமக்கு உடம்புக்கு வந்தால் மருத்துவரிடம் செல்வோம். பல வியாதிகள் பாக்டீரியாவால் வருகின்றன. இவற்றை கொல்ல ஆன்டி பயாடிக் மருந்துகள் பயன் படுத்தப்படுகின்றன. Amoxicillin, Azithromycin, Cephalexin, Ciprofloxacin போன்றவை பிரபலமானவை. இவை வேகமாக பலன் கொடுக்கும் மேஜிக் மருந்துகள். இவை இல்லாவிட்டால் மனித குலம் தினமும் ஆயிரக்கணக்கில் உயிர் இழந்து மேலும் படிக்க..
ஆண்டுக்கு ரூ. 5,25,000 வருமானம்! – முருங்கை இலையில் முத்தான லாபம்!
முருங்கை இலை சூப் பவுடர், முருங்கை இலை மாத்திரை, முருங்கை இலை டீ எனச் சமீபகாலமாக வெளிநாடுகளில் முருங்கை இலை சார்ந்த பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இது சார்ந்த உற்பத்தி நிறுவனங்களும் தமிழகத்தில் தற்போது அதிகமாகி வருகின்றன. பராமரிப்பு மற்றும் தண்ணீர் செலவு குறைவாக இருப்பதாலும், நிலையான வருமானம் கிடைப்பதாலும் விவசாயிகள் பலரும் முருங்கை இலை சாகுபடியை நோக்கி நகரத் தொடங்கியிருக் கிறார்கள் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுக்கா காகம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி சுந்தரம். மேலும் படிக்க..
விவசாய மசோதாக்கள் சாதக, பாதகங்களை விளக்கும் விவசாயிகள்
விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதிசெய்யும் விவசாயிகள் ஒப்பந்த மசோதா, விவசாய விளைபொருள் வர்த்தக மேம்பாட்டு மசோதா, அத்தியாவசிய பொருள் திருத்தசட்ட மசோதா… இந்த மூன்று மசோதாக்களும் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டன. ராஜ்யசபாவில் அத்தியாவசிய பொருள் திருத்தசட்ட மசோதா தவிர மற்ற இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மூன்று மசோதாக்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம், நஷ்டம் குறித்து விவசாய சங்கத்தினரிடம் கேட்டோம். அவர்கள் கூறியதாவது: விற்பனைக்கு தடையில்லை;விவசாயிகளுக்கு மகிழ்ச்சி பெருமாள், தேசிய செயலாளர், பாரதிய கிசான் சங்கம், மதுரை: விவசாய மேலும் படிக்க..
செப்டம்பர் பட்டாம்பூச்சி மாதம்!
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு கலர் கலராக பட்டாம்பூச்சி விருந்தினர் வந்து செல்கிறார்கள் தெரியுமா? (Yearly butterfly migration) மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை காலம் ஆரம்பிக்கும் ஜூன் ஜூலை மாதங்களில் பட்டாம்பூச்சிகள் தமிழ்நாட்டிற்கு வருகின்றன. இங்கே மழை காலம் ஆரம்பிக்கும் ஐப்பசி மாதத்தில் இவை திரும்பி செல்கின்றன. பறவைகள் போல இவையும் ஒவ்வொரு ஆண்டும் அதே பாதையில் வந்து செல்கின்றன. திரும்பி தம் ஊருக்கு செல்வதற்கு முன் சேற்றில் உட்கார்ந்து அதில் உள்ள தாது பொருட்களை உண்டு மேலும் படிக்க..
நெற்பயிரும் வாத்தும்!
தாய்லாந்தில் நெல் வயல்களில் வாத்துகளை விடுவது ஒரு பழக்கமாகி இருக்கிறது. இதனால் பல பயன்கள். வாத்துகள், நெற்பயிரில் கண்ணுக்கு தெரியாமல் உள்ள பல பூச்சிகள், நத்தைகளை தேடி பிடித்து தின்று விடுகின்றன.தன் அலகால் மண்ணை நோண்டுவதால், உழுவதற்கு எளிதாகிறது. விவசாயிகளுக்கு பூச்சி மருந்து செலவு மிச்சம். வாத்து வளர்ப்பவர்களுக்கு தீவன செல்வு மிச்சம்! வாருங்கள், தாய்லாந்தில் நெற் வயலில் 10000 வாத்துகள் எப்படி விவசாயிக்கு உதவுகின்றன என்பதை பற்றிய காணொளி
தையல் பறவை கூடு கட்டும் அதிசயம்
தையல் பறவை (Common Tailor Bird) 4 இன்ச் நீளமே இருக்கும் பழுப்பு நிற பறவை. இந்தியாவில் பல சிறிய நகரங்களில் இவற்றை பார்க்கலாம். பூச்சிகள், தேன் ஆகியவற்றை உண்ணும் இவை கூடு கட்டுவது இயற்கையின் ஒரு அதிசயம். வாருங்கள், இந்த பறவை எவ்வளவு அழகாக தையல் முடிச்சு போட்டு கூடு காட்டுகிறது என்பதற்கான காணொளி
கம்பி வலையில் விளையும் கேரட்!
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் ஒரு மலைப்பிரதேசம். சுற்றுலாவுக்குப் பெயர்பெற்ற வயநாட்டில் விவசாயம்தான் பிரதானம். அங்கு புல்பள்ளி என்ற பகுதியில் இயற்கை வேளாண்மை செய்து வரும் வர்க்கீஸ் என்ற விவசாயி, வித்தியாசமான முறையில் கேரட் சாகுபடி செய்து வருகிறார். நேரடியாக நிலத்தில் வளர்க்காமல், கம்பி வலையில் மண் நிரப்பி, அதில் கேரட் வளர்த்து வருகிறார். அவரது தொழில்நுட்பத்தைத் தெரிந்து கொள்வதற்காக வர்க்கீஸிடம் பேசினோம். “நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றரை ஏக்கரில் மேலும் படிக்க..
கற்றாழையில் இருந்து leather
நாடு முழுவதும் தோல் பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ள நிலையில், இரண்டு இளைஞர்கள் கற்றாழையிலிருந்து ‘தோல்’ n உருவாக்கி சாதனை படைத்து உள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக, தோலுக்காகவும், ஃபேஷனுக்காகவும் கொல்லப்படும் விலங்குகள் உயிர்வாழும் நிலை உருவாகி உள்ளது. விலங்குகளின் தோல்களில் இருந்து தயாரிப்படும் பல்வேறு வகையான ஆடம்பர பொருட்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக, சட்டவிரோதமாக விலங்குகள் வேட்டையாடப்படும் கொடுமையும் நிகழ்ந்து வருகிறது. தோல் பொருட்களை உபயோகப்படுத்த மேலும் படிக்க..
கால்நடைகளுக்கு மண்ணில்லா பசுந்தீவனம்
மண் இல்லாமல் தயாரிக்கப்படும் பசுந்தீவன உற்பத்தி விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்போருக்கும் உதவியாக இருக்கும். இந்த முறையில் 7 முதல் 10 நாட்களில் பசுந்தீவனம் உற்பத்தி செய்யலாம். குறைந்த எண்ணிக்கையிலான ஆட்கள், குறைந்த நீரில் தடையின்றி தொடர்ந்து உற்பத்தி செய்யலாம். ஆண்டு முழுவதும் தரம் மாறாமல், சுவை சத்துகள் நிறைந்த கலப்படம் இல்லாத பசுந்தீவனம் கிடைக்கும். 300 சதுர அடி பரப்பளவில் 600 முதல் 1500 கிலோ பசுந்தீவனம் தயாரிக்கலாம். விதைகளை தேர்வு செய்யும் முறை நன்கு காய்ந்த மேலும் படிக்க..
80 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி – சாப்ட்வேர் இன்ஜினியர் சாதனை
கருவேல முள்செடிகள் மண்டிய வறண்ட தரிசு காடு, நீராதாரம் இல்லாத கரம்பு மண், மானாவாரி சாகுபடியை மட்டுமே நம்பியுள்ள பூமியில் விளை பொருட்களை விளைவித்து லாபம் ஈட்டுவது சவாலானது. இப்படி சோதனைகளை சாதனையாக்கியுள்ளார் விருதுநகர் மென்பொறியாளர் கிருஷ்ணகுமார். அமெரிக்காவில் விப்ரோ நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றியவர், தனது குலத்தொழிலான விவசாயம் மீது பற்றுதலால் பணிக்கு விடை கொடுத்து விட்டு விவசாயத்தில் இறங்கினார். தனது ஊரான விருதுநகர் அருகே உள்ள மேலதுளுக்கன்குளம் கிராமத்திற்கு வந்தார். தனது மேலும் படிக்க..
வீரிய கலப்பின வெண்டை சாகுபடி
மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்த வெண்டை, இந்தியாவில் பயிரிடப்படும் முக்கிய காய்கறிப் பயிராகும். உலகளவில் வெண்டை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வெண்டை பயிரிடப்படுகிறது. வெண்டைக்காய் சத்து மற்றும் சுவை மிகுந்த காய் கறி ஆகையால், அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகிறது. 100 கிராம் வெண்டைக்காயில் 1.9 கிராம் புரதம், 6.4 கிராம் கார்போஹைட்ரேட், 1.2 கிராம் நார்ச்சத்து, 0.7 கிராம் தாதுச்சத்து மற்றும் 0.2 கிராம் கொழுப்புச்சத்து அடங்கியுள்ளது. மேலும் படிக்க..
மாப்பிள்ளை சம்பா, மோட்டா சிவப்பரிசி பாரம்பரிய நெல் சாகுபடி
தொடர்ந்து 48 நாட்கள் மாப்பிள்ளை சம்பா அரிசி சாதம் சாப்பிட்டு வந்தால் இளவட்ட கல் துாக்கும் அளவு உடல் வலுப்பெறும். மாடு அடக்கி வெற்றி பெறலாம் என, அந்தக்கால முன்னோர்கள் நிரூபித்துள்ளனர். இதன் பெருமைக்காகவே மாப்பிள்ளை சம்பா அரிசியை சாகுபடி செய்துள்ளேன் என்கிறார் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ். அவர் கூறியது: 2 ஏக்கர் நிலத்தில் கம்போஸ்டர், நுனா, புங்கை, பூவரசு, வேம்பு, எருக்கு தழை சேர்த்து உழவேண்டும். கம்போஸ்டர் உரத்தை நிலத்திலேயே மேலும் படிக்க..
இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடியில் அசத்தும் கல்லூரி மாணவர்
ஆனைமலை அருகே கல்லுாரி மாணவர், இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து அசத்தி வருகிறார்.பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் ரிஷி பிரானேஷ், 20. திருச்சி பாரதிதாசன் பல்கலையில் முதுகலை உயிர் அறிவியல் படித்து வருகிறார். இவர், நடப்பு பருவத்தில், ஆனைமலை இந்திரா நகர் அருகேயுள்ள தனது வயலில், இயற்கை விவசாயத்தை பின்பற்றி, பாரம்பரிய நெல் விதையான மாப்பிள்ளைச்சம்பா ரகத்தை சாகுபடி செய்துள்ளார். கல்லுாரியில் படிக்கும்போதே நெல் சாகுபடியில் ஈடுபடுவதால், விவசாயிகளின் பாராட்டை பெற்றுள்ளார். இயற்கை விவசாயத்தில் மேலும் படிக்க..
70 சென்ட்..ஆண்டுக்கு ரூ.3,15,000.. எலுமிச்சை சாகுபடி சாதிப்பு
ஒரு எலுமிச்சை மரம் என்ன செய்யும்? வீட்டுக்குத் தேவையான எலுமிச்சைப் பழங்களைக் கொடுக்கும். ஆனால், அதுவே ஒரு விவசாயியை லட்சாதிபதியாக மாற்றினால், அவர் அதைக் கடவுளாக எண்ணிக் கும்பிடுவார் அல்லவா? அப்படி எலுமிச்சை மரத்தைக் கடவுளாக எண்ணி, மரத்துக்கு மஞ்சள் பொட்டு வைத்துக் கும்பிட்டு வருகிறார் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி என்.கே.‘பூ’முத்து. தருமபுரி-பென்னாகரம் சாலையில் இருக்கிறது நாகதாசம்பட்டி. அந்த ஊரில் பூ முத்து என்று கேட்டால் நிலத்துக்கு வழி சொல்கிறார்கள். நாம் சென்றிருந்தபோது அவரது மேலும் படிக்க..
பசுமை விகடன் நல்மருந்து மூலிகைப் பயிற்சி
பசுமை விகடன் வழங்கும் ‘நல்மருந்து: தெரிந்த செடிகள், தெரியாத பயன்கள்’ என்ற ஆன்லைன் பயிற்சியை சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு 2020 ஆகஸ்ட் 23-ம் தேதி வழங்க இருக்கிறார். பயிற்சிக் கட்டணம் ரூ.250. கட்டணம் செலுத்த
பசுமை விகடன் ஆடு வளர்ப்பு பயிற்சி
அருமையான வருமானம் தரும் ஆடு வளர்ப்பு’ என்ற நேரலைப் பயிற்சி வருகிற 2020 ஆகஸ்ட் 29-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இது குறித்து பேச இருக்கிறார், காஞ்சிபுரம், ஏனாத்தூர் உழவர் பயிற்சி மைய தலைவர் முனைவர் சி.சௌந்தரராஜன். கட்டணம் Rs 250/ செலுத்த:
இந்தியாவில் மரங்கள் எத்தனை உள்ளன?
உலக நாடுகளில் ஒரு மனிதர்க்கு எதனை மரங்கள் உள்ளன என்பதை விளக்கும் படம். நம் நாடு ஜனத்தொகை அதிகம் என்றாலும், மரங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பது உண்மை. மரங்கள் வெப்பத்தை குறைக்கும், மழை உண்டாகும், தூசு மாசை கட்டுப்படுத்தும்!
வீட்டிலேயே செய்யலாம்! ரசாயன சோப்பு, ஷாம்புக்கு மாற்று
‘வீடுகளில் எளிய முறையில் தயார் செய்யக்கூடிய இயற்கையான கரைசலை பயன்படுத்துவதன் மூலம், ரசாயனம் அடிப்படையிலான சோப்பு, ஷாம்பு போன்றவற்றை தவிர்க்க முடியும். இதன் மூலம், தண்ணீர் மாசு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்,” என்கிறார், கோவையை சேர்ந்த சங்கீதா சுபாஷ். நீர் மாசுபாட்டுக்கு, தொழிற்சாலைகள் மட்டுமின்றி, வீடுகளில் பயன்படுத்தும் ரசாயன அடிப்படையிலான சோப்பு, ஷாம்புகளும் முக்கிய காரணமாக உள்ளன.மாசுபடும் தண்ணீரால், மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.இதை தவிர்க்க, வீடுகளில் இயற்கை முறையில் துாய்மைக்கரைசலை மேலும் படிக்க..
இன்று உலக யானை தினம்.
உலகத்தில் 2 வகை யானைகள் உள்ளன: இந்தியா, தாய்லாந்து பர்மா போன்ற இடங்களில் உள்ள இந்திய யானை. இவற்றில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தம் உண்ட. 20 மாதம் குட்டியை தாங்கி பெற்று எடுக்கிறது யானை. யானை பிறக்கும்போது, அம்மாவை சுற்றி பெண் யானைகள் நின்று கொண்டு யாரும் பார்க்காமல் மறைக்கும் குணம் உண்டு. அம்மா, பெரியம்மா என்று அவற்றுக்கும் உறவு நினைவுகள் உண்டாம்! ஆப்ரிக்காவில் உள்ள ஆப்ரிக்க யானை. இதன் காது பெரிதாக இருக்கும். ஆண் மேலும் படிக்க..
EIA 2020 ஒரு புரிதல்
சுற்றுச்சூழல் ஒழுங்காற்று முறை பலவீனப்படுத்தப்படுமா? சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் சமீபத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை-2020-ன் வரைவை வெளியிட்டது. சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986-ன் கீழ் ஏற்கெனவே வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை 2006-க்குப் பதிலாக இது கொண்டுவரப்பட்டிருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை அரசு இதில் உள்ளடக்க விரும்புகிறது. சுரங்கம் தோண்டுதல், பாசனத்துக்கான அணை, தொழிலகம், கழிவு சுத்திகரிப்பு நிலையம் போன்றவை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அறிவியல்பூர்வமாக மதிப்பிடுவதுதான் சுற்றுச்சூழல் தாக்க மேலும் படிக்க..
காலநிலை மாற்ற அகதிகள்
காலநிலை மாற்றம் (Climate change) மூலம் உலகம் முழுவதும் கோடி கணக்கானவர் சரியான நீர், காற்று இல்லாமல் வேறு இடங்களுக்கு அகதிகளாக (Environmental refugees) செல்வர் என்று சொல்லப்படுகிறது. இது இன்னும் 70 ஆண்டுகளில் நடக்கும் என்று சொல்லப்பட்டாலும் இப்போதே நம் நாட்டிலேயே இதற்க்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுக்காவில் உள்ள மீனாட்சிபுரம் ஒரு காலத்தில் (2011இல்) 1135 பேர் வாழ்ந்து வந்தனர். சிறிது சிறிதாக நீர் கஷ்டம் அதிகரிக்க ஒவ்வொருவராக மேலும் படிக்க..
`சுடாத கல்; வீட்டுக்குள் சூரிய வெளிச்சம்!’ – பசுமை இல்லம்!
உலகம் வெப்பம் ஆவதில் ஸ்மெண்ட்க்கு பெரிய பங்கு உள்ளது. சீமென்ட் செய்வதற்கு அதிகம் வெப்பம் தேவை. இதற்கு அதிகம் நிலக்கரி அல்லது காஸ் உபயோகிக்க படுகிறது. அதே போல் TMT இரும்பு பார்களும் அதிகம் உலகம் வெப்பம் ஆவதற்கு காரணம் ஆகின்றன. இவை எல்லாம் 70 ஆண்டுகள் முன்பு வீடுகள் கட்ட உபயோகிகம் படுத்தவே இல்லை. சீமென்ட், இரும்பு உபயோகத்தை குறைத்து உருவாக்க பட்ட ஒரு பசுமை இல்லம் பற்றிய செய்தி இதோ… இந்தப் பசுமை இல்லத்தின்(டிவைன் மேலும் படிக்க..
ஆமணக்கு கரைசல் செய்வது எப்படி
பூச்சித் தாக்குதல்களால் பயிர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறது. இவற்றை இயற்கை முறையில் அழிக்க நொதித்த ஆமணக்கு கரைசலை பயன்படுத்தலாம். கரைசல் தயாரித்தல் 5 கிலோ ஆமணக்கு விதைகளை நன்கு அரைத்து 5 லிட்டர் நீருடன் கலந்து மண் பானை அல்லது தொட்டிகளில் 10 நாட்கள் மூடி வைக்க வேண்டும். அதன்பின் கலவையிலிருந்து வாசனை தோன்றும். 5 லிட்டர் பானையில் 2 லிட்டர் நொதி வந்த கலவை மற்றும் 3 லிட்டர் நீர் சேர்த்து கலந்து வைத்து கொள்ள வேண்டும். மேலும் படிக்க..
ரசாயன பூச்சி கொல்லி பயன்பாடு ரிப்போர்ட்
ரசாயன பூச்சி கொல்லிகள் மனித உடல் கேடுகளை உண்டாக்குவது பற்றியும், சுற்று சூழலை கெடுப்பது பற்றியும் ஏற்கனவே படித்து உள்ளோம். மத்திய அரசின் ரசாயன பூச்சிக்கொல்லி உபயோக அறிக்கை இப்போது வந்துள்ளது. இதில் இருந்து சில உண்மைகள் தெரிகின்றன ரசாயன பூச்சிகொல்லி பற்றிய பொது அறிவு அதிகம் உள்ள கேரளத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 75% குறைந்து உள்ளது ஜீரோ படஜெட் அதிகம் பரவி உள்ள ஆந்திராவில், கிட்டத்தட்ட பாதியாக குறைந்து உள்ளது பூச்சிக்கொல்லியால் புற்று மேலும் படிக்க..
தென்னை, பாக்கு, ஜாதிக்காய், மங்குஸ்தான், நார்த்தை… ஊடுபயிர் சாகுபடி அசத்தல்!
பழங்களின் அரசியான மங்குஸ்தான், ஜாதிக்காய் சாகுபடியில் அசத்தி வருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ரசூல். தென்னை, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கிறது. அதிலும் ஊடுபயிர் மூலமாக வருமானத்தை அதிகரித்துக்கொள்கின்றனர். தேக்கு, பப்பாளி, மாட்டுத்தீவனம் என ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற வகையில் ஊடுபயிர் மாறுபடுகிறது. தென்னந்தோப்பில் மைக்ரோ கிளைமேட் உருவான பண்ணைகளில் பாக்கு, மிளகு உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்கிறார்கள். அந்த வகையில், தனது தென்னந்தோப்புக்குள் பாக்கு, மிளகு பயிர்களுடன் ஜாதிக்காய், மங்குஸ்தான் பயிர்களையும் சாகுபடி செய்து மேலும் படிக்க..
பழைய மோட்டார் பாகங்களில் புதிய கருவி!
விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில், செம்பனார்கோயில் விவசாயி பழைய மோட்டார் பாகங்களை வைத்து புதிய கருவியை வடிவமைத்து அசத்தியிருக்கிறார். கொரோனா ஊரடங்கால் விவசாயப் பணிகளுக்குத் தேவையான ஆட்கள் கிடைக்கவில்லை. இதனால் மனம் தளராமல் பழைய மோட்டார் பாகங்களைக் கொண்டு ஒரு மினி டிராக்டரை உருவாக்கியிருக்கிறார் நம்பிராஜ் என்ற விவசாயி. அவரின் புதிய கண்டுபிடிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நம்பிராஜன் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலை அடுத்த கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நம்பிராஜ். ஏழாம் வகுப்பு மேலும் படிக்க..
விளைச்சலைக் கூட்டும் சூத்திரம் பஞ்சகவ்யா இலவச ஆன்லைன் பயிற்சி
பசுமை விகடன் வழங்கும் ‘விளைச்சலைக் கூட்டும் சூத்திரம் பஞ்சகவ்யா: தயாரிப்பு முதல் பயன்பாடு வரை’ என்ற நேரலை (ஆன்லைன்) பயிற்சியை இலவசமாக வழங்க இருக்கிறது. முன்பதிவுக்கு:
தெய்வீகமான ஆறுகளை காப்போம்
உலகின் பெரும்பான்மையான நாகரீகம் நதிக்கரையில் தோன்றியதாக வரலாற்று அறிஞர் கூறுவர். சிந்து நதிக்கரையில் அமைந்ததால் நமது பாரதத்திற்கு சிந்து,-சிந்தியா-, இந்தியா என்று ரோம-கிரேக்கர்கள் பெயரிட்டனர். தமிழ்நாட்டின் ஜீவனே ஆறுகள் தான். காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்கண்டதோர் வையை பொருனை நதி எனமேவிய யாறு பலவோடத் திருமேனி செழித்த தமிழ்நாடு என்று பாடுவார் பாரதியார். ஆறுகள் பெயரிலேயே ஊர்கள் அமைந்திருப்பது இந்தியா முழுவதும் உண்டு. பஞ்சாப் – ஐந்து ஆறுகள் உடையது. தலைக்காவேரி – காவிரி பிறக்கும் இடம். மேலும் படிக்க..
சிவகங்கை இயற்கை பண்ணை முறை விவசாயம்
சிவகங்கை மாவட்டம் படமாத்துார் அருகே சித்தாலங்குடியை சேர்ந்தவர் குமரேசன் 37. இவர் துபாயில் பணி புரிகிறார். அங்கிருந்தபடி தனது கிராமத்தில் இயற்கை பண்ணை முறையில் விவசாயம் செய்கிறார். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கருத்துக்களை மையமாக கொண்டு சித்தாலங்குடியில் ‘தமிழ் நிலா’ என்ற பெயரில் 28 ஏக்கரில் ஒருங்கிணைந்த இயற்கை பண்ணை முறை விவசாயம் செய்து வருகிறார். இதில் பூச்சி மருந்து, ரசாயன உரங்கள் ஏதுமின்றி இயற்கை உரங்களை வைத்து சொட்டு நீர் பாசனம் முறையில் விவசாயம் செய்கிறார். மேலும் படிக்க..
அதிக மகசூலுக்கு பாசிப்பயறு ‘கோ 8’: வேளாண் பல்கலை சாதனை
தமிழ்நாட்டில் பாசிப்பயறு சுமார் 1.89 லட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு ஆண்டுக்கு 1.21 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. சராசரி மகசூல் எக்டருக்கு 642 கிலோவாக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையை போக்கும் விதமாக ஒரே சமயத்தில் காய்கள் முதிர்ச்சியடையும் தன்மை கொண்ட பாசிப்பயறு ரகம் உருவாக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கோ 923 – வி.சி. 6040 ஏ என்ற ரகங்களை ஒட்டு சேர்த்து தனி வழி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டது. மேலும் படிக்க..
ஜீவாமிர்தத்தில் செழிக்கும் விவசாயம்
இயற்கையை உற்றுப்பார்; அது மனிதருக்கு விவசாயம் என்ற பாடத்தை கற்றுத்தரும்,” என்பது நம்மாழ்வாரின் கூற்று. அவர் கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக, சிவகங்கை அருகே பனையூரில் எம்.பில்., பட்டதாரி பெண் பி.ஜெயலட்சுமி, இயற்கை விவசாயத்தில் சாதனை படைக்கிறார். மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த இவர், சிவகங்கையில் 2.69 ஏக்கரில் சொட்டு நீர் பாசன முறையில் சம்பங்கி பூக்கள் சாகுபடி, பாரம்பரிய நெல் ரகமான பூங்கன், சீரக சம்பா நெல் சாகுபடி, மூலிகை செடிகளால் வேலி, அத்தி, முலாம்பழம், பலா, நாட்டு மேலும் படிக்க..
உலகம் வெப்பமயப்படுவதால் நடக்கும் விசித்திரமான நடப்புகள்
உலகம் வெப்பமயப்படுவதால் எத்தனையோ விசித்திரமான நடப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. இவற்றில் ஒன்றை பார்ப்போமா? சுவிற்சர்லாந்தில் 1966 ஆண்டில், இந்தியாவில் இருந்து லண்டன் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் பிலைட் 101 ஐரோப்பாவில் மிக உயர்ந்த மலையான மவுண்ட் பிளாங்க் மீது இருட்டில் மோதியது. இதில் பயணம் செய்த எல்லாரும் இறந்தனர். பஸ்ஸோன்ஸ் என்ற பனி ஆறில் மோதிய இந்த விமானத்தின் பாகங்கள் கிடைக்க வில்லை. 4000+ மீட்டர் மேல் உள்ள இந்த இடத்தில சென்று மேலும் படிக்க..
118 குறுங்காடுகள் – டெல்டாவைக் குளிரவைக்கும் புதிய முயற்சி
தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால், பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களில் 10 லட்சம் சதுரடியில் குறுங்காடுகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது, டெல்டா மாவட்ட ரோட்டரி சங்கம். கஜா புயலில் லட்சக்கணக்கான மரங்களை இழந்து, சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள டெல்டாவுக்கு இது வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். இந்தியாவில் செயல்படும் ரோட்டரி சங்கங்கள், இதுவரை கல்வி, பொது சுகாதாரம், மருத்துவம், உலக அமைதி போன்றவைகளில் கவனம் செலுத்தி அதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில்தான் டெல்டா மாவட்ட ரோட்டரி, மேலும் படிக்க..
இன்சுலின் செடி எனப்படும் சர்க்கரைக் கொல்லி சாகுபடி
இன்சுலின் செடி என்று சொல்லப்படும் சர்க்கரைக் கொல்லி அல்லது சிறுகுறிஞ்சான் தமிழகத்தில் வேலிகள், முட்புதர் காடுகளில் பரவலாக வளர்கின்றது. அதிகம் மருத்துவ குணங்கள் இருப்பதால் இதன் நுனி முதல் வேர் வரை அனைத்தும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இவை, சர்க்கரை நோய்க்கு எதிரான ஒரு முக்கிய மூலிகையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பீஹார் காடுகளில் பரவலாக காணப்படுகிறது. மண் மற்றும் காலநிலை எல்லா மண் வகை மற்றும் எல்லா பகுதிகளிலும் இவை வளரும். செம்மண் மேலும் படிக்க..
சிவப்பு கொய்யா சாகுபடி நிறைந்த லாபம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயோத்திபட்டியை சேர்ந்தவர் அரசு. பட்டப் படிப்பு முடித்து விவசாயத்தில் ஆர்வம் கொண்டார். சிவப்பு கொய்யா சாகுபடியில் கவனத்தை செலுத்தினார். இயற்கை உரம், இயற்கை பூச்சிக்கொல்லியை பயன்படுத்தியதால் நல்ல மகசூல் கிடைத்தது. அரசு கூறியதாவது: சந்தைப்பட்டி வகுரணியில் தோட்டம் உள்ளது. குறைந்த தண்ணீரை பயன்படுத்தி சிவப்பு கொய்யா சாகுபடியில் ஈடுபட்டேன். இதற்காக விருதுநகரில் இருந்து தைவான் பிங்க், அர்க்காகிரண் வகை கொய்யா கன்றுகள் வாங்கி நடவு செய்தேன். ஒன்றரை ஏக்கரில் ஏழு அடி மேலும் படிக்க..
700 வெளிநாட்டுப் பழ மரங்கள்.. வித்தியாச விவசாயம்!
‘அமேசான் காடுகளில் மட்டுமே வளரும் அரியவகை தாவரங்கள்’ என்ற வார்த்தைகளை விளம்பரங்களில் அடிக்கடி கேட்டிருப்போம். அந்தக் காடுகளில் மட்டுமே விளையும் மரங்கள் பலவற்றை தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார், ஹரி முரளிதரன். நம் நாட்டில் காணக்கிடைக்காத, சாகுபடி செய்யப்படாத அரியவகை பழ மரங்கள் பலவும், கேரளாவிலுள்ள இவரின் தோட்டத்தில் செழிப்பாய் வளர்கின்றன. பச்சைப்பசேலென காட்சியளிக்கும் தோட்டத்தில், பல வண்ணங்களில் பழங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. காடு போல காட்சியளிக்கும் தனது தோட்டத்தை, கடந்த 10 ஆண்டுகளாகக் கட்டமைத்துவருகிறார் மேலும் படிக்க..
பயிர் சாகுபடியில் நூற்புழுப் பாதிப்பு சமாளிப்பது எப்படி
பயிரில் பூச்சிகளின் சேதத்தைப் போல் மறுபுறம் நூற்புழுக்களால் ஏற்படும் சேதத்தையும் அவற்றின் அறிகுறிகளையும் பற்றிப் பார்ப்போம். இந்நூற்புழுக்களால் பயிரில் 13 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நூற்புழுக்கள் பூமியில் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக வியாபித்துள்ளது. கடல் மட்டத்துக்குக் கீழும் உயரமான மலை உச்சி வரையிலும் அதிக வெப்பம் உள்ள பகுதிகளிலிருந்து அதிகப் பனிப்பொழிவு உள்ள நிலங்களிலும் இந்நூற்புழுக்கள் பரவியுள்ளன. தரிசு நிலத்திலும் சாகுபடிக்கு ஏற்ற விளைநிலத்திலும் இந்நூற்புழுக்கள் காணப்படுகின்றன. இவை கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய மேலும் படிக்க..
முளைப்பாரி பசுந்தீவனம்
தமிழக கோயில் திருவிழாக்களில் முளைப்பாரி எடுத்து சென்று ஆற்றில் இடுவது வழக்கம். பல ஆண்டுகளுக்கு முன்பே முதாதையர் விட்டு சென்ற இந்த உத்தி மூலம் நம்மால் பல வித தானியங்களை முளைக்க வைத்து பசுந்தீவனமாக மாற்றலாம். நீர்ப்பற்றாக்குறையால் அதிக பரப்பில் சாகுபடி செய்ய இயலாத இடங்களில் மட்டுமல்ல, வீட்டின் மொட்டை மாடியில் வளர்க்கவும் இந்த உத்தியை கையாளலாம். வெள்ளை மக்காச்சோளம், ராகி, பார்லி, கோதுமை முதலிய தானியங்களை ஊற வைத்து ட்ரே’ முறையில் பரப்பி பூவாளி வைத்து மேலும் படிக்க..
பூகம்பத்தை முன்னே அறியும் மிருகங்கள்
பூகம்பங்கள், நில அதிர்வுகள் மூலம் ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் பல உயிர்கள் பலி ஆகின்றன. பூகம்பங்கள் வருவதை முன்னவே அறிய பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இப்போது ஜெர்மனியில் ஒரு ஆய்வு மூலம், மிருகங்களுக்கு பூகம்பம் வருவதற்கு முன்பே அவற்றுக்கு தெரிகிறது என்று நிரூபிக்க பட்டுள்ளது. இத்தாலியில் நில நடுக்கம் அதிகம் வரும் இடங்களில் ஆடு மாடு மற்றும் நாய் பூனை ஆகியவற்றை சென்சார் மூலம் ஆராய்ச்சி செய்தலில்,பூகம்பம் 2வருவதற்கு 20 மணி முன்பே மேலும் படிக்க..
`நீங்களும் அமைக்கலாம் மாடித்தோட்டம்’ பசுமை விகடன் ஆன்லைன் பயிற்சி
ஆரோக்கியத்துக்கு அடிப்படையாக இருப்பது நல்ல சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள். இன்றைக்குச் சந்தைக்கு வரும் பெரும்பாலான காய்கறிகள் பூச்சிக்கொல்லி விஷம், ரசாயனங்கள் பயன்படுத்திச் சாகுபடி செய்து விளைவிக்கப்படுபவையே. நாடு முழுவதும் இயற்கை விவசாயம் செய்தால் நஞ்சில்லாத காய்கறிகள் கிடைக்கும். ஆனால், அது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. இயற்கையான காய்கறிகளை விளைவிக்க கைவசம் இருக்கிற எளிமையான தீர்வு, வீட்டில் விவசாயம் தொடங்குவதுதான். மாடியோ வீட்டைச் சுற்றி இருக்கும் காலியிடமோ எங்குவேண்டுமென்றாலும் தோட்டம் அமைக்க முடியும். தோட்டம் அமைப்பதற்கு அடிப்படையானது மேலும் படிக்க..
கால்நடைகளுக்கான மூலிகை வைத்தியம்: பசுமை விகடன் ஜூம் வெபினார்
வீட்டின் அஞ்சறைப் பெட்டிகளில் உள்ள மளிகைப் பொருள்களையும்,சுற்றுப்புறங்களில் கிடைக்கும் மூலிகைகளையும் பயன்படுத்தி,கால்நடைகளைப் பாதுகாக்க முடியும். விவசாயிகள் தங்கள் வீட்டின் அஞ்சறைப் பெட்டிகளில் உள்ள மளிகைப் பொருள்களையும், சுற்றுப்புறங்களில் கிடைக்கும் மூலிகைகளையும் பயன்படுத்தி, தங்கள் கால்நடைகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இவரது ஆலோசனைகளால், தமிழ்நாட்டில் காப்பாற்றப்பட்ட கால்நடைகள் ஏராளம். விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை, தங்களின் வீட்டின் குடும்ப உறவாகவே நேசிக்கிறார்கள். வருமானம் ஈட்டித் தரக்கூடிய முக்கிய ஆதாரமாகவும் இவைகள் விளங்குகின்றன. இவைகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும்போது, விவசாயிகள் செய்வதறியாது மேலும் படிக்க..
பசுமை விகடனின் மதிப்பூட்டல் பற்றிய இலவச பயிற்சி
அரிசி, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், காய்கறிகள், பழங்கள் என அனைத்திலும், இன்றைய நவீன யுகத்திற்கு ஏற்ப, பல தரப்பினரையும் ஈர்க்கக்கூடிய வகையில் விதவிதமாக மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தலாம். விவசாயிகள், கடும் உழைப்பையும், முதலீட்டையும் செலுத்தி விளைபொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால், தங்களுக்கு அதற்கேற்ற லாபமோ, உத்தரவாதமான வருமானமோ கிடைப்பதில்லை என்பது அவர்களது ஆதங்கமாக உள்ளது. இதற்கு தீர்வு தரும் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது, மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பம். மதிப்புக்கூட்டுதல் சமீபகாலமாக, இத்துறையானது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் படிக்க..
தடை செய்ய படவுள்ள ரசாயன பூச்சிக்கொல்லிகள்
தடை செய்ய படவுள்ள ரசாயன பூச்சிக்கொல்லிகளின் சிலவற்றை பற்றிய செய்தி தொகுப்பு
ரசாயன பூச்சி கொல்லிகளை தடை பற்றிய வெபினார்
மத்திய அரசு 27 ரசாயன பூச்சிக்கொல்லிகளை தடை செய்ய முடிவு செய்துள்ளது. இவை பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள மிகவும் அழிவு ஆக்கும் ரசாயனங்கள். ஆனால் தடையை எதிர்த்து பூச்சிக்கொல்லி தரியாரிப்பவர்கள், வெளி நாட்டு உற்பத்தியாளர்கள் போர்க்கொடி எடுத்தார்கள். இதை பற்றிய விஷயம் அறிந்த கவிதா, தேவிந்தர் ஷர்மா, தணல் இயக்கத்தை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் வெபினார் ஒன்றை நடத்துகிறார்கள். ஜூம் காலில் சேர்ந்து இந்த பூச்சி கொல்லிகளால் விளையும் தீங்குகள், அவற்றின் மாற்றுக்கள், பொது மேலும் படிக்க..
இயற்கை விவசாயி சிவகங்கை ஜெயலெட்சுமி!
இயற்கை விவசாயம், உயிர்வேலி, தற்சார்பு முறையில் விவசாயம் செய்து வழிகாட்டுகிறார் சிவகங்கை ஜெயலெட்சுமி. இயற்கை முறை, தற்சார்பு, உழவில்லா விவசாயம், உயிர் வேலி என்று பாரம்பர்யத்தைப் பின்பற்றி தனது 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து அசத்தி வருகிறார் இயற்கை விவசாயி ஜெயலெட்சுமி. சிவகங்கை மாவட்டம், பனையூர் கிராமத்தில் உள்ள அவரது விவசாய நிலத்திற்கு ஒரு காலை வேளையில் சென்றோம். இயற்கை விவசாயி ஜெயா “நான், எம்.ஏ.எம்.பில் படிச்சுட்டுப் பல்வேறு தனிப்பட்ட சிறப்பு கோர்ஸ்களும் படிச்சுருக்கேன். மேலும் படிக்க..
வெளிநாட்டு வேலை டு இயற்கை விவசாயம்!
`ஊருக்குக் கடைசி உலகம்பட்டி’ என்ற சொலவடை செட்டிநாடு நகரத்தார் மத்தியில் பிரபலம். `ஊருக்குக் கடைசியா உள்ள உலகம்பட்டி ஊரிலா பொண்ணு எடுக்கப் போற’ என்று கிண்டல் அடிப்பார்களாம். இந்த உலகம்பட்டி கிராமத்தில் விவசாயத்தில் நல்ல லாபம் பார்த்து வருகிறார் சிவராமன் என்பவர். சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் உள்ளது உலகம்பட்டி கிராமம். இப்பகுதியில் பலரும் மண்ணை மலடாக்கும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தன்னைத் தனித்துக் காட்டும் வகையில் இயற்கை விவசாயத்தில் வெற்றி நடைபோடுகிறார். மேலும் படிக்க..
தென்னை மரத்தில் வெள்ளை ஈக்கள் தொல்லை போக்க..
தென்னை சாகுபடி செய்யும் விவசாயி கள் முன்னெச்சரிக்கைக்காக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான மேலாண்மை முறைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். அண்மைக்காலமாக தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ என்னும் பூச்சியின் தாக்குதல், கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர் மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் காணப்படுகிறது. வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிற முட்டைகளை, சுழல் வடிவில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இம்முட்டைகள் மெழுகுப் பூச்சுடன் மேலும் படிக்க..
“நாலு பனைமரத்தை நட்டுட்டுப் போங்க… உங்க சந்ததி நல்லா இருக்கும்!”
“என்னோட பனங்காட்டுக்குள்ள இருக்க ஒவ்வொரு பனையும் எனக்கு எங்க ஆத்தா மாதிரிங்க. 90 வருஷமா எங்களுக்காக உழைச்சுருக்கு. இன்னும் ரெண்டு தலைமுறைக்கு எங்க புள்ள குட்டிகளோட இருக்கும். எங்க சந்ததிக்கு நாங்க சேர்த்து வைக்கிற சொத்துனா அது பனைமரங்கள்தான். `புள்ளைங்க காப்பத்தலனாலும், பனை காப்பாத்தும்’னு ஒரு பழமொழி சொல்லுவாக. ஆனா இன்னைக்கு பனை மரத்தைக் காப்பத்தவே யாரும் இல்ல” – பனை மரத்தைக் கட்டியணைத்தபடி பேசத் தொடங்கினார் பாண்டியன். விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூரில் பனை மரங்களைப் பராமரித்து, மேலும் படிக்க..
வறட்சியில் பயன் தரும் பயிர்கள்
பயறு வகைகள் பொதுவாகக் குறுகிய கால வயதுடையவை. அதிகப் பாசன நீர் தேவைப்படாதவை. பயறு வகையில் அதிக அளவில் புரதச்சத்து இருப்பதால் உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றன. பயறு வகைச் சாகுபடியில் சராசரியாக ஒரு ஏக்கருக்கு 544 கிலோ மகசூல் பெற முடியும். ஒரு ஏக்கரில் 800 கிலோ மகசூல் எடுக்கப் பல்வேறு திட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோபி வட்டாரத்தில் ஒரு ஏக்கரில் 730 கிலோ மகசூல் எடுத்து ஒரு விவசாயி மேலும் படிக்க..
27 ரசாயன பூச்சி கொல்லிகளை தடை விதிக்க முடிவு
கொரோனா வைரஸ் முழு வீச்சு சென்று கொண்டு இருக்கும் பொது, மத்திய விவசாயம் அமைச்சகம், 27 ரசாயன பூச்சி கொல்லிகளை தடை செய்ய முடிவு செய்து உள்ளது. இதற்கு எதிர்க்க விருப்பம் உள்ளோர் அமைச்சரவைக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்க பட்டுள்ளது. தடை செய்ய திட்டம் இடப்பட்டுள்ள ரசாயன பூச்சி கொல்லிகள் விவரம்: 2,4-D, acephate, atrazine, benfuracarb, butachlor, captan, carbendazin, carbofuran, chlorpyriphos, deltamethrin, dicofol, dimethoate, dinocap, diuron, malathion, mancozeb, மேலும் படிக்க..
ஒரே இடத்தில் உளுந்து, வெண்டை, தக்கைப்பூண்டு சாகுபடி சாதனை
மூன்றரை ஏக்கர் நிலத்தில் உளுந்து, வெண்டைக்காய், தக்கைப்பூண்டு என கிணற்று நீரை பயன்படுத்தி அடுத்தடுத்து சாகுபடி செய்து கோடையிலும் விவசாயத்தில் குன்றாத வருமானம் ஈட்டி வருகிறார் மதுரை திருப்பாலையை சேர்ந்த ஆசிரியை பிரசன்னா. இவர் எம்.எஸ்ஸி., (இயற்பியல்) மற்றும் பி.எட்., பட்டங்கள் பெற்று திருப்பாலை நல்லமணி அரசு உயர் நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மதுரை அருகே வீரபாண்டியில் தனது மூன்றரை ஏக்கர் விவசாய நிலத்தில் ஒன்றரை ஏக்கரில் உளுந்து விதைப்பண்ணை, அரை ஏக்கரில் மேலும் படிக்க..
வெட்டுக்கிளிகளின் எதிரி!
வெட்டுக்கிளிகள் (Locust invasion) என்றாலே அலறிக்கொண்டிருக்கிறது உலகம். ஆனால், வெட்டுக்கிளிகளுக்கு இவரைக் கண்டால் மரண பயம். வெட்டுக்கிளிகள் மட்டுமல்ல… பருந்து உள்ளிட்ட பறவைகளுக்கும் இவர் என்றால் பயம் தான். இனப்பெருக்க காலத்தில் இவரது எல்லைக்குள் எவரும் நுழைந்து விட முடியாது. அது எவ்வளவு பெரிய ஆளானாலும் இவரது எதிர்ப்பைக் கண்டு தெறித்து ஓடி விடுவார்கள். இந்தப் பாதுகாப்பை நம்பி, மற்ற பறவைகள் இவர் கூடு அருகே தமது கூடுகளை அமைத்துக்கொள்ளும். இவர் தனது இரையைப் பிடிக்கச் செல்லும் மேலும் படிக்க..
பசுமை தமிழகம் டெலிக்ராம் மூலம் படிப்பது எப்படி
பசுமை தமிழகம், ஈமெயில், த்விட்டர், மொபைல் ஆப் மூலம் இதுவரை படிக்க முடிந்தது. இப்போது டெலிக்ராம் மூலமாகவும் படிக்கலாம். இனி வரும் இடைவுகள் உங்களை டெலெக்ராமில் வந்து அடையும். இதில் சேர, இங்கே கிளிக் செய்யவும். உங்கள் ஆதரவுக்கு நன்றி அட்மின்
கத்திரிக்காய் வற்றலில் சாதித்த விவசாயி
அதிகம் விளைந்த கத்திரிக்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தமிழக விவசாயிகள் பலர் காய்கறிகளை வீதியில் கொட்டிச் செல்வதை தொலைக்காட்சியில் கண்டு அதிர்ச்சியுற்றேன். இயற்கை முறையிலான சாகுபடியில் விளைவித்த கத்தரிக்காய் கொரோனா ஊரடங்கால் விற்பனை ஆகவில்லை. இதையடுத்து, அதை வற்றலாக்கி மதிப்பு கூட்டி விற்று அதிக லாபம் ஈட்டி வருகிறார் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் முருகபூபதி. புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டம் காவிரியின் கடைமடை பகுதியான நண்டலாறு, அரசலாறு, வாஞ்சியாறு உள்ளிட்ட காவிரியின் கிளை மேலும் படிக்க..
தாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்
அபார்ட்மெண்ட்களில் எளிய முறையில் நீர் மறுசுழற்சி பற்றி ஏற்கனவே படித்துள்ளோம். தொழிற்சாலை கழிவுநீர் எளிதாக பாசனத்திற்கு மறுசுழற்சி பற்றி பார்ப்போம். தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவிலான கழிவு நீர் வெளியேற்றப்படகிறது. இக்கழிவு நீரில் அதிக அளவு கன உலோகங்கள் மற்றும் நச்சுத் தன்மையுடைய வேதி வினைப் பொருட்களும் கலந்துள்ளன. இக்கழிவு நீரை சரியான முறையில் அப்புறப்படுத்தாமையின் மூலம் மண் மற்றும் நீர் மாசுபாடு ஏற்படுகின்றது. தற்போதுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு முறைகள் மிகுந்த செலவுடையதாக உள்ளன. தாவர மேலும் படிக்க..
தமிழக – கேரள எல்லையில் வெட்டுக்கிளி படையெடுப்பு
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்., ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, ஜெய்ப்பூர் மாவட்டத்தில், வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளன. பயிர்கள் நாசமடைவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில், ‘ட்ரோன்’ உதவியுடன் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து, வெட்டுக்கிளிகளை அழிக்க முடிவு செய்யப்பட்டு, ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சோமு அருகே சமோத் பகுதிகளில், பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து, வேளாண்துறை ஆணையர் ஓம் பிரகாஷ் கூறியதாவது:வெட்டுக்கிளிகளை அழிக்க, வாடகை ட்ரோனை பயன்படுத்தும் நிலையில், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்போம். வாகனங்கள் செல்ல மேலும் படிக்க..
புற்று நோயை குணமாக்கும் செங்காந்தள்
தமிழகத்தின் மாநில மலர் செங்காந்தள். இது பச்சை, மஞ்சள் நிறத்திலிருந்து ஆரஞ்சு சிவப்பு நிறம் போன்றவற்றால் அழகாக இருக்கும். சில மலர்கள் அடர்த்தியான சிவப்பு வண்ணம் கொண்டிருக்கும். கிராமிய பேச்சு வழக்கில் இம்மலர் கண்வலிக் கிழங்கு மலர் என்று அழைப்பார்கள். கண் வலிக்கிழங்கு பல மருத்துவ குணங்கள் உடையது. இம்மலரில் விதைகள் புற்று நோயை குணமாக்க உதவுகிறது. இத்தாவரத்தின் இலைகள் வயிற்று புண்ணை ஆற்றும். மலட்டுத்தன்மை சிகிச்சைக்கு பாரம்பரியமாக பயன்பட்டு வருகிறது. இத்தாவரத்தை ஹரியானா மாநில விவசாயிகள் மேலும் படிக்க..
பாராட்டுகளைக் குவிக்கும் பாரம்பர்ய நெல் சாகுபடி!
“இந்த ரகத்துக்குப் பெயர் `ராஜமுடி.’ மைசூர் மகாராஜா சாப்பிட்ட அரிசி ரகம். இது, பர்மா பிளாக். புற்றுநோய் எதிர்ப்பாற்றல்கொண்ட ரகம். இந்தியாவின் சிறிய நெல் ரகம் `சுகந்தினி.’ உலகளவில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பிளாக் ஜாஸ்மின் தாய்லாந்து ரகம். `காலா நோனி’, அஸ்ஸாம் மாநில வாசனை ரகம். `சேலம் சென்னா’ சாப்பிடுவதற்கு ஏற்ற ரகம்…” இப்படி 1,300 நெல் ரகங்களை ஒரே இடத்தில் சாகுபடி செய்து, ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கி, ஒரு நெல் அருங்காட்சியகத்துக்குள் சென்றுவந்த உணர்வை மேலும் படிக்க..
பயிர் பாதுகாப்பில் உயிரியல் காரணிகளின் பங்கு
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பில் விளக்குப் பொறிகளின் அவசியத்தைப் பற்றி கடந்த வாரம் பார்த்தோம். இவ்வகையில் விளக்குப் பொறிகள் மட்டுமல்லாது பல்வேறுபட்ட அனுபவங்களின் அடிப்படையில் கிராமங்களில் உழவர்கள் பயன்படுத்தும் செயல் பொறிகளும் பூச்சியினங்களைக் கட்டுப்படுத்துவதாக உள்ளன. உதாரணமாக, தென்னை மரங்களில் உச்சியில் காண்டாமிருக வண்டு என்ற பெரிய வடிவிலான வண்டுகள் தென்னை மரங்களின் குருத்தைக் கடித்து தின்று சேதப்படுத்தும். இவ்வகை வண்டுகளைக் கவர தென்னந்தோப்புகளில் ஆங்காங்கே நிலப்பரப்பில் மண்பானைகளை வைத்து அதனுள் பாதியளவு தண்ணீா் ஊற்றி ஆமணக்கு விதையை மேலும் படிக்க..
தரிசு நிலத்தில் பயறு வகை சாகுபடி
பாசனப் பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு முன்பு, மெழுகுபதத்தில் பயறு வகைகள் விதைக்கப்படுகின்றன. இதற்கு நெல் தரிசுப் பயிர்கள் அல்லது தொடர்ப்பயிர்கள் என்னும் பெயர். நெல் தரிசு ஈரம் மற்றும் சத்துகளைப் பயன்படுத்திப் பயிரிடுவதால், அதிக செலவின்றி கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் மு. புனிதவதி கூறியது: மண் வகை: களிமண் கலந்த குறுமண் நிலம் மிகவும் மேலும் படிக்க..
கால்நடை வளர்ப்பு: பால் உற்பத்தியில் வெளிச்சத்தின் பங்கு
பால் உற்பத்தியில் மாடு தண்ணீர் அருந்துவது எவ்வளவு முக்கியமானதோ, அந்த அளவு மாட்டுக்கு அளிக்கப்படும் வெளிச்சமும் முக்கியமானது. ஆனால், வெளிச்சத்தின் தேவை குறித்து பண்ணையாளர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. பண்ணையில் வெளிச்ச மேலாண்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இயற்கை ஒளி மட்டும் அளிக்கப்பட்ட மாடுகள் குறைவாகப் பால் கறக்கின்றன. அதேவேளை மின்விளக்குகள் மூலம் தேவையான வெளிச்சம் கிடைத்த மாடுகள், அவற்றைவிட அதிக அளவில் பால் தருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
இயற்கை இடுபொருட்களின் பயன்பாடு
கரிம வேளாண்மையில் இயற்கை இடுபொருட்களின் பயன்பாட்டைக் கடைப்பிடிப்பதன் மூலம் பண்ணை உரத்துக்கான நடைமுறைச் செலவு பேரளவு குறைகிறது. இத்தகைய திறன்மிகு இடுபொருட்களைப் பண்ணையிலிருந்தே பெற்று சுயதேவையைப் பூர்த்திசெய்துகொள்ள முடியும். இதனால் பயிரின் வளா்ச்சி, மகசூல், பயிரின் பாதுகாப்பு எந்த விதத்திலும் குறைவுபடவில்லை. விளைச்சல் அதிகாிப்பதாகவும் சுற்றுச்சூழலுக்கு எவ்விதக் கேடும் விளைவிப்பதில்லை என இயற்கை வேளாண் முன்னோடி நம்மாழ்வார், மகாராஷ்டிர இயற்கை வேளாண் நிபுணர் சுபாஷ் பாலேக்கர் ஆகிய இருவரும் உறுதிபடத் தொிவித்துள்ளனர். இதன்படி 5 மாநிலங்களில் தற்போது மேலும் படிக்க..
நாட்டுக் காய்கறி-வீரியரகக் காய்கறி: கண்டறிவது எப்படி?
பசுமைப்புரட்சியின் மகிமையால், சில ஆண்டுகளுக்கு முன்புவரை இயற்கைக் காய்கறிகள் என்றால் என்ன என்றுதான் கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால், தற்போது நிலைமை மாறிவருகிறது. ஆரோக்கியமாக வாழ இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளைச் சாப்பிட வேண்டும் என்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பின்னணியில் நாட்டு ரகமும் வீரிய ரகமும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் தோற்ற மயக்கத்துடன் இருக்கின்றன. ஒரு காய்கறி எந்த ரகம் என்பதைக் கண்டுபிடிப்பது ரொம்ப சிரமமாக இருக்கிறது. ஆடு, கோழியில் தொடங்கி, காய்கறிகள்வரை எல்லாமுமே கலந்துதான் சந்தைக்கும் மேலும் படிக்க..
கறவை மாட்டுக்கு மடி நோய்ப் பராமரிப்பு
கறவை மாடுகளைப் பொறுத்தமட்டில் மடி, பால் உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலை போல் செயல்படுகிறது. இந்த மடி, ரத்தத்தில் உள்ள ஊட்டச்சத்துப் பொருட்களையும் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு உள்ளே உள்ள சுரப்புச் செல்கள் உதவியால் பால் உற்பத்தி செய்கிறது. ஆகவே, மடி நோய், பொருளாதாரத்தைப் பாதிக்கும் ஒரு முக்கிய நோயாகப் பார்க்கப்படுகிறது. நோய் அறிகுறிகள் நோய்த் தாக்கத்திற்கு உட்பட்ட மாடு, கீழ்க்கண்ட நோய்க் குறியீடுகளை வெளிப்படுத்தும். மடி சூடாக இருக்கலாம். நாம் தொடும்போது வலியுடன் இருப்பதை நம்மால் மேலும் படிக்க..
மாமர அடர் நடவு முறைகள்
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், தேனி, திருநெல்வேலி, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் தமிழ்நாட்டில் மாம்பழம் சாகுபடி செய்யும் முக்கியப் பகுதிகள். தோத்தாபுரி, செந்தூரா, நீலம், அல்போன்சா, பீத்தர், மல்கோவா, ருமானி, பங்கனப்பள்ளி, காலப்பாடு போன்றவை தமிழகத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் ரகங்கள். ஆண்டுக்கு 1.6 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, 11.56 டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தித் திறன் ஹெக்டேருக்கு 8.7 டன்கள் என்ற அளவில் உள்ளது. நகரமயமாக்குதலில் சாகுபடிப் பரப்பளவு குறைந்து மேலும் படிக்க..
செடி அத்தி சாகுபடியில் நல்ல லாபம்!
செடி அத்தி சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கொத்துார் கிராமத்தைச்சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது: இந்தியாவில் மஹாராஷ்டிரா, கர்நாடகா, பீஹார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், செடி அத்தி சாகுபடி செய்யப்படுகிறது. அங்கிருந்து செடிகளை வாங்கி வந்து, என் தோட்டத்தில் நட்டுள்ளேன். ஒவ்வொரு செடியிலும், ஓர் இலை வரும் போது, ஓர் அத்தி காய்த்து, பழுக்க துவங்கும். அத்தி பழங்கள் பறிக்கும் அளவிற்கு செடிகளை வளர்த்து, கவாத்து செய்தால், ஆண்டு முழுவதும் மகசூல் பெறலாம்.ஒரு ஏக்கருக்கு, மேலும் படிக்க..
கறவை மாடு வளர்ப்பு
திருவள்ளூர் மாவட்டம், திரூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், லாபம் தரும் கறவை மாடு வளர்ப்பு குறித்து, 22/11/2019 , கட்டணப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம். இதற்கு முன் பதிவு செய்யலாம். தொடர்புக்கு: 9442485691
மண் வளம் குறித்து பயிற்சி
செங்கல்பட்டு அடுத்த, பொத்தேரி காட்டப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், 2019 நவம்பர், 25, 26ம் தேதிகளில், நிலக்கடலை மற்றும் எள் பயிருக்கு மண் வளம் குறித்து, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், பங்கு பெற விரும்புவோர் நேரில் அணுகலாம். தொடர்புக்கு: 04427452371
கழிப்பறையில் வீணாகும் நீரை பயனுள்ளதாக மாற்றும் தொழிற்நுட்பம்
பம்மல்:பம்மலை சேர்ந்த ஒருவர், பல ஆண்டுகளாக, தங்கள் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, பயனுள்ளதாக மாற்றி, செடிகளுக்கு பாய்ச்சுவதோடு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஐந்து முதல் 10 பேர் உள்ள வீடுகளில், நாள்தோறும், 500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், குடிக்க, சமைக்க ஆகும் தேவைகளுக்கு, 10 முதல் 25 லிட்டர் செலவாகிறது. மீதமுள்ள, 475 லிட்டர் கழிவுநீராக, மழைநீர் கால்வாய்களில் கலக்கிறது. இது தான், கொசு உற்பத்திக்கு முக்கிய காரணமாக அமைகிறது.பொதுவாக, மழைநீர் கால்வாய்களில், கழிவுநீர் மேலும் படிக்க..
பாலிதீன் பைகளை உண்ணும் கால்நடைகளுக்கு ஏற்படும் தீங்கு
லகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கால்நடைகள் பொதுவாக பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உண்ணுகின்றன. ஏனென்றால் தீவனப் பொருட்களை பகுத்தறியும் குணமும், சுவையை உணரும் தன்மையும் அவைகளுக்கு கிடையாது. மேய்ச்சலின் போது தலையை கீழே தாழ்த்தி தரையில் மேய்வதால் புல் மற்றும் தீவனங்களோடு பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களையும் சேர்த்து சாப்பிடுகின்றன. தீராத செரிமான கோளாறு அயற் பொருட்களை சாப்பிடும் கால்நடைகளுக்கு வயிற்று நோய்கள் உட்பட அதனை சார்ந்த பிற நோய்களும் ஏற்படுகின்றன. பகுத்தறியும் மேலும் படிக்க..
டிராகன் பழ நாற்று திருவள்ளூரில் உற்பத்தி
டிராகன் பழம் நாற்று விற்பனை குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது: பிற நாடுகளில் விளையும் டிராகன் பழத்தை, நம்மூரில் சாகுபடி செய்துள்ளேன். குறிப்பாக, தமிழகத்தில் டிராகன் பழம் சாகுபடி கிடையாது. ஆந்திர மாநிலத்தில் சில விவசாயிகள் சாகுபடி செய்து, 1 ஏக்கருக்கு, 5 டன் வரையில் மகசூல் எடுக்கின்றனர். ஆந்திராவில் இருந்து, ஒரு செடி எடுத்து வந்து, அதில் தேவைக்கு ஏற்ப நாற்றுகளை பதியம் போட்டு, 1 ஏக்கரில் நட்டுள்ளேன். மேலும் படிக்க..
மதிப்பூட்டல் மூலம் சிறு தானியத்தில் இரண்டு மடங்கு லாபம்
நன்றி: பசுமை விகடன்
இறந்த ஆமையின் வயிற்றில் 104 பிளாஸ்டிக் துகள்கள்
அமெரிக்காவின் புளோரிடா நகரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமையின் வயிற்றில் ஏறக்குறைய 104 பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இறந்த ஆமைக்கு அருகே, அதன் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட இந்த புகைப்படம், தற்போது உலகம் முழுவதும் பகிரப்பட்டுள்ளது. இயற்கை ஆர்வலர்கள் பலர் இதற்கு வேதனை தெரிவித்துள்ளனர். இது மிகவும் வேதனை அளித்து இருப்பதாகவும், மறுசுழற்சி செய்யும் வகையிலான மேலும் படிக்க..
வறண்ட நிலத்தில் திராட்சை சாகுபடி!
“நாங்க சொட்டு நீர் பாசனத்துல திராட்சையை பயிரிட்டிருக்கோம். இயற்கை முறையில சாகுபடி செய்றதால எதிர்பார்த்த மகசூலை விட அதிகமா கிடைக்குது.’’ Panneerselvam உள்ளங்கையில் உலகை உருட்டிக்கொண்டிருக்கும் உலகில், விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஆனால், வேலையாட்களை எதிர்பார்க்காமல், தனது உறவினர்கள் மூலமாகத் திராட்சை சாகுபடி செய்து, வறண்ட நிலத்திலும் நல்ல லாபம் பார்த்து வருகிறார் பன்னீர் செல்வம். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பட்டணம் கிராமம். ஊரில் மேலும் படிக்க..
மதிப்புக்கூட்டல் மூலம் தேங்காய் ஒன்றுக்கு 40 ரூபாய்!
“ஒரு தேங்காயின் அதிகபட்ச விலை 15 ரூபாய். இதுதான் இதுவரை தென்னை விவசாயிகளுக்குக் கிடைத்துவந்தது. ஆனா, அதை மாற்ற முடியும். தேங்காய் ஒன்றிலிருந்து 40 ரூபாய் வரை லாபம் பார்க்க முடியும்” என்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுநரும் ஏற்றுமதியாளருமான ராஜரத்தினம். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள துங்காவி கிராமத்தில் உள்ள தென்னைநார்க் கட்டித் தொழிற்சாலையில் அவரைச் சந்தித்தோம். “எனக்குப் பூர்வீகம் உடுமலைப்பேட்டை. பொறியியல் படிப்பு முடித்துக் கோயம்புத்தூரில் உள்ள கம்பெனியில் வேலைபார்த்தேன். ஒரு கட்டத்துல விருப்ப மேலும் படிக்க..
மதுரையில் : மக்கும் கழிவுகளை வளமிகு ‘ஏரோபிக்’ உரமாக்கும் முறை
மக்கும் கழிவுகளை வளமிகு உரமாக்கும் ‘ஏரோபிக்’ முறையை மதுரையில் மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டப்படி தெருக்களில் வைக்கப்படும் குப்பை தொட்டிகள், குப்பை கிடங்குகள் அப்புறப்படுத்தப்படும். இதற்கு பதில் குடியிருப்பு பகுதியிலேயே குப்பை கொட்ட உரக்கிடங்கு அமைக்கப்படும். துப்புரவு பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து வாங்குவர். மக்காத குப்பை மறுசுழற்சிக்கு அனுப்பப்படும். மக்கும் குப்பை உரமாக தயாரிக்கப்படும். அடுத்தகட்டமாக மேலும் படிக்க..
நாட்டு மாடுகள் மூலம் மதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு!
விருதுநகரைச் சேர்ந்த சங்கர் என்ற எம்.பி.ஏ பட்டதாரி, நாட்டு மாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்களைவைத்து மதிப்புகூட்டப்பட்ட பொருள்களைத் தயாரித்து வருகிறார். மதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் ( ஆர்.எம்.முத்துராஜ் ) இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் இயற்கை மற்றும் பாரம்பர்யத்தை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இயற்கை விவசாயம், நாட்டு மாடு, நாட்டு விதை, நாட்டுக்கோழி, நாட்டு ஆடு, நாட்டு நாய் உள்ளிட்ட நாட்டு இனங்களை மீட்டெடுக்க வேண்டும் என விரும்புகின்றனர். மேலும், மனதிருப்தியுடன் சொந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என நினைக்கின்றனர். நாட்டு மேலும் படிக்க..
மூங்கிலால் ஆன நீர் பாட்டில்கள்
பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த உலகம் இப்போது அதன் பயன்பாட்டைக் குறைக்க ஆரம்பித்திருக்கிறது. ஒருமுறை பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களுக்கு இந்தியாவில் பல பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு, வேலைக்கு என பல இடங்களுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பாட்டில்கள்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கான மாற்று என்ன என்று சிந்தித்த திரித்மன் போரா என்பவரின் செயல் வடிவம்தான் இந்த மூங்கில் தண்ணீர் பாட்டில். அஸ்ஸாமைச் சேர்ந்த 36 வயது தொழிலதிபரான திரித்மன் போரா ஐஐடி-யின் மேலும் படிக்க..
வீட்டுக்குள் சுத்தமான காற்றை சுவாசிக்க 6 செடிகள்!
காற்றை சுத்திகரித்து, வீட்டில் சுத்தமான காற்றை சுவாசிக்க உதவும் சில செடிகள் பற்றிய தொகுப்பு. Mint காற்று மாசுபாடு என்பது தொழிற்சாலைகளில் மட்டும்தான், சாலைகளில் மட்டும்தான் என்ற நிலையெல்லாம் மாறி இன்று நகரங்களில் நம் வீட்டுக்குள்ளேயே சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத நிலை வந்துவிட்டது. இதற்கு ஏர் பியூரிஃபயர்கள் மட்டுமே பலரது வீடுகளில் தீர்வாக இருக்கின்றன. ஆனால், அதைத் தவிர்த்து இயற்கையாகவே ஒரு தீர்வு இருக்கிறது. அது தோட்டம்! வீட்டைச் சுற்றிச் செடிகள் மற்றும் மரங்களை வளர்ப்பது மேலும் படிக்க..
2 ஏக்கரில் வேப்பங்காடு… புதுக்கோட்டையில் தமிழ்ப் பேராசிரியர் சாதனை
புதுக்கோட்டை – திருச்சி நெடுஞ்சாலையில் இருக்கிறது தக்கிரிப்பட்டி கிராமம். கிராமத்தில், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும், இருக்கும் விவசாய நிலங்கள் எல்லாம் வறண்டு போய் தரிசாகக் கிடக்கிறது. இவற்றிற்கு மத்தியில்தான் எங்கும் பசுமை போர்த்தியபடி, பசுஞ்சோலையாக காட்சியளிக்கிறது கருப்பையாவின் வேப்பந்தோப்பு. தன்னிடம் இருந்த 2 ஏக்கர் நிலத்திலும் வேப்பமரங்களை நட்டு வளர்த்து வருகிறார். புவி வெப்பமயமாதலைத் தடுத்து சுற்றுச்சூழலைக் காக்கவும், பறவைகளின் பல்லுயிர் பெருக்கத்துக்காகவும், பசுமை போர்த்திய இந்த வேப்பமர குறுங்காட்டை உருவாக்கி இருப்பதாகக் கூறும் கருப்பையா, மேலும் படிக்க..
பாரம்பரிய ரக நெல் விதை
வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த, பாரம்பரிய ரக நெல் இயற்கை விவசாயி, எஸ்.வீரராகவன் கூறியதாவது: பூங்கார், கிச்சிலி சம்பா உள்ளிட்ட பாரம்பரிய ரக விதை நெல் இருப்பு உள்ளது. இதை வாங்கி பயிரிட விரும்பும் விவசாயிகள், எங்களை அணுகலாம். ஒரு ஏக்கருக்கு, 5 கிலோ விதை போதுமானது. இதை ஒற்றை நாற்றுமுறையில் நட்டு, பாரம்பரிய ரகத்தை மீட்பதோடு, நல்ல மகசூலை பெருக்கலாம். தொடர்புக்கு: 9894120278 நன்றி: தினமலர்
மூங்கில் சாகுபடி நல்ல வருமானம்!
தரிசு நிலத்தில், மூங்கில் சாகுபடி செய்வது குறித்து, உத்திரமேரூர் அடுத்த, கைத்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த, ‘எழில்சோலை’ மரம், மாசிலாமணி கூறியதாவது: விவசாயிகளின் பச்சை தங்கம் என, மூங்கில் அழைக்கப்படுகிறது. இதில் கல்மூங்கில், பொந்துமூங்கில், வல்காரிஸ், பால்கோவா ஆகிய ரகங்கள் உண்டு. எந்த ரகத்தை பயிரிட்டாலும், கணிசமான வருவாய் ஈட்டலாம். வல்காரிஸ் ரகம் மூங்கிலில், கூடுதல் வருவாய் கிடைக்கிறது. 1 ஏக்கர் மூங்கில் சாகுபடி செய்தால், நான்கு ஆண்டுகளுக்கு பின், 2 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம். மூங்கில் மேலும் படிக்க..
எளிதாக நீர் வீணாவதை தடுப்பது எப்படி? ரூ 660இல் ஒரு பதில்
தண்ணீரை சேமிக்கும் குழாய் முனை குறித்து கூறும், Earthfokus ‘ஸ்டார்ட் – அப்’ நிறுவனர், அருண் சுப்ரமணியன் கூறுகிறார் நுண் துகளாக்கல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான், இந்த தயாரிப்பை செய்து உள்ளோம். இந்த முனை, குழாயில் இருந்து வரும் தண்ணீரை, பனி போன்ற துாறலாக வெளியேற்றும். இதனால், தண்ணீர் ஓட்டம், ஒரு நிமிடத்திற்கு, 12 லி., என்பது, 600 மி.லி.,யாக குறைகிறது. இந்த குழாய் முனையை, சமையலறை அல்லது குளியலறை குழாயில் பொருத்துவதால், ஒரு நாளைக்கு, 35 மேலும் படிக்க..
இந்தியாவின் தண்ணீரை ஏற்றுமதி எவ்வளவு தெரியுமா
மனித குலத்துக்கு இருக்கும் உடனடி ஆபத்துகளில் ஒன்று தண்ணீர்ப் பிரச்னை. ஆசிய கண்டத்தில் வாழும் மக்களின் எதிர்காலத் தண்ணீர்த் தேவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்படுமா என்பதே கேள்விக்குறிதான். கடந்த நூற்றாண்டில் மட்டும், உலகளவில் பயன்படுத்தப்பட்ட தண்ணீர், மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைவிட 1.7 மடங்கு அதிகமாக உள்ளது. அதில் 64 சதவிகிதம் ஆசிய கண்டத்தில் நிகழ்ந்துள்ளது. எகனாமிஸ்ட் இன்டெலிஜன்ஸ் யூனிட் (Economist Intelligence Unit) என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கைப்படி, 2030-ம் ஆண்டுக்குள் ஆசிய கண்டத்தில் தற்போது மேலும் படிக்க..
தக்காளியில் நூற்புழு மேலாண்மை
சந்தையில் ஈடாக தக்காளி விலை உயர்ந்திருக்கும் நிலையில், தக்காளி பயிரில் நூற்புழுத் தாக்குதல், விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. தக்காளிப் பயிரில் நூற்புழு மேலாண்மை குறித்து, கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கரி கிராமத்தில் இயங்கும் வேளாண் அறிவியல் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ். சுந்தராஜ் தெரிவித்தது: தக்காளிப் பயிரானது தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளிப் பயிரைப் பொருத்தவரையில், நடவு முதல் அறுவடை வரையிலான பல்வேறு நிலைகள் உள்ளன. பல்வேறு காரணிகளால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் இழப்பைச் சந்தித்து மேலும் படிக்க..
வீட்டு தோட்டம் அமைப்பது எப்படி – 1
வீடு என்பது வெறுமனே கட்டடம் மட்டுமல்ல. ஆரோக்கியமான சூழலும் மனிதர்கள் ஒன்றுகூடி வசிக்குமிடமுமாகும். ஆரோக்கியம் என்றாலே அதற்கு செடி கொடிகள் மரங்கள் போன்றவை அவசியம் தானே. நமக்கு முந்தைய தலைமுறையினர் வரை வீடு என்பது மனிதர்கள், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் அதனுடன் வீட்டைச்சுற்றி வீட்டிலுள்ளவர்களுக்கு தேவையான செடி, கொடிகளும் கட்டாயம் இருந்தது இன்றோ இந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. மண் தரைகளே இல்லாது அடுக்கிவைத்த வத்திப்பெட்டி போன்ற நவ நாகரீக வீடுகள்.. செருப்பைக்கூட சுதந்திரமாக மேலும் படிக்க..
அதிக மகசூல் பெற மா மரத்தில் கவாத்து
குறைந்த காய்ப்பு திறன் கொண்ட மா மரத்தில் கவாத்து செய்வது நல்ல பலனை கொடுக்கும். மா மரங்களில் ஆண்டு தோறும் காய்ந்த நோய் வாய்ப்பட்ட கிளைகள் மற்றும் வாதுக்களை நீக்க வேண்டும். மரத்தில் குறுக்கும் நெடுக்குமாக உள்ள கிளைகள், முறுக்கிப் பிணைந்த கிளைகள் ஆகியவற்றை நீக்கி சூரியஒளி புகுமாறு செய்து நல்ல காற்றோட்ட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் கிளைகளை கவாத்து செய்வதால் உரமிடுதல் மற்றும் தோட்ட மேலாண்மை போன்ற செயல்களை துரிதப்படுத்த மேலும் படிக்க..
பூச்சிக்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!
இயற்கையை ரசிப்பதற்காக வாரம் தவறாமல் கானுலா செல்வது வழக்கம். அப்படித்தான் அன்றும் சென்றிருந்தேன். அங்குதான் மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்குத்தொடர்ச்சி மலைக்கு வலசை செல்லும் அந்தப் பட்டாம்பூச்சியையும் பார்த்தேன். பெயின்டடு லேடி (Painted Lady) இயற்கையின் சூழலை ரசிப்பதற்காக வாரம் தவறாமல் பறவைநோக்கல், வண்ணத்துப்பூச்சிகள், ஏனைய பூச்சிகள் அவதானிப்பு எனக் காட்டுக்குள் கானுலா செல்வது வழக்கம். கானுலா என்பது உயர்ந்த மலைச்சிகரங்களில் உள்ளடங்கிய சோலைக் காடுகள் மட்டுமல்லாது சமவெளிக் காடுகள், வறண்ட சிறு குன்றுகள், புதர்க்காடுகள், சதுப்பு மேலும் படிக்க..
பாலீஷ் அரிசி… பளபளக்கும் காய்கறிகள்… விஷமாகும் உணவு!
எப்போது தொலைத்தோம் இயற்கையை? அதிக விளைச்சலைத் தேடி, அதிக லாபத்தை நோக்கி ஏற்படுத்தப்பட்ட அறமற்ற பயிர் செய்யும் முறைகளே, இயற்கையைப் பின்னுக்குத் தள்ளி செயற்கை முறைகள் கோலோச்சியதற்கான முதல் காரணமாகும். இயற்கையை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டதால் பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கிக் கிடக்கிறோம். கோழி முட்டையைக்கூட செயற்கையாகச் செய்து விற்கிறார்கள். பாலில் ரசாயனக் கலப்பு என பட்டியல் நீள்கிறது. இதனால் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளை மனதில் கொண்டு, மீண்டும் இயற்கையை நோக்கி படையெடுக்கத் தொடங்கியிருக்கிறோம். உணவு சார்ந்து, மேலும் படிக்க..
காய்கறி கழிவு, மீன் முள், முட்டை ஓடு… கிச்சன் கழிவுகளை உரமாக்குவது எப்படி?
குப்பைத் தொட்டி நிரம்பிக் கிடந்தா, மறுநாள் குப்பையைப் போட்டுக்கலாம்னு பெரிய மனசெல்லாம் பண்ண மாட்டோம். குப்பைத் தொட்டிக்குப் பக்கத்துலேயே வீசிட்டு வந்துடுவோம். ‘மக்கும் குப்பை, மக்காத குப்பை இரண்டையும் பிரிச்சு குப்பைத் தொட்டியில போடுங்க’ என்று மாநகராட்சி எத்தனை முறை சொன்னாலும், அவையெல்லாம் வெறும் காதோடு போச்சு. காய்கறித் தோலையும் அழுகின தக்காளியையும் பத்திரமா பிளாஸ்டிக் கவர்ல போட்டுத்தான் குப்பைத் தொட்டியில போடுவோம். குப்பைத் தொட்டி நிரம்பிக் கிடந்தா, மறுநாள் குப்பையைப் போட்டுக்கலாம்னு பெரிய மனசெல்லாம் பண்ண மேலும் படிக்க..
கழிவுநீரிலிருந்து குடிநீர்… விருதுநகர் `சாண்ட் ஃபில்டர்’
குடிநீருக்காக தமிழக மக்கள் அனைவரும் காலிக் குடங்களுடன் ஊர்ஊராய் அலைந்துகொண்டிருக்கும் வேளையில், அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி என்ற கிராமத்தில் கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்திவருகிறார்கள். அவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாகக் கைகொடுத்திருப்பது சாண்ட் ஃபில்டர். அடித்தட்டு மக்கள் இன்று குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்துளைக் குழாய் கிணறுகள் அமைத்து தனியார் நிறுவனங்களும், தனிநபர்களும் ஒரு குடம் குடிநீரை 10 அல்லது 15 ரூபாய்க்குச் சர்வசாதாரணமாக வேன்களில் விற்பனை செய்துவருகின்றனர். இதனால் குடிநீர் விற்பனை செய்யும் வாகனங்களின் மேலும் படிக்க..
28 தடுப்பணைகள் – தனி ஒருவன் கிராமத்தை மாற்றிய கதை
நம்மில் பலரும் தங்களது கிராமங்களிலோ, மாவட்டங்களிலோ நிகழும் விவசாயிகளின் தற்கொலைகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம். அவர்களின் நிலையைச் செய்திகளின் வாயிலாகக் கேட்பதும், விவாதம் வாயிலாகப் பதிலளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருப்போம். அவர்களின் உண்மை நிலை என்ன… அவர்களின் உண்மையான பிரச்னைகள் பற்றி என்ன என்பதைப் பற்றி நேரில் பார்த்திருக்கக்கூட மாட்டோம். ஆனால், இந்தியாவில் பிறந்த ஒருவர், அதுவும் வெளிநாட்டில் சென்று வேலை பார்த்த இளைஞர் ஒருவர், தனது கிராமத்தைத் தடுப்பணை கட்டி வறட்சியிலிருந்து மீட்டிருக்கிறார். அவரது பெயர் தத்தா பாட்டீல். மகாராஷ்டிர மேலும் படிக்க..
இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்!
பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்! இயற்கை இடுபொருள் தயாரிப்பு பற்றி கூறும், மஹாராஷ்டிரா மாநில வேளாண் விஞ்ஞானி, சுபாஷ் பலேக்கர் கூறுகிறார்: விதை நேர்த்திக்கான, பீஜாமிர்தம் தயாரிக்க, தண்ணீர் – 20 லி., நாட்டு பசுஞ்சாணம் – 5 கிலோ; நாட்டு பசு சிறுநீர் – 5 லி., சுண்ணாம்பு – 50 கிராம்; சாகுபடி நில வரப்பு மண் ஒரு கைப்பிடி தேவை.சாக்கு அல்லது துணியில் சாணத்தை போட்டு, ஒரு குச்சியில் கட்டி, நீரில் மிதக்க விட வேண்டும். பின், மேலும் படிக்க..
‘சொட்டு நீர் பாசனம்’ குறைந்த நீரில் அதிக மகசூல்!
வேளாண்மையில் நன்மை தரும் உத்திகளை ஒவ்வொரு பயிருக்கும் கடைப்பிடித்திட வேண்டும். குறிப்பாக வளமான மண்ணாக இருப்பினும், அதிக நீரை பாய்ச்சி விவசாயத்தில் லாபம் ஈட்ட முடியாது. பயிரின் தேவை அறிந்து, பருவம் அறிந்து, பெய்த மழையை பொறுத்து, நீர் பயிருக்கு கிடைக்க செய்ய வேண்டும். அதாவது நமக்கு எப்படி உணவு தொடர்ந்து தேவைப்படுகிறதோ, அதேபோல் பயிரின் தேவையை கணக்கிட்டு உரத்தையும், நீரையும் ஒருங்கே செலுத்துவதான் சிறந்தது. வெறும் தண்ணீரில் செடிகள் வளராது. மண்ணில் ஆண்டு தோறும் வளம் மேலும் படிக்க..
உபரி வருமானம் தரும் ஊடுபயிர்
ஊடுபயிர் என்பது பயிருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக, நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களை தடுக்க, ஈரப்பதம் காக்க, மண் வளத்தை அதிகரிக்க, ஊடுபயிர் சாகுபடி உதவுகிறது. ஊடுபயிரிலிருந்து 40 சதவீதம் வருமானம் கிடைக்க வழி செய்கிறது. முக்கிய பயிராக ஒரு விதை தாவர பயிர்களான சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களுடன் இரு விதை தாவர பயிர்களான பயிறு வகைகள், நிலக்கடலை போன்றவற்றை ஊடுபயிராக பயிரிடலாம். ஊடுபயிர், முக்கிய பயிர்களுக்கு பக்கத்துணையாக, பாதுகாப்பு அரணாக இருக்கிறது. மானாவாரி, மேலும் படிக்க..
பாலேக்கர் முறையில் ஐந்தடுக்குச் சாகுபடி!… ஆண்டுக்கு ரூ. 10 லட்சம்
“ஒருமுறை உழவு செய்து நிலத்தைத் தயார் செய்தால் போதும். அதன்பிறகு அறுவடை. அடுத்த நடவு. இது மட்டும்தான் வேலையாக இருக்க வேண்டும். அடிக்கடி உழவு செய்தல், உரமிடுதல், பூச்சிக்கொல்லி தெளித்தல், களையெடுத்தல் என எந்த வேலையும் இருக்கக் கூடாது. பயிருக்குப் பாசனமும் ஜீவாமிர்தமுமே போதும். வேறு இயற்கை இடுபொருள்கள்கூடத் தேவையில்லை. இந்த முறையில்தான் கடந்த பத்து ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். செலவே இல்லாமல் ஏக்கருக்கு மூன்று லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் பார்த்து வருகிறேன். இதற்குக் மேலும் படிக்க..
கோவையில் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்க காரணம் என்ன?
வறட்சியால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், நீர் நிலைகள் வறண்டு விட்டன. மக்கள், தண்ணீருக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், கோவை மாநகரில் மக்களும், தன்னார்வ அமைப்பினரும் மேற்கொண்ட முயற்சியால், குளங்களில் இன்னும் தண்ணீர் தேங்கி இருக்கிறது. நிலத்தடி நீர் மட்டத்தை பராமரிக்கவும், குளங்களில் தேங்கியிருக்கும் தண்ணீர் உதவிகரமாக உள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் பொய்த்து போன தால், கடும் வறட்சி நிலவுகிறது. பல மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடிநீருக்காக மக்கள் மேலும் படிக்க..
ஆட்டுக்கிடை’ பயிர் வளர்ச்சியின் ஊக்கி
ஆட்டுச்சாணம் ஒரு சிறந்த உரம். இதை நன்கு உணர்ந்த தென்னை, பாக்கு, காப்பி, தேயிலை, மிளகு, ஏலம், காய்கறிகள் பயிரிடும் கேரள விவசாயிகள் தமிழக எல்லை மாவட்டங்களில் குறிப்பாக தென் மேற்கு மாவட்டங்களில் காய்ந்த ஆட்டுப்புழுக்கை கிலோ 10 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். அதையே மண்புழு உரமாக தந்தால் 15 ரூபாய்க்கு அட்வான்ஸ் செலுத்தி வாங்கிச் சென்று நல்ல வளம் மற்றும் நல்ல மகசூல் பெறுகின்றனர். சிக்கிம் மாநிலத்தை தொடர்ந்து கேரளாவும் விரைவில் இயற்கை விவசாய மாநிலமாக மேலும் படிக்க..
காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி
காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 27-06-2019 தொடர்பு எண்:04285241626 கட்டணம் ரூ 150
வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 26-06-2019 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 150
இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பம் பயிற்சி
இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பம் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 25-06-2019 தொடர்பு எண்:04285241626 கட்டணம் ரூ 150
தேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி
தேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 18-06-2019 தொடர்பு எண்:04285241626 கட்டணம்: ரூ 150
தினம் 5,000 லிட்டர் குடிநீர்’ – மழைநீரில் இருந்து சேமித்த விவசாயி!
`தண்ணீரைப் பூமியில் தேடக் கூடாது வானத்தில் இருந்து கொண்டுவர வேண்டும்” என இயற்கை வேளாண் விஞ்ஞானியின் கூற்றுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் 25 வருட ஆனந்த விகடன் வாசகரும் இயற்கை விவசாயியுமான காசிநாதன். நாள்தோறும் 5,000 லிட்டர் அளவு குடிநீரை மக்களுக்கு விலையில்லாமல் அளித்து வருகிறார் அவர். மழைநீர் சேகரிப்பு மூலம் சேகரிக்கப்பட்ட நீர் அது என்பது குறிப்பிடத்தக்கது. நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காட்டைச் சேர்ந்தவர் காசிராமன். தொழிலதிபரான இவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டு, இயற்கை மேலும் படிக்க..
அக்ரி டெக் – 2019 விவசாய கண்காட்சி
அக்ரி டெக் – 2019 விவசாய கண்காட்சி கடலு}ர் மாவட்டத்தில் உள்ள சுப்பராயலு ரெட்டியார; திருமண மண்டபத்தில் விவசாய கண்காட்சி – 2019 என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் விவசாயம் சார்ந்த தொழில் முனைவோர்கள் தங்களுடைய பொருட்கள் பற்றி மற்ற விவசாயிகளுக்கு தெரியப்படுத்தும் விதமாக விவசாய அரங்குகள் (ளுவயடட) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் விவசாய சார்ந்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் விவசாயிகளின் நேரடி விளக்கங்கள், விவசாய முதலீட்டாளர்கள், விவசாய மேலும் படிக்க..
விதை நேர்த்திக்கு உதவும் ‘விரிடி’ எனும் பூசனம்
எந்த ஒரு தாவரமும் வளர வேண்டுமானால் ஏற்ற சூழல் மண்ணில் இருக்க வேண்டும். அதில் குறிப்பாக விதைகளை விதைத்தால் தீமை செய்கின்ற கிருமிகளை நாற்றழுகல், மண் மூலம் பரவும் நோய்க்கிருமிகள் உடனே விதையை தாக்கலாம். மேலும் விதையின் மேற்பரப்பில் கூட பல நோய்க்கிருமிகள் உயிருடன் இருக்கும். அந்த விதை முளைத்திட முயலும் போது அந்த விதையை அழிக்க தனது விஷ வினையியல் பணியால் முயற்சி செய்யும். குறிப்பாக மானாவாரியான சூழலில் வேர் அழுகல் அதிமாக பருத்தி, கடலை, மேலும் படிக்க..
நிலத்தடி நீர் மேலாண்மையில் சாதித்த ஒரு கிராமத்தின் கதை!
மகாராஷ்டிரா மாநிலம் தமிழகத்தைக் காட்டிலும் வறட்சி மிகுந்த மாநிலம் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால், இந்த மாநிலத்தில்தான் நாம் சொன்ன நீர் மேலாண்மையில் முன்னேற்றம் அடைந்த கிராமம் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநில அஹமத் நகர் மாவட்டத்தில் பார்னர் தாலுகாவுக்குள் 2000 மக்கள் வாழும் ஒரு சிறிய ஊர்தான் ராலேகான் சித்தி. கோடைக்காலம் வந்துவிட்டாலே இந்தியா முழுவதும் வறட்சியின் குரல்கள் கேட்க ஆரம்பித்துவிடுகின்றன. இந்தியா மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடு. நாட்டின் மேற்கேயும், வடக்கேயும் உள்ள மேலும் படிக்க..
2.5 பில்லியன் ஆண்டு மலைத்தொடரை 40 ஆண்டுகளில் அழித்த கதை!
டெல்லி மற்றும் வட இந்தியாவில் தூசி அதிகம் இருப்பதை அங்கு சென்றவர்கள் பார்த்து இருப்பீர்கள் தூசி மாசு அதிகம் (PM 10, PM2.5)உள்ள ஊர்களில் உலகலாவில் வட இந்திய நகரங்கள் அதிகம். ஒவ்வொரு வருடமும் பஞ்சாபில் கோதுமை சாகுபடி செய்த பின் பயிர்களை எரிப்பது ஒரு காரணம். இன்னொரு காரணம் தெரியுமா? ஆரவல்லி என்று ஒரு மலை தொடர். 2.5 பில்லியன் ஆண்டுகளாக இருந்து வருகிறது. உலகத்தின் பழைமையான மலை தொடர்களில் ஒன்று கிட்டத்தட்ட 700 கிலோமீட்டர் மேலும் படிக்க..
வேப்ப எண்ணெய் – மிக பெரிய வாய்ப்பு!
யூரியா பயிர்களுக்கு நைட்ரோஜன் அதிகம் கொடுத்து வளர்ச்சியை கொடுக்கும் உரம். ஆனால் பயிர்கள் யூரியாவை 40% சதவீதம் தான் உட்கொள்கின்றன. மீதி வீணாகிறது. நிலத்தடி நீர் கெடுகிறது. அடித்து செல்லப்படும் யூரியா நீர்நிலைகளை கெடுக்கிறது. யூரியாவை வேப்ப எண்ணெய் மூலம் முலாம் பூசும் போது நைட்ரோஜென் வெளியாகும் வேகம் குறைகிறது. உரத்தின் பயன் பல நாட்கள் கிடைக்கிறது. நீர் நிலைகள் மாசு படுவதும் குறைகிறது. இதை கருத்தில் கொண்டு 2015 ஆண்டு NDA அரசு யூரியாவை வேப்ப மேலும் படிக்க..
25 ஏக்கர் தோப்பு, 17 வருட உழைப்பு… பெண் விவசாயி பேச்சியம்மா!
வறண்ட பூமியில், விளைச்சலோடு போதுமான வரைக்கும் மல்லுக்கட்டுகிறார். தோப்புக்கான பொருட்செலவை தனது பெருங்கொண்ட உழைப்பினால் ஈடுசெய்கிறார். தன் கணவருடைய நினைவுகள் நிறைந்த தோப்பு. அந்த நினைவுகள் தரும் உத்வேகத்தால் தினமும் பல கி.மீ கடந்து இங்கே வந்து பரிவோடு தோப்பைப் பராமரிக்கிறார். அந்த வறண்ட பூமியில், விளைச்சலோடு போதுமான வரைக்கும் மல்லுக்கட்டுகிறார். தோப்புக்கான பொருள்செலவை தனது பெருங்கொண்ட உழைப்பால் ஈடுசெய்கிறார் மதுரையைச் சேர்ந்த பெண் விவசாயி பேச்சியம்மா! மதுரை நகரிலுள்ள தன் வீட்டிலிருந்து பஸ் ஏறி, நகரத்துக்கு வெளியே மேலும் படிக்க..
2.5 ஏக்கரில் 12 லட்சம் வருமானம்… அசத்தும் இளைஞர்!
இவர் பயிரிட்ட தக்காளி 15 அடி உயரத்துக்கு வளர்ந்து, ஒரு செடியில் இருந்து ஒரு நாளைக்கு 10 முதல் 12 கிலோ வரை மகசூல் கிடைத்தது. மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள டில்லி கிராமத்தில் குறுவிவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆகாஷ் செளராஷ்யா (Akash Chourasiya). டில்லி கிராம மக்கள் முழுவதும் பீடி சுற்றுவதைத்தான் தொழிலாகச் செய்துவந்தனர். ஆனால், ஆகாஷ் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கத் தொடங்கினார். மருத்துவம் படித்து மக்களுக்கு உதவ வேண்டும் என முயற்சி மேலும் படிக்க..
ஆலிவ் எண்ணையும் 26 லட்சம் பறவை கொலையும்
விவசாயி தான் உலகத்தின் முதல் சூழலாளி. ஒரு வயலோ தோட்டமோ, அவனுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அங்கே சிறு பறவைகள் நன்மை செய்யும் பூச்சிகள், பாம்புகள், ஆந்தைகள் என பல உயிரினங்கள் அங்கே வசிக்கும். இதை உணர்ந்து அதற்கேப்ப விவசாயம் செய்தான் போன தலைமுறை விவசாயி. ஒன்றுக்கொன்று எப்படி வாழ்க்கை சேர்ந்து இருந்தது என்று அவனுக்கு தெரிந்து இருந்தது. பூச்சிகளை தின்னும் தவளை, அதை தின்னும் பாம்பு, அதை தின்னும் ஆந்தை என்று உயிர் வட்டம் இருந்தது. மேலும் படிக்க..
இலுப்பை மரத்தின் அற்புதங்கள்…பணங்காய்ச்சி மரம்
உலகில் முதலில் மதிக்கப்பட வேண்டியது மரங்கள்தான். மனிதன் கொடுக்கும் இடர்பாடுகளை எல்லாம் சுத்தப்படுத்தி மழையைக் கொண்டு வரும் அற்புத படைப்பு அவைதாம். ஆனால், அலட்சியத்தால் அவற்றை நாம் கண்டும்காணாமல் விட்டுவிட்டோம். இதனால் நிறைய பாரம்பர்ய மரங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தின் பாரம்பர்ய மரங்களில் ஒன்றான இலுப்பை மரமும் இப்போது அழிவின் விளிம்பில் சிக்கியிருக்கிறது. 1950-ம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் 30,000-க்கும் மேற்பட்ட மரங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், 2015-ம் ஆண்டுக் கணக்கின்படி 10.000-க்கும் குறைவான மரங்களே இருக்கின்றன மேலும் படிக்க..
‘மண்ணில்லா பசுந்தீவனம்’ கால்நடைகளுக்கு சிறந்த புரத உணவு
கோடை காலம் மட்டுமல்லாமல் அனைத்து தட்பவெப்ப சூழ்நிலையிலும் ‘மண்ணில்லா பசுந்தீவனம்’ கால்நடைகளுக்கு வழங்குவது சிறந்தது. செலவில்லாதது. பசுந்தீவனத்தில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் கறவை மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்கும். கோழிகள், ஆடுகள் விரும்பி உண்பதால் எடை அதிகரிக்கும் மதுரை விளாச்சேரி அருகே தட்டானுாரை சேர்ந்தவர் பொன்வைரன் மின் வாரிய ஓய்வு செயற்பொறியாளர். ஓய்வுக்கு பின் தனது 20 சென்ட் நிலத்தில் கோழி, கறவை மாடு, ஆடுகளை வளர்க்கிறார். இவைகளுக்கு முற்றிலும் மண்ணில்லா பசுந்தீவனத்தை உணவாக வழங்குகிறார். இதனால் மேலும் படிக்க..
மழைநீர் மேலாண்மையில் அசத்தும் கரூர் விவசாயி!
போதிய அளவு தென்மேற்கு, வடகிழக்குப் பருவ மழை பெய்தாலும், தமிழகத்தில் குறிப்பாக டெல்டாவில் நீர்ப் பற்றாக்குறையே நிலவுகிறது. இந்த வருடம் கர்நாடகம் மற்றும் தமிழக மேற்கு எல்லைப் பகுதிகளில் வரலாறு காணாத தென்மேற்குப் பருவமழை பெய்து, மேட்டூர் அணை நான்கு முறை நிரம்பியது. காவிரியில் இரண்டரை லட்சம் கன அடி தண்ணீர் போனாலும், காவிரியையொட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பல நீர்நிலைகள் வறண்டு கிடக்கும் சூழல். அந்த மாவட்டங்களில், `கடைமடைக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை’ என்று விவசாயிகள் கண்ணைக் மேலும் படிக்க..
வேப்ப மரம் வளர்த்தால் தப்பாது வருமானம்
veambu maram நன்றி: TNAU
20 மோசமான ரசாயன பூச்சிக்கொல்லிகள்
20 மோசமான ரசாயன பூச்சிக்கொல்லிகள் 20-Terrible-Pesticides-poster
கிழக்குத்தொடர்ச்சி மலையில் பெருஞ்சாம்பல் அணில்கள்!
அணில் வகைகளில் ஒன்றுதான் பெருஞ்சாம்பல் அணில் (grizzled giant squirrel). இவை அதிகமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான சின்னாறு வனவிலங்கு சரணாலயம், ஆனைமலை புலிகள் காப்பகம், பழனி மலைத்தொடர் போன்ற பகுதிகளில் இருப்பது மட்டும்தான் நமக்குத் தெரியும். ஆனால், இவை கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும் வசிப்பதாக புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. சமீபத்தில் சென்னைக்கு அருகேயுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சியில் காணப்படும் பாக்க மலையில் கள ஆய்வு ஒன்றை பாண்டிச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டியூட்டின் டாக்டர் பாலசந்தர் தலைமையில் ஒரு குழுவும் மற்றும் உள்நாட்டு பல்லுயுரி பாதுகாப்பு அமைப்பைச் சார்ந்தவர்களும் மேலும் படிக்க..
கோடையிலும் நிரம்பித் ததும்பும் ராமநாதபுரம் செவல்பட்டி ஊரணி!
வறண்ட பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல நூறு கிராமங்கள் தண்ணீர்த் தேவைக்காகக் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும் நிலையில், எப்போதாவது பெய்யும் மழை நீரைச் சேமித்துவைத்து குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கி முன்மாதிரி கிராமமாகத் திகழ்ந்துவருகிறது, `செவல்பட்டி’ கிராமம். ராமநாதபுரம் மாவட்டத்தின் எல்லையோர கிராமமாக அமைந்துள்ளது, செவல்பட்டி கிராமம். சாயல்குடியிலிருந்து சுமார் 14 கி.மீ தூரத்தில் உள்ள இந்தக் கிராமத்திலிருந்து 4 கி.மீ. தூரம் சென்றால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார் கடற்கரைப் பகுதி வந்துவிடும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் இந்தக் கிராமத்தின் பிரதான மேலும் படிக்க..
இளநீர் கழிவுகளில் இருந்து நார் தயாரிப்பு!
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், கிடங்கில் சேரும் குப்பையின் அளவை குறைக்கவும், மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இளநீர் கழிவுகளில் இருந்து, நார் தயாரிக்கும் திட்டத்தை, மாநகராட்சி துவங்கி உள்ளது. சென்னை மாநகராட்சியில், தினமும், 5,400 டன் குப்பை சேகரிக்கப்பட்டது. ‘பிளாஸ்டிக்’ பொருட்கள் தடைக்கு பின், 5,100 டன் என, குறைந்துள்ளது. பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் கிடங்கில் கொட்டும் குப்பையை, படிப்படியாக குறைக்க, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.மக்கும் குப்பையில் இருந்து உரம் மற்றும் எரிவாயு மேலும் படிக்க..
தென்னை ஓலை உரம்
வீணாகும் தென்னை ஓலைகளை இயந்திர உதவியுடன் இயற்கை உரமாக மாற்றும் தொழில்நுட்பம், தற்பொழுது விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. தென்னை சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை மரங்களில் இருந்து விழும் தென்னை ஓலைகள் வீணாக, விவசாய நிலங்களில் வைக்கப்பட்டிருக்கும் பல விவசாயிகள், அவற்றை எரிபொருள் பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் அனைவருக்கும் இது ஒரு சிறந்த வழியாக இருக்கும். தென்னை ஓலைகளை மண்ணில் மட்கச்செய்து, அவற்றை இயற்கை உரமாக மாற்றலாம். விவசாய நிலத்தில், சிறிய குழி தோண்டி, மேலும் படிக்க..
பாரம்பரிய விதை திருவிழா
பாரம்பரிய விதை திருவிழா விழுப்புரம் மாவட்டம், பசுமை இயற்கை விவசாய இயக்கம் வருகின்ற 2019 மே 18, 19-ம் தேதி அன்று பாரம்பரிய விதை திருவிழா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை முகவரி : ஜெயாசக்தி திருமண மண்டபம், பாண்டி – விழுப்புரம் ரோடு, விழுப்புரம் மாவட்டம். முன்பதிவு செய்ய : 7811897510 , 9790327890 பயிற்சியின் சிறப்பம்சங்கள் மேலும் படிக்க..
இயற்கை விவசாயத்தால் மீண்ட தெலங்கானா கிராமம்!
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை தெலங்கானாவில் (முன்னர் ஆந்திரத்தின் ஒரு பகுதி) உள்ள குண்டூர், வாரங்கல் பகுதிகளில் விவசாயிகள் அதிகமாகத் தற்கொலை செய்துகொண்டனர். பசுமைப் புரட்சியின் விளைவால் ஏற்பட்ட வேதியியல் உரங்கள் அப்போது பரவலாக இருந்ததுதான் அதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது. குண்டூர் பூச்சிக்கொல்லிகளின் கட்டுப்பாடற்ற பயன்பாடுகளில் முதல் இடத்தில் இருந்தது. அதற்கு அடுத்த இடத்தை வாரங்கல் மாவட்டம் பிடித்தது. ரசாயனத்தைக் கொட்டி செய்யப்பட்ட விவசாய நிலங்களில் கிடைத்த வருமானத்தைவிட உற்பத்தி செலவு அதிகரித்தது. இதுதவிர, பூச்சிகளால் மேலும் படிக்க..
மானாவாரியில் கைக்கொடுக்கும் நித்ய கல்யாணி
கோடை காலத்தில் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக நித்ய கல்யாணி கைக் கொடுத்து வருகிறது. இதனால் பருத்தி மக்காச்சோளத்திற்கு பதில் நித்யகல்யாணி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ராஜபாளையம் சுற்று வட்டாரப்பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கண்மாய் பாசனம் அதிகம். சிவலிங்காபும், குறிச்சியார்பட்டி, நல்லமநாயக்கர்பட்டி, கோபாலபுரம், வடகரை, பேயம்பட்டி, ஆர்.ரெட்டியப்பட்டி உள்ளிட்ட கிராமப்பகுதிகளிலும் மானாவாரி மற்றும் நீர் இருப்பு குறைவான இரவை பகுதிகளில் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, கம்பு, மிளகாய் போன்ற பயிர்களுக்கு மாற்றாக நித்ய மேலும் படிக்க..
நொதித்த ஆமணக்கு கரைசல் தயாரிப்பது எப்படி
nothitha-amanakku நன்றி:TNAU
இயற்கை விவசாயத்தில் பருத்தி பூச்சி கட்டுப்பாடு
பருத்தி பயிரை தான் பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன. பருத்தி பயிரில் தான் அதிக அளவில் ரசாயன பூச்சி மருந்துகள் பயன் படுத்த படுகின்றன இந்த பயிரில் இயற்கை முறையில் பல மாநிலங்களில் எப்படி பூச்சிகளை கட்டுப்படுத்துகிறாரகள் பார்ப்போமா? கைவினை முறை சாணி கொண்டு பூஞ்ச நீக்கம் செய்து, பூச்சியினால் சேதாரம் அடைந்த விதைகளை நீக்குதல், செடியில் புழுக்களை கையில் சேகரித்தல் அழித்தல், சேதாரம் அடைந்த பயிர் பாகத்தை நீக்குதல். பயிர்சுழற்சி முறை வயலில் களைகளை நீக்கி எப்போது மேலும் படிக்க..
எளிதாக, நீரில் கரையும் இயற்கை உரம் தயாரிக்கும் முறை
Liquid Fertilizer Preparation நன்றி: TNAU
‘கார்பைட்’ கற்களால் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் கண்டறிவது எப்படி?
‘கார்பைட்’ கற்களால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், உடல்நல பாதிப்பை உண்டாக்கும் என்பதால், பழங்கள் கவனமாக தேர்வு செய்ய வேண்டுமென, உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், ரோட்டோரங்களில், மலைபோல மாம்பழங்கள் குவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. கொள்ளை லாபத்துக்கு ஆசைப்படும் வியாபாரிகள், காய்களை அதிக அளவில் கொள்முதல் செய்து, அவற்றை ‘கார்பைட்’ கற்கள் வைத்து பழுக்க வைக்கின்றனர். இவ்வாறு, பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், கடுமையான உடல் நலக்குறைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மேலும் படிக்க..
மக்காச்சோளத்தை சூறையாடும் படைப்புழு!
‘ராபி பருவத்தில் மக்ககாச்சோள சாகுபடி செய்யும் விவசாயிகள், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,’ என, தெற்கு வேளாண் துறை எச்சரித்துள்ளது.பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில், ஆண்டுதோறும் அக்., நவ., மாதங்களில், 500 – 550 எக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. ராபி பருவத்தில் மக்காச்சோள சாகுபடி செய்ய உள்ள தெற்கு வட்டார விவசாயிகள், நடப்பு காரிப் பருவத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நர்கீஸ் கூறியதாவது: அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட மேலும் படிக்க..
கல்லாறு பழப்பண்ணையில் 2 லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு ready
மேட்டுப்பாளையம் கல்லாறு அரசு தோட்டக்கலைத்துறை பழப்பண்ணையில், பல்வேறு வகையான, 2 லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.மேட்டுப்பாளையம் – ஊட்டி மெயின் ரோடு கல்லாற்றில், குன்னுார் மலை அடிவாரத்தில், 25 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு தோட்டக்கலைத்துறை பழப்பண்ணை உள்ளது. இங்கு பழங்களின் ராணி என அழைக்கப்படும் ‘மங்குஸ்தான்’, பலா, ரம்பூட்டான், லிட்சி, துரியன் ஆகிய பழமரங்கள் உள்ளன. வாசனை திரவிய பயிர்களான மிளகு, ஜாதிக்காய், கிராம்பு, லவங்கம் மற்றும் பாக்கு, காபி, இலவம்பஞ்சு, கோகோ உள்ளிட்ட பல்வேறு வகை மேலும் படிக்க..
உயிர் வேலிகளின் சிறப்பு
நிலத்தை பாதுக்காப்பதில் உயிர் வேலிகளின் பங்கு அதிகம். முன்பெல்லாம், தானாகவே வளர்ந்து உயிர் வேலி செடி காணப்படும். ஆனால் மரங்கள் இப்போது கால மாற்றத்தினால் நிலத்தை சுற்றி சிமெண்ட் சுவர்களை அமைக்கின்றனர். அவற்றை விட உயிர் வேலி நன்மைகள் பயப்பவை. உயிர் வேலி அமைக்கும் பகுதியில் உள்ள மரங்கள் நிலத்திற்குள் வரும் காற்றை தடுக்கும் தடுப்பானாகவும் அமையும். உயிர் வேலிகளுக்கு மண் அரிப்பு, காற்று அரிப்பை தடுக்கும் சக்தி உண்டு. உயிர் வேலிகள் நிலத்தில் உள்ளே நாம் மேலும் படிக்க..
இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி
இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி 2019 மே 19-ம் தேதி அன்று இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை முகவரி : வேளாண் சோலை, மேவாணி, கோபி, ஈரோடு மாவட்டம். தொடர்புக்கு : 8300093777 , 9442590077 பயிற்சியின் சிறப்பம்சங்கள் : இப்பயிற்சியில் ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், பத்திலை கஷாயம் உட்பட 12 வகையான மேலும் படிக்க..
தொழில்நுட்ப களப்பயிற்சி
தொழில்நுட்ப களப்பயிற்சி வருகின்ற 2019 மே 11,12-ம் தேதி அன்று இயற்கை விவசாய முறையில் கீரை காய்கறிகள் சாகுபடியில் நேரடி நிலத்தில் தொழில்நுட்ப களப்பயிற்சி என்ற தலைப்பில் விழுப்புரம் மாவட்டம், பசுமை சோலை பண்ணையில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் நாள் : 11.05.2019 – 12.05.2019 பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பயிற்சி கட்டணம் : மூன்று நாள், உணவு தங்கும் மேலும் படிக்க..
14 ஏக்கர் நெல் இயற்கை சாகுபடி… நல்ல லாபம்!
நஞ்சில்லா உணவு, இயற்கை வேளாண்மை குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வரும் சூழ்நிலையில்… வேறு தொழிலில் உள்ள பலரும் தங்களது முன்னோர் செய்து வந்த வேளாண்மையைக் கையிலெடுத்து இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் சீனிவாசன் மற்றும் சங்கர் ஆகியோர், தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள கச்சக்கட்டுக் கிராமத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறார்கள். நிர்வாகத் திறனும் தீவிரமான கண்காணிப்பும் இருந்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் விவசாயத்தைச் செய்ய முடியும் என்று மேலும் படிக்க..
பணம் கொட்டும் ஸ்பைருலினா பாசி வளர்ப்பு!
சுருள்பாசி எனப்படும், ‘ஸ்பைருலினா’ வளர்ப்பு பண்ணை நடத்தி வரும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுப்பையா கூறுகிறார் : ‘மாஸ்டர் டிகிரி’ முடித்த நான், சிங்கப்பூர் போய், ஹோட்டல் நடத்தினேன். ஹோட்டலுக்கு வரும் நிறைய பேர், கையில், ‘சயனோ பாக்டீரியா’ என்ற மாத்திரை டப்பா வைத்திருப்பர். பச்சை கலரில் இருக்கும் அந்த மாத்திரை அல்லது ‘கேப்ஸ்யூலை’ சாப்பிட்ட பிறகே, காலை உணவு சாப்பிடுவர். இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவரிடம் கேட்டதற்கு, ‘இதன் பெயர், ஸ்பைருலினா. ஊட்டச்சத்து, தாதுச்சத்து, புரதம் நிறைந்தது. மேலும் படிக்க..
கறவை மாடுகள் பராமரிப்பு
கறவை மாடுகள் சினைக்கு வந்தவுடன், 18 மணி நேரத்தில், செயற்கை கருவூட்டல் ஊசி போட வேண்டும் என, கால்நடை துறையினர் தெரிவித்தனர். இது குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர், கோபி கூறியதாவது: கறவை மாடுகளுக்கு, சினை பருவத்திற்குரிய அறிகுறிகள், காலை நேரத்தில் தென்பட்டால், மாலை நேரத்திலும்; மாலை நேரத்தில் தென்பட்டால், காலை நேரத்திலும், செயற்கை கருவூட்டல் ஊசி போட வேண்டும். அறிகுறி தெரிந்த, 18 மணி நேரத்திற்குள், மாடுகளை தனி இடத்தில் மேலும் படிக்க..
பனை மரங்களில வருவாய் ஈட்டலாம்
வரப்பு ஓரங்களில், பனை மரங்களை நட்டால், பல விதங்களில் வருவாய் ஈட்டலாம். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், பெரும்பாலான விவசாயிகள், ஏரி மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி தான் நெல் பயிரிடுகின்றனர். கோடை காலங்களில், நெல், காய்கறி பயிர்களை சாகுபடி செய்வது குறைவு தான். இதுபோன்ற காலங்களில், வருவாய் இன்றி நிலம் தரிசாக இருக்கும்.அவ்வாறு இருப்பதை தவிர்க்க, வரப்பு ஓரங்களில் பனைமரம் நட்டு வைத்தால், கோடை காலங்களிலும் வருவாய் கிடைக்கும். இது குறித்து, வயல் ஓரத்தில் பனை மரம் மேலும் படிக்க..
கோடை உழவு செய்தால் இயற்கை வளம் பெருக்கலாம்
கோடை உழவு செய்தால், நிலத்தில், இயற்கை வளங்களை மேம்படுத்தலாம்.காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சிலர், அதிகமாக நெல் பயிரை பயிரிடுகின்றனர். கோடை காலங்களில், தண்ணீர் பற்றாக்குறையால், நெல் சாகுபடி செய்வதை சிலர் நிறுத்திவிடுவர். அவ்வாறு செய்யும் விவசாயிகள், தங்களின் நிலங்களை தரிசாக போடாமல், கோடை உழவு – புழுதி ஓட்டுதல் செய்து வைத்தால், நிலத்தில் இருக்கும் இயற்கை வளங்களை மேம்படுத்துவதற்கு உதவும் என, வேளாண் வல்லுனர்கள் தெரிவித்தனர். இது குறித்து, காஞ்சிபுரம் வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர், மேலும் படிக்க..
வரும் நீர் நெருக்கடி – 2 – கோயில் குளங்கள் எப்படி உதவ முடியும்?
சரி, கோயில் குளங்களை சுத்தம் படுத்தினால் நல்லதுதான். எப்படி செய்வது என்கிறீர்களா? தமிழ்நாட்டிலேயே நடந்த ஒரு நிகழ்வை அறிந்து கொள்வோம். இது Down to earth என்ற இணையத்தளத்தில் பதிவாகி உள்ளது.. இந்த கோயில் குளம் காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பம்மல் ஊருல அகிஈஸ்வரன் சிவன் கோயில் குளம். சென்னையில் உள்ள எஸ்னோரா என்ற நிறுவனம் அந்த ஊரில் இருந்த மக்களோடு சேர்ந்து இந்த குளத்தை உயிர்பித்தது. எஸ்னோரா நிறுவனத்தை மேலும் படிக்க..
வரும் நீர் நெருக்கடி!! – 1
இந்தியாவில் உணவு பற்றாக்குறை குறைந்து இருக்கலாம். ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் நம் முன்னால் பயங்கரமாக எதிர்கொள்ள போகிற நெருக்கடி என்ன தெரியுமா? நீர் நெருக்கடி.. இந்த சில செய்திகளை நீங்கள் படித்தாலே தெரியும், நீர் பற்றாக்குறை எந்த அளவு உள்ளது என்று. அதை தவிர ஒரு சாதாரண குடும்பம், லாரி நீர், குடிக்க நீர் என்று மாதத்திற்கு 3000 ரூபாய் செல்வு செய்வது என்பது இப்போது சாதாரணம். எப்படி இங்கு நாம் வந்து சேர்ந்து உள்ளோம்? மேலும் படிக்க..
குறைந்து வரும் காவேரி நீர்
காவேரியில் சேரும் ஹாரங்கி காபினி ஆகிய நதிகளில் குறைந்து வரும் நீர் பற்றி இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது… இது குறைந்து வரும் மழையினால் வந்த விளைவு. தமிழ்நாடு கோர்ட்டு கேசு என்று அலையாமல் தன கையே தனக்கு உதவி என்று இருக்கும் ஏரிகளை ஆழப்படுத்துதல், வாய்க்கால்களை சுத்தப்படுத்துதல், மழைநீரை சேகரித்தல், நீரை உறுஞ்சி சோடா தயாரிக்கும் கம்பெனிக்களை மூடுதல், என்று பலவகையில் முயற்சித்தால் தான் விடிவு.. Writing on wall என்பர் ஆங்கிலத்தில். கண்ணுக்கு முன்னாள் இருக்கும் மேலும் படிக்க..
மானாவாரி பயிர் சாகுபடியில் உயிர் உரங்கள் பயன்படுத்த ‘அட்வைஸ்’
]மானாவாரி பயிர்களுக்கு உயிர் உரங்களை பயன்படுத்த, வேளாண்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், தென்னை, நெல், வாழை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பி.ஏ.பி., மற்றும் கிணற்று பாசனம் வசதி பெறாத இடங்களில், மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.நான்கு மாதத்துக்கு ஒரு முறை என ஆண்டு தோறும், ஆறாயிரம் ஏக்கருக்கு மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்து பயிர்களும், சோளம், மக்காச்சோளம், பாசிப்பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பயறுவகை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் படிக்க..
உரமாகும் கொளுஞ்சி செடிகள்
நெல் நடவுக்காக நுண்ணுாட்ட சத்துக்களை நிலத்திற்கு வழங்க, விவசாயிகள் சணல்பூ எனும் கொளுஞ்சி செடிகளை அதிகளவில் வளர்த்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் கோடை உழவில் நெல் பயிரிட தங்கள் வயல்களை செப்பனிட்டு வருகின்றனர். நெல் நடவுக்கு முன்னதாக நிலத்தில் நுாண்ணுாட்ட சத்துக்களை ஏற்றுவதற்காக, விவசாயிகள் சணல்பூ செடிகளை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இந்த செடிகளில் பூக்கள் வருவதற்கு முன் பறித்து, நெல் நடவு செய்ய உள்ள நிலத்தில் போட்டு உரமாக்கி உழவு பணிகளை மேற்கொள்வர். உழவு மற்றும் மேலும் படிக்க..
சின்ன வெங்காயம்…பெரிய லாபம்!
குறுகிய காலத்தில் மகசூல் கொடுக்கும் பயிர்களில் கீரைகளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது வெங்காயம். ஆட்சியையே கவிழ்க்கும் ஆற்றல் உள்ள வெங்காயம், விவசாயிகளுக்கு ‘அதிர்ஷ்டமான பயிர்’தான். எப்படியாவது ஆண்டுக்கு இரண்டு முறையாவது இதன் விலை உச்சத்துக்குச் சென்று விவசாயிகளுக்கு நல்ல லாபம் ஈட்டிக் கொடுத்து விடும். தவிர, இதை இருப்பு வைத்து விற்க முடியும் என்பதும், கூடுதல் நன்மை. அதனால்தான் பல விவசாயிகள் வெங்காய சாகுபடியில் ஈடுபட்டு நல்ல லாபம் பார்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் ஒருவர்தான், இயற்கை மேலும் படிக்க..
வறட்சி சூழலில் பயிரை தாக்கும் பூச்சிகள்
விவசாயிகள் பலர் நீர் வசதி உடைய இடங்களில் சிறிய அளவில் காய்கறி பயிர்கள், மலர் பயிர்கள் சாகுபடி செய்து வருகிறார்கள். வெப்ப நிலை, கடும் வறட்சியான சூழலில் அதிகம் இருந்தாலும், இத்தகைய பருவத்தில் வெகு வேகமாக தனது இனத்தைப் பெருக்கும் குணம் கொண்ட தீய பூச்சிகள் பல உள்ளன. கண்ணுக்கு புலப்படாத சிறு பூச்சிகள் ‘மைட்ஸ்’ எனப்படும் சிலந்திகள் பயிர்களின் சாற்றை உறிஞ்சும் குணம் கொண்டவை. அசுவினி எனப்படும் தாய், குஞ்சுகளுடன் பயிரின் நுனிப்பகுதிகளில் அமர்ந்து கூட்டம், மேலும் படிக்க..
செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய வழிமுறைகள்!
ஈஷா விவசாயக்குழு கோபிச்செட்டிப்பாளையம் அருகில் TN பாளையத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி திரு.ஆறுமுகம் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. குறைந்த நிலத்தில் வாழையையும் மஞ்சளையும் பயிரிட்டு நிறைவான வகையில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார். அவரது அனுபவங்களும், ஆலோசனைகளும் உங்களுக்காக! வணக்கம் ஐயா, நீங்கள் எவ்வளவு வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறீர்கள்? வணக்கம், திண்டுக்கல்லில் 2007ம் வருடம் நடைபெற்ற சுபாஷ் பாலேக்கர் ஐயா அவர்களின் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயப் பயிற்சியில் கலந்து கொண்டேன், அதன் மேலும் படிக்க..
பந்தலுக்குள் வெங்காய சாகுபடி
பாசனத்துக்கு நீர் இருந்தும், சுட்டெரிக்கும் வெயிலால், பந்தல் சாகுபடியில் இருந்து, குறுகிய கால வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கால்சியம் சத்துமிக்க, சுண்ணாம்புக்கல் நிலத்தில் வெங்காயம் மட்டுமல்ல, தென்னை சாகுபடியும் வளமாகத்தான் இருக்கும். ஆனால், பெரும்பாலான விவசாயிகள், இருக்கும் சிறிதளவு நீரை பயன்படுத்தி, பந்தல் காய்கறி சாகுபடியே மேற்கொண்டு வருகின்றனர். கத்தரி வெயிலுக்கு முன்பே, சுட்டரிக்கும் கோடை வெயிலால் பந்தல் சாகுபடி பாதிப்பதால், சுதாரித்துக் கொண்ட சேரிபாளையம் விவசாயி மயில்சாமி குறுகிய கால மாற்றுப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளார். மேலும் படிக்க..
தின வருமானம் தரும் காய்கறிச் சாகுபடி
வறட்சி மிகுந்த அரியலூர் மாவட்டத்தில், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வளவெட்டிக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி சுப்பிரமணியன்.இவர், தனது குடும்பத்தினருடன் சுமார் 7 ஆண்டுகளாகக் காய்கறிச் சாகுபடியில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார். இவருக்கு உறுதுணையாக இவருடைய மனைவி மலர்க்கொடி, மகன் அழகுதுரை ஆகியோரும் விவசாயப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். தத்தனூரிலிருந்து சுத்தமல்லி செல்லும் சாலையில் உள்ள அவரது தோட்டத்தில் தற்போது சுரைக்காய், புடலை, வெண்டை, கடலை ஆகிய பயிர்களைச் சாகுபடி செய்துள்ள அவர்கள், நாள் முழுவதும் தோட்டத்திலேயே வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் படிக்க..
அதிக வருமானம் தரும் ‘சீனி துளசி’
சீனி துளசி என்று அழைக்கப்படும் ‘ஸ்டீவியோ ரியோடியானா’ ஒரு மருத்துவப்பயிர். இது சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்தது. இப்பயிரில் இருந்து எடுக்கப்படும் ‘ஸ்டீவியோ சைட், ரிபோடிசைட்’ எனும் பொருள் சர்க்கரைக்கு மாற்றாக மிகக்குறைந்த அளவு சர்க்கரை மற்றும் மாவு சத்து கொண்ட இந்த துளசி நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சீனி துளசியில் தேவையான பொருள் இலைகள் மட்டுமே. பூக்கள் பூத்தால் செடியின் வளர்ச்சி நின்று விடும். பூக்கள் தென்படும் போதெல்லாம் நுனியை கிள்ளி பூக்களை எடுத்து விட்டால் மேலும் படிக்க..
350 மாடுகள், 20 ஏக்கர் பண்ணை… நேரடி பால் விற்பனை…
30 வருட சிங்கப்பூர் வாழ்க்கைக்கும், சர்வதேச நிறுவன வேலைக்கும் பை சொல்லி புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி 20 ஏக்கரில் நவீன ஹைடெக் பால்பண்ணையை அமைத்து அசத்திவருகிறார் தீபக் குப்தா. பஞ்சாப்பைச் சேர்ந்த தீபக் குப்தா, பட்டப்படிப்பை முடித்து சிங்கப்பூரில் பணியில் சேர்ந்தார். 30 ஆண்டுகள் தொடர்ந்து உணவு தொடர்பான நிறுவனத்தில் பணியாற்றினார். அதன் பின்னர், இந்தியாவில் சொந்த மாநிலமான பஞ்சாப் வந்த அவர், `ஹிமாலயன் கீரிமரி’ என்ற பெயரில் பால் பண்ணை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார். சிங்கப்பூரில் மேலும் படிக்க..
மனிதன் அழித்து வரும் மிருகங்கள் – 1 – பனி கரடி
உலகம் வெப்பம் ஆவதால் வட துருவம் உருகி கொண்டு இருக்கிறது. இன்னும் 50 ஆண்டுகளில் வட துருவம் நன்றாக உருகி கப்பல்கள் செல்லும் நிலை வந்து விடும். இங்கே மட்டுமே வாழும், குழந்தைகளுக்கும் பெரியோர்க்கும் பிடித்த அழகான பனி கரடி தன இறுதி நாட்களை எண்ணி கொண்டு இருக்கிறது. பனி உருகுவதால் இவற்றின் உணவு வாழ்க்கை முறைக்கு பங்கம் வந்து விட்டது. மனிதன் தன செயல்கலால் அழித்து வரும் மிருகங்களில் லிஸ்டில் முதல் இது – பனி மேலும் படிக்க..
மதிப்பு ஊட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
மதிப்பு ட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி கடலு}ர் மாவட்டம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் வருகின்ற 2019 ஏப்ரல் 25-ம் தேதி அன்று மதிப்பு ஊட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை முகவரி : கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், குண்டு மேலும் படிக்க..
மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி பயிற்சி
மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி பயிற்சி நாமக்கல் மாவட்டம், வேளாண் அறிவியல் மையம் சார்பாக வருகிற 2019 ஏப்ரல் 24-ம் தேதி அன்று மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி பயிற்சி என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை முகவரி : வேளாண் அறிவியல் நிலையம், மோகனு}ர் ரோடு, நாமக்கல் – 637001. தொடர்புக்கு : 04286266345 , 04286266650 பயிற்சியின் சிறப்பம்சங்கள் மேலும் படிக்க..
தோட்டக்கலைப் பயிர்வளர்ப்பு பயிற்சி
தோட்டக்கலைப் பயிர்வளர்ப்பு பயிற்சி சென்னை மாவட்டம், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகாம் சார்பாக 2019 ஏப்ரல் 20 முதல் மே 31-ம் தேதி வரை தோட்டக்கலைப் பயிர்வளர்ப்பு பயிற்சி என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி கட்டணம் : ரூ.300 முகவரி : தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகாம், 3 வது தளம், வேளாண்மை வளாகம், சேப்பாக்கம், மேலும் படிக்க..
இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி
இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி திருவண்ணாமலை மாவட்டம், ஈஷா இயற்கை விவசாயப் பண்ணை சார்பாக 2019 ஏப்ரல் 28-ம் தேதி அன்று இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி கட்டணம் : ரூ.300 முகவரி : ஈஷா இயற்கை விவசாயப் பண்ணை, நல்லவண்பாளையம், திருவண்ணாமலை மாவட்டம். தொடர்புக்கு : 9442590077 பயிற்சியின் மேலும் படிக்க..
சோலார் மின்திட்டத்தில் பயிர் சாகுபடி
கிணத்துக்கடவு அடுத்த கல்லாபுரத்தில், சோலார் மின்திட்டத்தை பயன்படுத்தி, மூன்று ஏக்கர் விளைநிலத்தை பசுமையாக மாற்றியுள்ளார் விவசாயி.கிணத்துக்கடவு மேற்கு பகுதியில், கோடை காலத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. ஆனால், நடப்பு ஆண்டு கிணறுகள், ஓடைகள், சிறு குட்டைகளில் நீர் இருந்தும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, பயிர்களும், காய், பழங்கள் வெதும்பி, மார்க்கெட்டில் விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கிணத்துக்கடவு அடுத்துள்ள கல்லாபுரத்தில் உள்ள மானாவாரி நிலம், பயிர் வளத்துடன் பசுமையாக காட்சி அளிக்கிறது.கோவை, சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் மேலும் படிக்க..
தென்னந்தோப்பில் பலன் தரும் ஊடுபயிர்!
ஒவ்வொரு தென்னந்தோப்பும் தனி உலகம். அதில் கட்டாயம் பல பயிர் சாகுபடி செய்தே ஆக வேண்டும். குறிப்பாக பல அடுக்குப் பயிர்கள், பந்தல் வகைப் பயிர்கள், மலர் பயிர்கள், தீவனப் பயிர்கள், மல்பெரி, பழவகை பயிர்கள், உயரமாக வளரும் பயிர்கள், மூலிகைப் பயிர்கள், வாசனை பயிர்கள் இப்படி கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட பல்வேறு தாவரங்கள் வளர உகந்த சூழல் அனைத்து தென்னந்தோப்புகளிலும் உள்ளன. நீர் பற்றாக்குறை, வேலை ஆட்கள் கிடைக்கவே இல்லை, என் தோட்டத்தில் எதுவும் வராது, மேலும் படிக்க..
தோல் பதனிடும் மற்றும் சாயப்பட்டறையினால் இறந்த நதிகள்!
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் ஒன்றான ஈரோடு, விவசாயத்திற்கும் தொழில்வளத்திற்கும் அறியப்பட்ட மாவட்டங்களில் ஒன்று. காவிரி, பவானி, நொய்யல் என மூன்று ஆறுகள் பாய்வதால் விவசாயம் செழித்து வளர்ந்த பூமியாக விளங்கியது இந்த மாவட்டம். கரும்பு, மஞ்சள், நெல் என வளம் கொழிக்கும் பகுதி. பிறகு, விசைத்தறி, பின்னலாடைத் தொழிலில் ஏற்பட்ட வளர்ச்சியும் அருகில் உள்ள கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தித் தொழிலில் ஏற்பட்ட வளர்ச்சியும் ஈரோட்டில் பெரும் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தியது. இங்குள்ள நீர்வளம் பெரும் மேலும் படிக்க..
மாட்டு சாணத்தில் நல்ல வருவாய்!
நாட்டு மாடுகளின் சாணத்திலும், விபூதி தயாரித்து வருவாய் ஈட்டலாம்.காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக, ஆடு, மாடு, கோழி ஆகிய கால்நடை வளர்ப்பு தொழில் சிறப்பாக இருக்கிறது. உழைப்பிற்கு ஏற்ப, வருவாய் கிடைக்கிறது. அந்த வரிசையில், மாடுகளின் சாணம் மற்றும் கோமியம் உள்ளிட்ட கழிவுகளில் இருந்தும் வருவாய் ஈட்டலாம் என, நாட்டு மாடு வளர்க்கும் விவசாயிகள் தெரிவித்தனர். சாணத்தில் விபூதி தயாரிக்கும், அச்சிறுபாக்கம் அடுத்த, கூடலுார் கிராமத்தைச் சேர்ந்த, டி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: எங்கள் அறக்கட்டளை சார்பில், நாட்டு மேலும் படிக்க..
காய்ந்து உதிரும் இலைகளை வைத்து உரம் தயாரிப்பு!
பூங்காக்களில் உள்ள மரங்களில் இருந்து காய்ந்து உதிரும் இலைகள், வீணாக குப்பைக்கு செல்வதை தடுத்து, பிளாஸ்டிக் தொட்டி மற்றும் மூங்கில் கட்டமைப்பு அமைத்து, உரம் தயாரிக்கும் நடவடிக்கைகளை, சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், பூங்காக்கள் துாய்மையாகவும், இயற்கை உரத்தின் மூலம், மரம், செடிகள் பசுமையாகவும் மாறும் என்பதால், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சியில், 525க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பூங்காக்களில், அடர்த்தியான மரங்கள், நடைபாதை, மேலும் படிக்க..
தின வருமானம் தரும் கோழிக்கொண்டை பூ
பல்வேறு வகையான பயிர்களைச் சாகுபடி செய்வதால் அதிக லாபத்தையும் பெற முடியும். இந்த முறையில் விவசாயி சொக்கலிங்கம் கோழிக்கொண்டை பூ பயிர் சாகுபடி செய்து, அதில் அதிகப்படியான லாபத்தையும் பெற்று வருகிறார். அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் அருகேயுள்ள தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சொக்கலிங்கம். இவர், தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் வாழை, முருங்கை, கத்தரி, சம்பங்கி உள்ளிட்ட பயிர்களை சாகுபடிசெய்து வரும் நிலையில், சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ள கோழிக்கொண்டை பூ அவருக்கு மேலும் படிக்க..
தென்னை நார்க்கழிவு உரம்
தென்னை நார்க்கழிவு தண்ணீரை ஈர்த்து வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது. அதே போல் களர்நிலங்களை திருத்தும் பண்புடையவை தான் தென்னை நார்க்கழிவுகள். அதை பற்றி காண்போம். தென்னை நார்க்கழிவு அதன் எடையைக் காட்டிலும் 5 மடங்கு நீரை ஈர்த்து வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது. தென்னை நார்க்கழிவு மண் திருத்தியாகவும், மானாவாரி நிலங்களில் ஈரப்பதம் காத்திடும் நிலப்போர்வையாகவும் பயன்படுகிறது. கடின மண்ணை பொலபொலப்பாக மாற்றவும் உதவுகிறது. தென்னை நார்க்கழிவில் தழைச்சத்து 0.21-0.30 சதவீதம், மணிச்சத்து 0.09-0.10 சதவீதம், மேலும் படிக்க..
வளம் பெருக்கும் vermiwash!
மண் வளம் பெருக மண் புழுக்கள் பெரிதும் உதவுகின்றன. மண் புழுக்கள் கிடைக்க பயிர்கழிவுகளை உட்கொண்டு நன்மை செய்கின்றன. பயிர் வளர ஊக்கியாக செயல்படும். மண் புழுக்களின் உடலின் வெளிப்புறம் ஈரமாக வைத்திருக்க, அவை வியர்வை போன்ற திரவத்தை மெதுவாக வெளியிடுகின்றன. இத்திரவத்தை சேகரித்து பயன்படுத்தும் உத்திதான் ‘மண் புழுக்குளியல் நீர் தயாரித்தல்’ ஆகும். இதை ஆங்கிலத்தில் ‘வெர்மி வாஷ்’ என்பர். மண்புழுவை ஒரு தொட்டியில் அல்லது பானையில் வளர்த்து, அதன் அடிப்பாகத்தில் மூன்று அல்லது நான்கு மேலும் படிக்க..
வறட்சியில் தீவனம் வழங்குவது எப்படி?
அகத்தி, வேம்பு, பூவரசு, கருவேல், குடைவேல், பலா, கொடுக்காப்புளி, ஆல், அரசு, உதியன், இலந்தை போன்ற மரங்களின் இலைகளை வறட்சியின் போது தீவனமாகக் கால்நடைகளுக்கு தரலாம். மர இலைகளை தீவனமாக வழங்கும்போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன்படி மர இலைகளை பிற புல் வகைகள் மற்றும் உலர்ந்த தீவனங்களுடன் சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும். வழங்குவதற்கு முன் 6:00 மணி முதல் 8:00 மணி நேரம் இலைகள் வாட வேண்டும். உலர வைத்து ஈரப்பதம் 15 மேலும் படிக்க..
ஜாதிக்காய் மகத்துவங்கள்
ஜாதிக்காய் ஆங்கிலத்தில் Nutmeg என்று அழைக்கப்படும். இதன் தாவர இயல் பெயர் Myristica fragrans ஜாதிக்காய் இலங்கையிலும், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகின்றது. பசுமையான சோலைகளில் காணப்படக்கூடியது. ஜாதிக்காய் இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை, பெரியவை. ஆண், பெண் பு க்கள் தனித்தனியானவை. ஜாதிக்காய் சதைப்பற்றுள்ளது. மெல்லிய ஓட்டால் மூடப்பட்டிருக்கும். ஜாதிக்காய் பழங்கள் மிகவும் மணமுள்ளவை. ஜாதிக்காய் பழங்கள் மேலே பழுப்பு நிறமாகவும், உட்புறம் சதைப்பகுதி நிறைந்ததாகவும் இருக்கும். ஜாதிக்காய் தோலை நீக்கி உபயோகிக்கப்படுகின்றது. மேல் தோல் மேலும் படிக்க..
மதிப்பு ட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
மதிப்பு ட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி கடலுர் மாவட்டம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக வருகின்ற 2019 ஏப்ரல் 25-ம் தேதி அன்று மதிப்பு ட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை முகவரி : கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மேலும் படிக்க..
கறவைமாடு, வெள்ளாடு, நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
கறவைமாடு, வெள்ளாடு, நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு விதமான பயிற்சிகள் குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இம்மையத்தில் பல்கலைக்கழக சான்றிதழுடன் கூடிய, ஒருமாத கால, கறவை மாடுகள், வெள்ளாடு மற்றம் நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் புதிய பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளது. பயிற்சி நடைபெறும் நாள் : ஒரு மாத காலம் பயிற்சி மேலும் படிக்க..
நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி கடலு}ர் மாவட்டம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக வருகின்ற 2019 ஏப்ரல் 2-ம் தேதி அன்று நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை முகவரி : கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், குண்டு சாலை, செம்மண்டலம், கடலுர் மாவட்டம் – 607001. மேலும் படிக்க..
அழிந்து வரும் மண்வளம் – ஒரு பெரும் அபாயம்
ஒரு இன்ச் மண் (top soil) உருவாக்க இயற்கைக்கு 1000 வருடங்கள்தேவை ஆகிறது. Top soil மண் நிலத்தில் 5 இன்ச் வரை மேலே இருந்து இருக்கும் மண். இதில் தான் தாவரங்களுக்கு தேவையான எல்லா சத்துக்களும், நுண்ணுயிரிகளும் இருக்கின்றன. ஆனால, நம் தலைமுறை மேல் மண்ண வெகு வேகமாக இழந்து வருகிறோம். இதே வேகத்தில் நாம் மேல் மண்ணை இழந்தால் 60 ஆண்டுகளில் விவசாயமே செய்ய முடியாது என்கிறது உலக உணவு நிறுவனம். (UN Food மேலும் படிக்க..
சிறுதானிய விவசாயம்… எவ்வளவு லாபம்?
விழுப்புரம் மாவட்டம் கண்டேன்மானடி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அவர்களின் இயற்கை விவசாய அனுபவங்களைத் தொடர்ந்து, சிறுதானிய சாகுபடி குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்… சிறுதானிய சாகுபடியை எத்தனை வருடங்களாக செய்து வருகிறீர்கள்? தேனையும் தினை மாவையும் உண்டு நம் முன்னோர்கள் சிறப்பாக வாழ்ந்ததை இலக்கியங்கள் எடுத்துக் கூறுகிறது. தமிழகத்தில் பரவலாக நடைபெற்ற சிறுதானிய சாகுபடி தற்போது ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சாகுபடி செய்யப்படுகிறது. நான் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தாலும் சிறுதானியங்களை நான் மேலும் படிக்க..
ஒருங்கிணைந்த பண்ணையம் :ஒன்றின் கழிவு இன்னொன்றின் மூலப்பொருள்!
விவசாயத்தில் ஒரு பயிரை மட்டும் பயிரிடாமல் பல பயிர்கள் அல்லது பண்ணையத் தொழிலை செய்து வந்தனர் நம் முன்னோர். அதேபோல அந்தந்தப் பகுதிகளில் விளையும் பொதுவான காய்கறிகளைப் பயிரிட்டு கணிசமான லாபத்தையும் சம்பாதித்து வந்தனர். நம் முன்னோர்களின் விவசாயத்தைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், ஒரு விவசாயி நிச்சயமாக இரண்டு மாடுகள், இரண்டு ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட பலவற்றையும் வைத்திருப்பதைப் பார்க்க முடியும். நிலத்தில் குறைந்தது இரண்டு வகையான காய்கறிகள், நெல், வயலைச் சுற்றிலும் அல்லது வரப்பின் ஓரங்களில் தென்னை மற்றும் மேலும் படிக்க..
அசோலா கால்நடை தீவனம்: உற்பத்தியும், பயன்களும்
பால் உற்பத்தியில் நமது நாடு உலகளவில் முதலிடம் வகித்தாலும், கறவை மாடுகளின் உற்பத்தித்திறன் குறைவாகவே உள்ளது. உதாரணமாக, மேலை நாட்டுக் கறவை மாடு ஒன்றிலிருந்து பெறப்படும் பாலின் அளவு நம் நாட்டு மூன்று கறவை மாடுகள் கறக்கும் பால் அளவுக்கு ஈடாகிறது. நமது மாடுகளின் பால் உற்பத்தித் திறன் குறைவாக உள்ளதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், தீவனப் பற்றாக்குறை மற்றும் சமச்சீர் தீவனம் அளிக்காததே முக்கியக் காரணமாகும். பால் உற்பத்தியில் 70 சதவீதம் தீவனத்திற்கே செலவாகிறது. குறைந்த மேலும் படிக்க..
நஷ்டமின்றி விவசாயம் செய்கிறேன்!
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் – பெரியபாளையம் சாலையில், பண்ணை நடத்தி வரும், அனுராதா கூறுகிறார்: சவுதி அரேபியா நாட்டில் பணிபுரிந்த நானும், என் கணவரும், ஆறு ஆண்டுகளுக்கு முன், இந்தியா வந்தோம். திரும்ப அவர் மட்டும் கிளம்பி சென்ற நிலையில், இங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்த நான், அதை விட்டு, இயற்கை விவசாயத்தில் இறங்கினேன். ஆரம்பத்தில், நிலத்தை திருத்தும் வேலைகளுக்கு, நிறைய பணம் செலவானது. பல்வேறு புத்தகத்தை படித்து, இயற்கை இடுபொருள் தயாரிப்பு முறையை தெரிந்து மேலும் படிக்க..
பல நன்மைகள் தரும் திருநீற்றுப் பச்சிலை!
சில செடிகளில் பு க்கள் வாசனை நிறைந்ததாக காணப்படும். சில செடிகளில் இலைகள் வாசம் மிகுந்ததாக இருக்கும். அந்த வரிசையில் நாம் காண இருப்பது திருநீற்றுப் பச்சிலை என்ற மூலிகை செடியை பற்றி தான்… திருநீற்றுப் பச்சிலை மிகவும் வாசனை மிகுந்த தாவரம். இதனுடைய பிறப்பிடம் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தான். திருநீற்றுப்பச்சைக்கு உருத்திரச்சடை, பச்சை சப்ஜா, விபூதிபச்சிலை, பச்சபத்திரி, திருநீத்துப்பத்திரி போன்ற வேறு பெயர்கள் உள்ளன. முற்காலங்களில் சில பகுதிகளில், திருநீறு தயாரிப்பில் மேலும் படிக்க..
நாகலிங்க மரம்!
பல தாவரங்கள் கடல் கடந்து நம் மண்ணை வந்தடைந்துள்ளன. அவை நம்மிடையே பரவலானது மட்டுமில்லாமல், நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் மாறிவிடுவது உண்டு. அவற்றில் ஒன்றான மரம் தான் நாகலிங்க மரம். நாகலிங்க மரம் சராசரியாக 35 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. இந்த மரத்தில் பு க்கள் கொத்துக்கொத்தாகப் பு க்கும். நாகலிங்க மரம் ஆண்டு முழுவதும் பு க்கும் தன்மை கொண்டது. அடிமரத்தில் இருந்து நேரடியாகக் கிளைகள் இல்லாமல் இருக்கும் மரம். மேலும் படிக்க..
பசுமை தமிழகம் படிக்க பல வழிகள்..
பசுமை தமிழகம் படிக்க பல வழிகள்: ட்விட்டரில் Follow பண்ண – https://twitter.com/pasumai மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய – https://play.google.com/store/apps/details?id=relier.app.pasumai பிரௌசரில் படிக்க – https://relier.in முகநூலில் படிக்க – https://www.facebook.com/gttaagri ஈமெயிலில் படிக்க – பசுமை தமிழகம் முதல் பக்கத்தில் ஈமெயில் செய்யவும் பசுமை தமிழகத்தில் என்றும் விளம்பரங்கள் இருக்காது!
நீர் தாய் (Water mother) ராஜஸ்தானில் வறட்சியை வென்ற கதை!
“இந்தியாவின் எதிர்காலம் அதன் கிராமங்களில் உள்ளது’’ என்றார் மகாத்மா காந்தி. அவர் சொன்னதுபோலவே இந்திய கிராமங்களின் அடிப்படை பொருளாதாரம் வேளாண்மை சார்ந்தது. இருப்பினும் கிராமங்களின் இன்றைய சூழ்நிலை நாளுக்கு நாள் மிக மோசமாகி வருகிறது. மோசமான ஆட்சி, குறைந்த கல்வியறிவு, மோசமான சந்தைவாய்ப்பு, நீர்ப்பற்றாக்குறை, விவசாயி பற்றாக்குறை எனப் பல காரணங்களால் கிராமங்களின் நிலை தற்போது பின்தங்கியிருக்கிறது. அப்படி இருக்கும் மோசமான கிராமங்கள் உயர வேண்டுமானால், “இதைச் செய்ய வேண்டும்’’ எனச் செய்து சாதித்துக் காட்டியிருக்கிறார் மும்பையைச் சேர்ந்த அம்லா ருயா (Amla Ruia). மேலும் படிக்க..
பொள்ளாச்சியில் குப்பையிலிருந்து உருவாகும் உரமும் காய்கறிகளும்..!
தற்போது எங்கு பார்த்தாலும் இயற்கை உரம் என்று சொல்லும் சூழ்நிலை வந்திருக்கிறது. நம் வீட்டிலிருந்து கிடைக்கும் காய்கறி கழிவுகளை வெளியில் தூக்கிப்போட்டு விடுகிறோம். சிலரைத் தவிர அதை யாரும் உரமாக மாற்ற முன்வருவதில்லை. ஆனால், காய்கறி கழிவுகளிலிருந்து உரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது, பொள்ளாச்சி நகராட்சி. வீட்டிலிருந்து கிடைக்கும் குப்பைகளை மக்களிடம் பிரித்து பெற்றுக்கொண்டு அதை 60 நாள்களில் உரமாக மாற்றி விவசாயிகளுக்குக் கொடுத்து வருகிறது. மேலும், காய்கறி விளைச்சலில் புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. பொள்ளாச்சி நகராட்சி தென் மேலும் படிக்க..
தெருவோர அரச மரம்!
100 வருடம் முன் யாரோ, எங்கள் மெயின் ரோட்டில் அரசமரத்தையும் ஒரு வெப்ப மரத்தையும் பக்கத்தில் நாட்டார். அடுத்த தலைமுறை அந்த மரங்களை வெட்டி விடுவார்களோ என்று பயந்து, இரண்டு மரங்கள் நடுவே ஒரு சின்ன பிள்ளையார் கோயிலை கட்டி வைத்தார். இப்போது, சம்பந்தமே இல்லாத நான், இந்த மரங்கள் வளர்ந்து அழகாக சாலையில் நிழல் கொடுப்பதை பார்க்கிறேன். மார்ச் மாதம், அரச மர இலைகள் விழுந்து, புதிய இலைகள் இளம் சிவப்பு நிறத்தில் வருவது பார்ப்பதற்கு மேலும் படிக்க..
ஒரு நாளைக்கு 1,800 ரூபாய்! நல்ல லாபம் தரும் நாட்டுக்கத்திரி!
நம் நாட்டில் நெல்லுக்கு அடுத்தபடியாக, அதிக ரகங்கள் இருக்கும் ஒரு பயிர் என்றால், அது கத்திரியாகத்தான் இருக்கும். கத்திரி ஆறு மாத காலப்பயிர். நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண் கத்திரி பயிரிட ஏற்றதாகும். புளியம்பூ கத்திரி, பவானி கத்திரி, கோவை வரிக்கத்திரி, வெள்ளை வரிக்கத்திரி, பச்சை வரிக்கத்திரி என இப்போதும் கூட பல வகையான நாட்டுக் கத்திரி ரகங்கள் நம்மிடையே புழக்கத்தில் உள்ளன. மணமும் சுவையும் மருத்துவ குணமும் மேலும் படிக்க..
அரைக்கீரை சாகுபடி
அரைக்கீரை சாகுபடி பருவம் : இதனை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். சித்திரை, ஆடி, மார்கழி, மாசிப்பட்டம் ஏற்ற பருவம் ஆகும். மண் : நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இருமண்பாட்டு நிலம், செம்மண் நிலம் சாகுபடிக்கு உகந்தது. விதையளவு : ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும். நிலம் தயாரித்தல் : தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 5 டன் தொழுவுரம், 4 டன் எருவைக் கலந்து பரவலாக கொட்டி மேலும் படிக்க..
ஓசூர் பகுதியில் அதிகரித்து வரும் ரோஜா சாகுபடி
ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திறந்தவெளி ரோஜா சாகுபடியில் இரட்டிப்பு வருவாய் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நல்ல மண்வளம் மற்றும் சீரான தட்பவெப்ப நிலை நிலவி வருவதால் ரோஜா சாகுபடி பிரதானமாக உள்ளது. சுமார் 350 ஹெக்டேர் பரப்பளவில் திறந்தவெளி மற்றும் பசுமை குடில்கள் மூலம் விவசாயிகள் ரோஜா சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு, உற்பத்தி செய்யப்படும் ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர்தினம் ஆகிய மேலும் படிக்க..
தக்காளி சாகுபடி தொழில்நுட்பங்கள்!
தக்காளியானது, மெக்ஸிகோ நாட்டின் பூர்வீக மக்களின் உணவு பயன்பாட்டிலிருந்தது. அங்கிருந்து ஸ்பானிஷ்காரர்கள் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டத்திற்கு பரவியது. ஐரோப்பியர் மூலமாக இந்தியாவுக்கு கிடைத்ததாக வரலாறு. தக்காளியை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். சாகுபடிக்கு வெப்பம் மிகவும் அவசியம். குளிர் பிரதேசங்களில் சாகுபடி செய்வது கடினமாகும். நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் ஏற்றது. சூரிய ஒளியைப் பொறுத்து பழங்களின் வண்ணம் மற்றும் தன்மைகள் மாறக்கூடும். தக்காளி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் மேலும் படிக்க..
மலர் சாகுபடியை பெருக்கும் வழிமுறைகள்
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, பூமியின் வெப்ப நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு, பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை பெருகி, விளைச்சலுக்கான சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, மாவுப்பூச்சி அசுவிணி தத்துப்பூச்சிகள் செம்பான், சிலந்தி வகை பூச்சிகளின் நோய் எதிர்ப்புத் தன்மை அதிகமாகி, பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவில் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டு, விவசாயிகள் பெருமளவில் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர். மலர் சாகுபடியை தாக்கும் பூச்சிகள்: தமிழகத்தில் குண்டு மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி, சாமந்தி, கேந்தி, நிலச்சம்பங்கிகோழிக்கொண்டை, கனகாம்பரம், ரோஜா போன்ற மேலும் படிக்க..
சிங்கப்பூரைத் துறந்த இயற்கை உழவர்
கடலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லை கிராமங்களில் ஒன்று வள்ளிமதுரம் கிராமம். விவசாயம் பொய்த்துப்போய் வீட்டுக்கு வீடு தொலை நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்துவிட்டார்கள். அதே கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் தான் செய்துகொண்டிருந்த வெளிநாட்டுப் பணியை உதறி, இயற்கை விவசாயத்தின் மூலம் அந்த கிராமத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். அவர் இளம் விவசாயி கதிர்வேல். “இயற்கை விவசாயம் அப்பிடின்னாலே இடுபொருட்களுக்காக அதிகம் செலவு பிடிக்கும், அதைக் கத்துக்கிறது சிரமம், உரிய வழிகாட்டுதல் கிடையாது என்று தவறான அபிப்பிராயங்கள் மக்களிடம் மேலும் படிக்க..
சுற்றுச்சூழலுக்கு உகந்த உயிரி பூச்சிக்கொல்லி
மானாவாரியில் பயிர் செய்யப்படும் கம்பு, சோளம், மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயிறு, எள், பருத்தி, சூரியகாந்தி போன்றவற்றில் வேரழுகல் நோயும், தக்காளி, கத்தரி, மிளகாயில் நாற்றழுகல் நோயும் தோன்றுகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. நோய் வந்தபின் அதை கட்டுப்படுத்துவது சிரமம், பூஞ்சாணக் கொல்லிக்காக ஆகும் செலவும் அதிகமாகிறது. இந்த நோயை தடுக்க விதை நேர்த்தி அவசியம். இதற்கு ‘டிரைக்கோடெர்மா விரிடி’ எனும் பூஞ்சாணம் பயன்படுகிறது. இது உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. இதை மற்ற உயிர் உரங்களான ‘அசோஸ்பைரில்லம்’ மேலும் படிக்க..
பணம் காய்க்கும் இலவம் பஞ்சு மரம்
அதிக செலவு செய்யாமல் பணம் மட்டும் தரும் மரங்களை தேர்வு செய்து விவசாயத்தில் அதிக லாபம் ஈட்ட பலரும் முனைகிறார்கள். இவற்றில் முக்கியமானது இலவம் பஞ்சு மரம். இம்மரங்களை வீட்டில் அல்லது தோட்டத்தில் உள்ள சிறிது இடத்தில் வளர்த்தால் போதும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கை மேல் பலன் கிடைக்கும். இவ்வகை மரங்களை சில்க் காட்டன், சிங்கப்பூர் கப்பாக், இலவன், ஒலவன், பஞ்சு மரம் என்றும் அழைக்கிறார்கள். ‘அற்புத பஞ்சு மரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. பல இடங்களில் மேலும் படிக்க..
சிறுகாடுகளை அமைக்கும் மியவாகி மரநடவு முறை
இந்த முறையானது பல வகையான மரங்களை அருகில் நடவு செய்வதை பற்றியதாகும். பொதுவாக ஒரு குழிக்குள் பல வகையான மரங்கள் நடப்படுகிறது. இதனால் ஒரு சிறிய பகுதியில் நெருக்கமாக பல சீரற்ற மரங்களை நடுநிலையோடு சேர்த்து நடுவதன் மூலம் பசுமையானது மீட்டேடுக்கப்படுகிறது. ஜப்பானிய தாவரவியல் விஞானி Akira Miyawaki இதை கண்டு பிடித்தார். குறைந்த காலத்தில் ஒரு இடத்தில அடர்ந்த காடுகளை உருவாக்க இந்த முறை சிறந்தது. முதலில் சிறு காலத்துக்கு நீர் விடுவது அவசியம். அதன் மேலும் படிக்க..
இயற்கை விவசாய வழிமுறைகள் பயிற்சி
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையம் சார்பாக மாதம் தோறும் செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகின்ற 2019 மார்ச் 28-ம் தேதி அன்று இயற்கை விவசாய வழிமுறைகள் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த விவசாய பயிற்சியில் இயற்கை விவசாயம் செய்யும் முறை, இயற்கை இடுபொருள் தயாரிப்பு முறைகள், பயன்படுத்தும் முறைகள், பயிர் பாதுகாப்பு குறித்த நேரடி செயல் விளக்கப் பயிற்சிகள் நடைபெறவுள்ளது. மேலும் படிக்க..
ஆக்ஸிஜன் அதிகம் கொடுக்கும் புங்க மரம்
புங்க மரம் (Millettia pinnata) எளிதாக சாலையோரங்களில் நடலாம். நல்ல நிழல், குளிர்ச்சி கிடைக்கும். 5 வருடங்களில் நன்றாக வளர்ந்து நிழல் கொடுக்கும். பராமரிப்பு குறைவே. இதன் மற்ற பயன்களை பார்க்கலாமா? புங்க மரம் இந்தியாவை தாயகமாகக் கொண்டது. ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் புங்க மரமும் ஒன்று. சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்களாக வளர்க்கப்படுகிறது. மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கன் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் மேலும் படிக்க..
5000 மரங்களை நட்டவர்!
மரங்களே தனது வாழ்க்கைத் துணை எனக் கருதி, கடந்த 13 ஆண்டுகளாக மரம் நடுதலை ஒரு அறமாக மட்டுமின்றி, தான் சார்ந்த கிராம மக்களையும் அதில் இணைத்து வெற்றிக் கண்டிருக்கிறார் பெருமுளை கிராமத்தின் அறிவழகன். அடிக்கடி இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் கடலூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதி வறண்ட பகுதி. மாவட்டத் தலைநகரிலிருந்து 90 கிமீ தொலைவில் இருக்கும் திட்டக்குடி பகுதிக்கு அரசு அதிகாரிகள் வந்து செல்வதென்பது, அத்தி பூத்தாற்போல நடைபெறும் ஒரு நிகழ்வு. அரசு சார்ந்த நலத்திட்ட மேலும் படிக்க..
நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி
நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 28-03-2019 தொடர்பு எண்:04285241626 கட்டணம் ரூ 150
காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி
காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 27-03-2019 தொடர்பு எண்:04285241626 கட்டணம் ரூ 150
உயிர்வேலி பயிருக்கு அரண்!
நிலத்தை சுற்றி உயிர் வேலிகள் அமைப்பது பாதுகாப்பானது மட்டுமல்ல, செலவு குறைந்ததும், நிரந்தரமானதும் கூட. இரும்பு கம்பிகள் வேலியை விட உயிர் வேலி நன்மைகள் பயப்பவை. தற்சார்பு பொருளாதாரத்திற்கு வழிவகுக்கக் கூடியது. மேலும் உயிர் வேலி அமைக்கும் பகுதியில் உள்ள மரங்கள் நிலத்திற்குள் வரும் காற்றை தடுக்கும் தடுப்பானாகவும் அமையும். மண் அரிப்பு, காற்று அரிப்பை தடுக்கும் சக்தி இவைக்கு உண்டு. இதனால் நம் நிலத்தில் உள்ளே நாம் பயிரிடும் பழ மரங்கள், தென்னை, வாழை போன்றவைகளை மேலும் படிக்க..
மென்பொருள் வேலையை விட்டு, பால் வியாபாரம் செய்பவர்
படித்து முடித்ததும் ஐ.டி. கம்பெனியில் வேலை, ப்ராஜெக்ட்டுக்காக வெளிநாட்டு பயணம், பிறகு அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவது. பெரும்பாலான இளைஞர்களின் வழி இப்படி மாறிக்கொண்டிருக்க, மென்பொருள் நிறுவன வேலையை விட்டுவிட்டு, மாடுகளை வைத்து பால் கறந்துகொண்டிருக்கிறார் எம்.டெக். பட்டதாரி. கரூர் ராயனூரை சேர்ந்தவர் ர.பிரபு (29). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு கோவையில் எம்.டெக் படித்தார். படிப்பு முடிந்ததும், கடந்த 2011-ம் ஆண்டு ரூ.8,000 சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் சென்னை, மேலும் படிக்க..
பறவைகளை கண்டு பதறும் சூரிய காந்தி விவசாயிகள்!
சூரியகாந்திப் பூ, உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளால் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய் சமையலுக்குப் பயன்படுகிறது. சிறுவர்கள் விரும்பி வரையக்கூடிய பூக்களில் சூரியகாந்தி முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பு பரவலாக பெரும்பாலான கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட சூரியகாந்தி, பறவைகளால் தொல்லை, கட்டுப்படியான விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் அதன் சாகுபடிப் பரப்பு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துவருகிறது. திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் குறிப்பிட்ட சில ஊர்களில் மட்டும் சூரியகாந்தி பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
நாமக்கல் விவசாயம், கால்நடை கண்காட்சி 2019
வருகிற 2019 மே 3, 4 மற்றும் 5-ம் தேதி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள உள்ள ஸ்ரீ லட்சுமி மஹhல் விவசாய கண்காட்சி 2019 என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் பண்ணைக்கருவிகள், இயற்கை இடுபொருட்கள், கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், சோலார் பம்ப் செட், ஒருங்கிணைந்த பண்ணையம், சொட்டுநீர்ப் பாசனம், விதைகள், வேளாண் நவீன தொழில்நுட்பங்கள், நவீன வேளாண் கருவிகள், பால் பண்ணை அதி நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் முறை போன்றவை மேலும் படிக்க..
100 செ.மீ நீளம் காய்த்த யாழ்ப்பாண முருங்கை!
தமிழகத்தில் பரவலாக விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் யாழ்ப்பாண முருங்கையை வளர்த்து லாபம் பார்த்து வருகின்றனர். விவசாயிகள் தவிர, பிறர் வீட்டுத் தோட்டங்களிலும் யாழ்ப்பாண முருங்கையை வளர்த்து வருகின்றனர். அவற்றிற்கு மாட்டுச்சாணம், ஆட்டுக் கழிவு போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மரத்தில் இலைகள் குறைந்த அளவில்தான் இருக்கும். மரங்கள் 15 அடிக்குக் குறையாமல் வளரும் தன்மை கொண்டது. இதன் காய்கள் பொதுவாக 60 செ.மீ. நீளம் இருக்கும். உருவத்தில் பருமனாகவும், மிகுந்த சுவையாகவும் இருக்கும். இந்த முருங்கை தற்போது மேலும் படிக்க..
இயற்கை பயிர் ஊக்கிகள்
தமிழக விவசாயிகள் பலர் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். செயற்கை உர பயன்பாட்டினை குறைத்து வருகின்றனர். பல வகை திட, திரவ பயிர் ஊக்கிகளை தயாரித்து பயன்படுத்துகின்றனர். பயிர் ஊக்கிகளை வளர்ச்சி ஊக்கி என்று கூட சொல்லலாம். பயிர் ஊக்கிகளை பயிர் மேல் தெளிக்கும் போது, அது பயிரின் வளர்ச்சியை துாண்டிப் பயிரை நன்கு வளரச் செய்கிறது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் வளர்ச்சி ஊக்கியை பயன்படுத்தி அமோக விளைச்சல் பெற்றுள்ளனர். இதன் பயன்பாட்டை அறிந்ததால் வளர்ச்சி மேலும் படிக்க..
தமிழகத்தில் பெருகி வரும் யாழ்ப்பாணப் பனை!
‘பனைமரக்காடே பறவைகள் கூடே’ என ஒரு திரைப்படப்பாடலில், இலங்கை நாட்டில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியைப் பற்றி எழுதியிருப்பார், கவிஞர் வைரமுத்து. அந்தளவுக்குப் பெருமை வாய்ந்தவை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த பனை மரங்கள். இவை நம் நாட்டில் உள்ளபனைமரங்களைக் காட்டிலும் சற்றுத் தடித்துக் காணப்படும். தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலை யாழ்ப்பாணப் பனைகள் வளர்வதற்கு ஏற்ற நிலையில் இருப்பதால், பலரும் இம்மரங்களை இங்கு பயிரிட்டுள்ளனர். குறிப்பாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் இம்மரங்கள் அதிகளவில் உள்ளன. யாழ்ப்பாணப் பனைமரங்கள் குறித்து, மேலும் படிக்க..
மதுரை விவசாயி சாதனை – ஏற்றுமதியாகும் பூச்செடிகள்
மதுரை கோச்சடையை சேர்ந்த கார்த்திக் குமார், எம்.எஸ்சி., விவசாய படிப்பு முடித்து, லோட்டஸ் நர்சரி கார்டன் நடத்தி வருகிறார். நர்சரி என்றால் உள்ளூரில் செடி வளர்த்து உள்ளூரில் விற்பனை செய்வது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் தரமான செடிகளை உற்பத்தி செய்து அனுப்புகிறார். ”சரியான வாடிக்கையாளர்கள் அமைந்தால் செடிகள் ஏற்றுமதியிலும் நல்ல லாபம் ஈட்டலாம்,” என்கிறார் கார்த்திக் குமார். அவர் கூறியதாவது: எம்.எஸ்சி., முடித்த பின், மாலத்தீவில் ஓராண்டு நர்சரி கார்டன் பராமரிப்பு மற்றும் புல்வெளி அமைத்தல் குறித்து பயிற்சி மேலும் படிக்க..
மானாவாரியில் வளரும் தீவன மரங்கள்
மானாவாரி பகுதியில் வறட்சியை தாங்கி வளரும் புல் வகைகளில் கொழுக்கட்டைப்புல், நீலக்கொழுக்கட்டைப்புல், மார்வல்புல் மற்றும் ஆஸ்திரேலியாபுல் குறிப்பிடத் தக்கவை. இவை 3 – 5 அறுவடைகளில் ஒரு எக்டேருக்கு 25 – 40 டன் வரை மகசூல் தரும். மானாவாரி பகுதியில் பயறு வகை தீவனப்பயிர்கள் வளர்க்கலாம். கால்நடைகளுக்கு புல் எப்படி அவசியமோ அதே போல் பயறு வகை தீவனங்களும் தேவை. குறிப்பாக குதிரை மசால், வேலி மசால், காராமணி, அவரை, சிராப்ரோ, சென்ரோ மற்றும் கலப்போ மேலும் படிக்க..
நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் எதிரி பயிர்கள்!
நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில், அதன் எதிரி பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யப் பரிந்துரைக்கிறது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்புழுவியல் துறை. பயிர் உற்பத்தியில் நோய் தாக்குதல், பூச்சித் தாக்குதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. தவறும்பட்சத்தில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு, நஷ்டத்தை ஏற்படுத்தும். அந்தவகையில், விவசாயிகளுக்கு சவாலாக உள்ள நூற்புழு கட்டுப்பாடு முறைகள் குறித்து ஆராய்வது அவசியமாகிறது. நூற்புழுக்கள், காய்கறி மற்றும் பழப் பயிர்களைத் தாக்கி பெருத்த சேதத்தை விளைவிக்கின்றன. கொய்யா, மாதுளை, பப்பாளி,