பயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு

  • வெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மற்றும் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்துகிறது.
  • துளசி மற்றும் வேம்பு இலைச்சாறு 10 சதம் தெளித்ததன் மூலம் வாழையின் ஆந்தராக்னோஸ் மற்றும் காம்பு அழுகல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • நெற்பயிரில் ஏற்படும் இலை நோய்களுக்கு வேப்ப எண்ணெய் 3 சதத்துடன் 10 சதம் சீமைக்கருவேல் இலைச்சாற்றை நாற்று நட்ட 25 நாளிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 தெளிப்புகள் கொடுக்க நோய்கள் கட்டுப்படுகிறது.
  • மிளகாயில் ஏற்படும் ஆந்தராக்னோஸ் நோய், பழ அழுகல் மற்றும் நுனிகருகல் நோய்களுக்கு சீமைக்கருவேல் இலைச்சாறு 10 சதம் நாற்று நடப்பட்ட 25 நாளிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.
  • வேப்ப இலைச்சாறு 10 சதம் கம்பு பயிரில் அடிச்சாம்பல் நோயை கட்டுப்படுத்துகிறது.
  • சாணத்தை கரைத்து வடிகட்டப்பட்ட நீர் 10 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளித்தால் உளுந்து பயிரில் சாம்பல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • கரும்பு பயிரில் கரணை அழுகல் நோய்க்கு வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ 40, 60 மற்றும் 80 நாட்களில் இட நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

ஒரு ஏக்கரில் 90 டன் கரும்பு மகசூல் சாதனை... செம்மை சாகுபடி முறையில் ஒரு ஏக்கரில் 90 டன் கரும்ப...
பச்சை மிளகாய் பயிரில் நல்ல விளைச்சல் பெறுவது எப்படி... பச்சை மிளகாய் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் ...
புதிய உளுந்து பயிர் – மதுரை 1  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உளுந்து பயி...
கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வைத்துள்ள நிலுவை ரூ.6,598 கோடி!... கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு ஆலைகள் ரூ.6,598 க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *