நிலக்கடலை அதிக மகசூல் பெறுவது எப்படி?

எண்ணெய் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுததி​​ 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம் என்று தருமபுரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன் கூறினார்.

  • விதை நிலக்கடலையை விதைக்கும் முன் உயிர் உரங்களான ரைசோபியம் ​(கடலை)​ 3 பாக்கெட்,​​ பாஸ்போ பாக்டீரியா பாக்கெட்டை சூடு குறைந்த அரிசிக் கஞ்சியில் கலந்து 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும்.
  • விதைப்புக்கு முன்,​​ ஒரு ஏக்கருக்கு 5 கிலோ கடலை நுண் சத்தை மணலுடன் கலந்து விதைக்க வேண்டும்.
  • பயிருக்குத் தேவையான பேரூட்டச் சத்துகளுடன்,​​ ​ நுண்ணூட்டச் சத்துகளும் பயிருக்கு கிடைத்து அதிக மகசூல் பெறலாம்.
  • ஜிப்சம் 80 கிலோவை மேலுரமாகவும்,​​ அடியுரமாகவும் விதைத்து 40 அல்லது 45 நாள்களில் செடிகள் பூத்து விழுதுகள் இறங்கும் காலத்தில் வயலில் இட்டு மண் அணைக்க வேண்டும்.
  • மேலுரமாக இடும்போது,​​ வயலில் போதிய ஈரப்பதம் இருக்க வேண்டும்.
  • இதனால் மண் பொலபொலவென இருப்பதால்,​​ விழுதுகள் இறங்கி காய்ப் பிடிக்க உதவும்.
  • காய்கள் முற்றி,​​ தரமான நிலக்கடலை உருவாக சுண்ணாம்புச் சத்தும்,​​ ​ எண்ணெயில் புரத அளவு அதிகரிக்க கந்தகச் சத்து உதவகிறது.
  • பூ,​​ பிஞ்சு உதிர்வதை தடுக்க,​​ பயிர் பூக்கும் தருணத்தில் நாள்கள் கழித்து மீண்டும் நுண்ணூட்டக் கரைசல் தெளிக்க வேண்டும்.
  • இரண்டு கிலோ டி.ஏ.பி.​ உரத்தை தண்ணீரில் கரைத்து 1 நாள் ஊறவைத்து,​​ மறுநாள் தெளிந்த கரைசலை வடிகட்டியப் பிறகு மற்ற உரங்களைக் கரைத்து 490 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் பூ மற்றும் பிஞ்சு உதிர்வதைத் தடுத்து,​​ அதிகமான மகசூல் பெறலாம் என்று அவர் கூறினார்.

நன்றி: தினமணி

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்... "நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ...
மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய பயிற்சி... கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம் இயற்கை...
இயற்கை விவசாய கருத்தரங்கு திருநெல்வேலி மாவட்டம் சிவசைலம் நல்வாழ்வு ஆஸ்ரமத்தி...
இலவச நீர் மேலாண்மைப் பயிற்சி சிக்கன நீர்ப் பாசனம், லாபகரமான பயிர் சகுபடி, பயிர்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *