மாடுகளுக்கு கோமாரி நோய் – எதிர்ப்பு உணவான “ராகி கூழ்’

கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு உணவாக, ராகி கூழை வழங்குகின்றனர்.

 • ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உட்பட பல மாவட்டங்களில் மாடுகளை கோமாரி நோய் தாக்கி வருகிறது.
 • தடுப்பூசி போடாத, உரிய சிகிச்சை அளிக்காத மாடுகள் உயிரிழக்கின்றன. நோய் பாதித்த மாடுகளுக்கு வாய், தொண்டையில் ஏற்படும் புண்ணால் திட, திரவ உணவுகளை உட்கொள்ள மறுக்கின்றன.
 • இதனால் நாளடைவில் சோர்வடைகிறது. மாட்டின் உடலில் செலுத்தும் மருந்துகளால், பயன் ஏற்படாமல் போகிறது.
 • நோய் பாதித்த மாடுகள், உடலில் சக்தியோடு இருப்பது அவசியம். இதற்கு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை மாட்டுக்கு “தீனி’ கொடுக்க வேண்டும்.
 • அப்போது தான் மருந்துகளால் நோய் குணமாகும், என்று கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து விவசாயிகளிடம் வலியுறுத்துகின்றனர்.
 • தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ராகி யை அரைத்து மாவாக்கிய பின், கூழாக்கி சூட்டை ஆற வைத்து, அதனை பாட்டிலில் ஊற்றுகின்றனர்.
 • அத னை மாட்டின் வாயை திறந் து சிறிது, சிறிதாக கட்டாயமாக ஊட்டுகின்றனர்.
 • மாட் டை காக்க விவசாயிகள் தினமும் காலை, மா லை என இரு வேளைகளிலும் மருத்துவர் ஆலோசனைப்படி வழங்கி வருகின்றனர்.
 • இது தவிர வேப்பம்பட்டை, வேலம்பட்டை யை உடைத்து அரைத்து, அதில் தேங்காய், வெந்தயம், பூண்டு, சீரகத்தை, நாட்டு சர்க்கரையுடன் சேர் த்து உருண்டை பிடித்து நோய் பாதித்த மாட்டுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டுகின்றனர்.
 • இவ்வாறு தொட ர்ந்து செய்தால் மாட்டின் உடலில் சக்தி கூடுவதுடன், தொண்டை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட புண் விரைவில் பூரண குணம் பெறும் என்று விவசாயிகள் நம்புகின்றனர்.
 • மாடுகளை காப்பாற்ற பெரும்பாலான விவசாயிகளும் இந்த முறையை கையாண்டு, மாடுகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை அளிக்கின்றனர்.

நன்றி: தினமலர் 

Related Posts

தீவனமாக அசோலா கோழித்தீவனமாக அசோலாஅசோலா எனப்படும் பெரணி வகை ந...
கோமாரி நோயை மூலிகை மருத்துவ முறையில் கட்டுப்படுத்த யோசனை... கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மரபு சா...
அமோகக் கால்நடைத் தீவனம் அசோலா... பெரணி வகையைச் சேர்ந்த நுண் தாவரம் அசோலா. கறவை மாடு...
புரதச்சத்து மிக்க உலர்தீவனம் நிலக்கடலை செடி... உலர் தீவனங்களில், புரதச்சத்துக்கள் நிரம்பிய, நிலக்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *