மண்புழு உரமே விவசாயிகளின் இன்றைய தேவை

சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கவும், பயிர்களின் சிறந்த வளர்ச்சிக்கும், மண்புழு உரமே விவசாயிகள் இன்றைய தேவை என வனக்கல்லூரி முதல்வர் துரைராசு பேசினார்.
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வனச்சூழல், சூழலியல் துறை மற்றும் தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் சார்பில் மண்புழு உர உற்பத்தி குறித்த தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், கல்லூரி முதல்வர் துரைராசு பேசியது:

  • மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப உணவு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான விவசாய நிலங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. பசுந்தாழ் உரத்துக்கு தேவையான மரமோ, செடியோ, கொடியோ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • இதற்கு மாற்றாக மண்புழு உரத்தின் தேவை அவசியமாகி வருகிறது.
  • நிலமும், மண்ணும் மாசுபடாமல் இருக்க மண்புழு உரம் உதவுகிறது.
  • திடக்கழிவு மேலாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கும் மண்புழுவின் தேவை அதிகரித்து வருகிறது.
  • வேளாண் உற்பத்தியை 3 மடங்காக பெருக்க நினைக்கும் அரசின் முயற்சிக்கு மண்புழு உரத்தின் பயன்பாடு அவசியம்.
  • இதை நன்செய் மற்றும் புன்செய் நிலங்களிலும் பயன்படுத்தலாம்.
  • இந்த உரத்தைச் சேர்த்து செடிகளை நடவு செய்தால், விரைவான வளர்ச்சி காண முடியும்.
  • சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க, மண்புழு உரத்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்றார்.

    நன்றி: தினமணி

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி... நாமக்கல் மாவட்டம் வேளாண் அறிவியல் மையத்தில் 20...
மண்புழு உரம் மண்புழுக்கள் உணவாக உண்டு, வெளியேற்றும் எச்சமே மண்ப...
மண் புழு உரம் தயாரிப்பு டிப்ஸ்... மண் புழு உரம் தயாரித்து வரும் ரங்கசாமி கூறுகிறார் ...
மண் புழு உர தயாரிப்பு பயிற்சி முகாம்... ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் 2015 ஜ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *