இயற்கை வேளாண்மையில் நோய் மேலாண்மை ஆராய்ச்சி முடிவுகள்

  • வெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மற்றும் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்துகிறது.
  • துளசி மற்றும் வேம்பு இலைச்சாறு 10 சதம் தெளித்ததன் மூலம் வாழையின் ஆந்தராக்னோஸ் மற்றும் காம்பு அழுகல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • நெற்பயிரில் ஏற்படும் இலை நோய்களுக்கு வேப்ப எண்ணெய் 3 சதத்துடன் 10 சதம் சீமைக்கருவேல் இலைச்சாற்றை நாற்று நட்ட 25 நாளிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 தெளிப்புகள் கொடுக்க நோய்கள் கட்டுப்படுகிறது.
  • மிளகாயில் ஏற்படும் ஆந்தராக்னோஸ் நோய், பழ அழுகல் மற்றும் நுனிகருகல் நோய்களுக்கு சீமைக்கருவேல் இலைச்சாறு 10 சதம் நாற்று நடப்பட்ட 25 நாளிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.
  • வேப்ப இலைச்சாறு 10 சதம் கம்பு பயிரில் அடிச்சாம்பல் நோயை கட்டுப்படுத்துகிறது.
  • சாணத்தை கரைத்து வடிகட்டப்பட்ட நீர் 10 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளித்தால் உளுந்து பயிரில் சாம்பல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • கரும்பு பயிரில் கரணை அழுகல் நோய்க்கு வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ 40, 60 மற்றும் 80 நாட்களில் இட நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

நிலத்தையும் மனிதனையும் காப்பாற்றும் இயற்கை விவசாயம்... இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவித்தால், பேச்சுவழ...
பசுந்தாள் கொண்டு உரம் செலவை குறைப்பது எப்படி?... விவசாயிகள் உரச் செலவைக் குறைக்க பசுந்தாள் உரங்களைப...
இயற்கைக் காய்கறி- லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம்!... மதுரை மாவட்டம் சாலிச்சந்தையைச் சேர்ந்த இயற்கை உழவர...
புதிய மிளகாய் பயிர் – வீரிய ஒட்டு கோ 1... புதிய மிளகாய் பயிர் - வீரிய ஒட்டு கோ 1 (TNAU Chill...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *