நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை

நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை மூலம் ஒரு எக்டருக்கு 249 டன் கரும்பு மகசூல் பெறலாம் என தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக சோதனைத் திடல்கள் மூலம் கண்டறியப் பட்டுள்ளது.

 • தமிழகத்தில் உள்ள மொத்த சாகுபடி பரப்பு 3.06 லட்சம் எக்டரில் சராசரி விளைச்சல் எக்டருக்கு 105 டன் ஆகும்.
 • ஆனால் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையை பின்பற்ற தொடங்கியபின், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சாகுபடி அதிகரித்துள்ளது.
 • ஈரோடு மாவட்ட விவசாயி ஒருவர் ஒரு ஏக்கருக்கு 93.8 டன் கரும்பு மகசூல் பெற்று சாதனை படைத்துள்ளார்.
 • எனினும் அவர் இரண்டு கணுக்கள் உள்ள கரணைகளை
  விதைத்ததால் போக்குவரத்திற்கு அதிகமாக செலவு செய்துள்ளார்.
 • ஆனால் நீடித்த நிலைத்த சாகுபடியில் ஒரு கணு கரணை பயிரிடும் முறைமூலம் 250 கிலோ கரணைகள் மட்டும் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தி உற்பத்தி செலவுகளை குறைக்கலாம்.
 • மரபாக கரும்பு பயிரிடும் விவசாயிகளும் இந்த நவீன முறையை கற்று பயன்பெறலாம்.
 • விவசாயிகள் ஜே 86032 கரும்பு ரகத்தைப் பயிரிட்டு வருகின்றனர். இந்த ரகம் சிவப்பு வேர் அழுகல் நோய் தாக்கக்கூடியது.
 • புதிய கரும்பு ரகங்களான கோ.சி.24, எஸ்.ஜே.7 ஆகிய ரகங்களைப் பயிரிட வேண்டும்.
 • கோ.சி.24 ரகம் அதிக விளைச்சலாக எக்டருக்கு 228 கரும்பு மகசூல் தருகிறது.
 • நீடித்த நிலைத்த சாகுபடி முறை மூலம் எக்டருக்கு 300-350 டன் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.இந்த ரகம் இயந்திர அறுவடைக்கு உகந்தது.
 • மேலும் இந்த ரகத்திலிருந்து 12 சதவீதம் சர்க்கரை உற்பத்தி செய்யலாம்.
 • களர் மண்ணில் வளரும் இயல்புடையது.
 • எஸ்.ஜே.7 ரகத்தில் 13.6 சதவீதம் சர்க்கரை உற்பத்தி செய்யலாம்.ஆனால் தற்போது உள்ள ரகங்களிலிருந்து சர்க்கரை ஆலைகளில் 10 சதவீதம் மட்டுமே சர்க்கறை பெறப்பட்டு வருகிறது.
 • உழவர்கள் சொட்டு உரப்பாசன முறையைப் பயன்படுத்தி சிக்கன நீர் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும்.

(தகவல்: முனைவர் ப.முருகேச பூபதி, துணைவேந்தர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்-641 003, பிப்ரவரி 13, 2012ம் நாள் ஆற்றிய துவக்க உரை, த.வே.ப.கழகம், கோவை)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

நன்றி: தினமலர்

 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

நீடித்த நவீன கரும்பு சாகுபடி வீடியோ... நீடித்த நவீன கரும்பு சாகுபடி பற்றிய ஒரு வீடியோ ...
பயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு... வெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/...
நீடித்த நவீன கரும்பு சாகுபடி கரும்பு விவசாயிகள் குறைந்த செலவில் கூடுதல் லாபம் ப...
கரும்பு சாகுபடி நிலம் தயார் செய்யும் முறை... கரும்பு விளைவிக்கப்படும் நிலங்களில் தொடர்ந்து கரும...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *