மானாவாரி நிலக்கடலைக்கு ஊட்டமேற்றிய தொழுஉரம்

 நாமக்கல் மாவட்டத்தில் மானாவாரி பயிராக நிலக்கடலை பயிரிடும் விவசாயிகள் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்து பயன்படுத்துமாறு வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை உதவி இயக்குநர் இரா. சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி:

  • மானாவாரி நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்போதே ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியை துவங்க வேண்டும்.
  • ஒரு ஏக்கருக்கு 4 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 300 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மூட்டம் போட்டு வைக்க வேண்டும்.
  • 15 நாட்கள் கழித்து கிளறிவிட்டு மீண்டும் மூட்டம் போட வேண்டும்.
  • இதன் மூலம் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்துகள் பயிருக்கு கிட்டும் நிலைக்கு வரும். ஒரு மாதம் முடிந்து மானாவாரி நிலக்கடலை விதைக்கும்போது இந்த உரக்கலவையுடன் 9 கிலோ யூரியா மற்றும் 30 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை கலந்து விதைப்பு சாலில் இட வேண்டும்.
  • ஊட்டமேற்றிய தொழுஉரம் இடுவதால் நிலக்கடலை மகசூல் அதிகரிப்பதுடன் மண்ணின் வளமும், ஈரத்தன்மையும் பாதுகாக்கப்படும்.
  • வறட்சியை தாங்கி வளரும் தன்மை பயிருக்கு கிடைக்கும்.
  • நிலக்கடலை பயிரின் வேர் வளர்ச்சி அதிகரிக்கும்.
  • விழுதுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கூடுதல் மகசூல் பெறமுடியும். வைகாசி பட்டத்தில் நிலக்கடலை விதைப்பு மழை பெறப்பட்டவுடன் துவங்கும்.
  • எனவே, தற்போதே ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும். ஒரு மாதம் மூட்டம் போட்டு வைத்திருந்தால் மட்டுமே முழு பயன் பெற முடியும்.

நன்றி: தினமணி

Related Posts

நிலக்கடலையில் நோய்த் தடுப்பு முறைகள்... நிலக்கடலையின் மகசூலை குறைக்கக்கூடிய பல்வேறு காரணிக...
யூரியா விலை உயர்வு ஒத்திவைப்பு... யூரியா உரத்தின் விலையை, 10 சதவீதம் உயர்த்த வேண்டும...
மண் புழு உயிர் உரத் தொழில்நுட்பம்... மண்புழு உயிர் உரத் தொழில்நுட்ப முறைகள் குறித்து, க...
மல்பெரி பட்டுப்புழு கழிவுகளிலிருந்து இயற்கை உரம்... பட்டுப்புழு வளர்ப்பில் மல்பெரி உணவாக பயன்படுவதோடு ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *