தென்னைக்கு நீர் மேலாண்மை

இன்று தமிழ்நாட்டில் தென்னை மகசூல் குறைந்து வருகிறது. பலர் சரிவர உரம் போடாமல், மரங்களை பழுது பார்க்காமல், நீர் மேலாண்மை பற்றி அறியாமல் உள்ளனர். இதுவே மகசூல் குறைவுக்குக் காரணம்.

நீரின் அவசியமும், வேரின் அமைப்பும்:

 • வேரின் அமைப்புக்களை நன்கு தெரிந்து கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
 • மர 90% வேர்கள் 2 மீட்டர் ஆர வட்ட பரப்பளவிற்குள் அதாவது 12.5 ச.மீ. உள்ளேயே காணப்படும்.
 • 15 மீ ஆழம் வரை 4000 முதல் 7000 வேர்கள் சம மட்டத்தில் அமைந்திருக்கும்.
 • தென்னை நட்ட முதல் வருடம் ஒருநாள் விட்டு ஒருநாள் 10 லி தண்ணீரும், மூன்று வயது வரை வாரம் இருமுறை 40லி தண்ணீரும், பின் வாரம் 60லி தண்ணீரும் பாய்ச்ச வேண்டும்.
 • 2 மீட்டர் ஆர வட்டப்பகுதிக்கு மட்டும் நீர் பாய்ச்ச வேண்டும்.
 • வட்டப்பாத்தி முறை, பானைவழி நீர்ப்பாசனம், சொட்டுநீர்ப்பாசனம் ஆகிய முறைகளில் நீர்ப்பாசனம் செய்யலாம்.
 • சொட்டு நீர் குழாயின் மூலம் உரம் செலுத்தப்படுவதால், இம்முறை சிறப்பானது.
 • மணற்பாங்கான நிலத்திற்கு வண்டல், குறைத்து பொருக்கு மரத்திற்கு 200 கிலோ இடலாம்.
 • பசுந்தாள் உரம், நார்க் கழிவுகள், மக்கிய எரு இட்டால் நீர்ப்பிடிப்பு அதிகரிக்கும்.
 • மண்ணின் ஈரப்பதத்தை பராமரிக்க வேண்டும்.
 • மழைக்கால தொடக்கத்தில் தோப்புகளை உழவு செய்ய வேண்டும்.
 • நல்ல வடிகால் வசதி தென்னைக்கு அவசியம்.காரணம் வடிகால் இல்லாவிடில் தண்ணீர் தேங்கி விடும்.
 • நீரும் உரமும் சரிவர விஞ்ஞான முறைப்படி வழங்காவிடில் மகசூல் குறைந்து விடும்.

எம்.ஞானசேகர், விவசாய ஆலோசகர்: 09380755629

நன்றி: தினமலர்

Related Posts

தென்னையை தாக்கும் “பென்சில் பாயிண்ட்’ நோய்... கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்னையில் நுண்ணூட்ட சத்...
தென்னையில் கோகோ ஊடுபயிர் கோகோ பயிரின் சிறப்புசாக்லேட் மற்றும் ஊட்டச்சத்த...
தென்னை மரங்களில் அதிக மகசூல் கிடைக்க வழி என்ன?... தென்னை மரத்தில் ஊடு பயிர் மூலம் அதிகம் மகசூல் பெரு...
உயிர் உரங்கள் தென்னையில் அதிக விளைச்சல்... தென்னைக்கு உயிர் உரங்கள் இட்டால் 20 சதவீத அதிக விள...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *