தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் கவனத்திற்கு

தரமான கொப்பரை கிடைக்க 6 சதவீதத்திற்குள் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்று, தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் தெரிவித்துள்ளது.

தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் தரமான கொப்பரை கிடைக்க அறுவடைக்குப் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வாரியம் வெளியிட்டுள்ள செய்தி:

  • தேங்காய்கள் நன்கு முற்றிய பிறகு பறித்த பின் ஹைபிரிட் ரக வகைகளுக்கு 45 முதல் 60 நாள்களுக்குள்ளும், நாட்டு ரகங்கள் 45 முதல் 70 நாள்களுக்குள்ளும் உலர வைத்து, பின் உடைத்து வெயிலில் காயவைக்க வேண்டும்.
  • முதலில் மண்களத்தில் மூன்று நாள்களுக்கும், பின் கடப்பா கல்லில் சுமார் 4 முதல் 7 நாள்களுக்கும் (வெயிலின் அளவைப் பொருத்து) காயவைக்க வேண்டும்.
  • கொப்பரையின் ஈரப்பதம் 6 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.
  • பூஞ்சானத் தாக்குதல், கருப்பு, மஞ்சள் நிறமான தேங்காய்களை கழிவு செய்திட வேண்டும்.
  • தேங்காய்ப் பருப்பில் சுருக்கம் மற்றும் மடிப்பு 10 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • நன்கு உலர்ந்த பின் பருப்பில் படிந்துள்ள மணல், தூசி, சருகுகள் ஆகியவற்றை நீக்க வேண்டும்.
  • தேங்காய்ப் பருப்பு வெள்ளையாக இருக்க வேண்டும்.
  • உட்புறம் சவ்வுத்தாள் பொருந்திய சாக்குப் பைகளில் சேமித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நவீன முறைப்படி, பாதுகாப்புடன் காயவைத்து, விற்பனைச் செலவுகள் இல்லாமல் கூடுதல் பயன் அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

தென்னையில் ஊடுபயிர் சேனைக்கிழங்கு... தென்னையில் ஊடுபயிராக பயிர்செய்ய ஏற்ற சேனை இரகங்க...
மூடாக்கு மூலம் வறட்சியை சமாளிக்கும் விவசாயி... கடந்த சில நாட்களாக கடும் வறட்சி காரணமாக தமிழ்நாட்ட...
தென்னையில் ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு வீடியோ... தென்னையில் ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு பற்றிய ...
இயற்கை முறையில் தென்னை விவசாயம்... சுல்தான்பேட்டை வட்டாரத் தில் தென்னை விவசாயத்தில் ஈ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *