நிலக் கடலையை தாக்கும் சுருள்பூச்சி

எலச்சிபாளையத்தில் மானாவாரியில் பயிரிடப்பட்டுள்ள நிலக் கடலையில் சுருள்பூச்சி தாக்குதல் உள்ளதாக வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்தார்.

இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் சையத் முகம்மது நகீப் கூறியது:

 • எலச்சிபாளையம் வட்டாரத்தில் 12,584 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மானாவாரி நிலக் கடலை பூப்பூக்கும் தருணத்தில் உள்ளது.
 • தற்போது பெய்துள்ள மழையின் காரணமாக நிலக் கடலையில் சுருள் பூச்சியின் தாக்குதல் தென்படுகிறது. இதைத் தவிர்க்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.
 • இளம் புழுக்கள் இலையின் நடுப் பகுதியை  உண்பதால் பழுப்பு நிற சிறிய கொப்புளங்கள்  போன்று உருவாகும்.
 • அதிகத் தாக்குதலின் இறுதியில் இலைகள் முழுவதும் சேதப்படுத்தப்படுவதால் வயலில் குறிப்பிட்ட தூரத்திற்கு எரிந்தது போல காணப்படும்.
 • பொருளாதார சேத நிலை ஒரு மீட்டருக்கு ஒரு புழு ஆகும். இதற்கு மேல் காணப்பட்டால் பயிர் பாதுகாப்பு அவசியம்.
 • இதைக் கட்டுப்படுத்த ஊடுபயிராகக் கம்பு சாகுபடி செய்யலாம்.
 • கண்காணிப்புப் பயிராக வரப்பு ஓரத்தில சோயா பயிரிடலாம்.
 • இரவு நேரங்களில் 8 மணி முதல் 11 மணி வரை ஏக்கருக்கு 5 விளக்குப் பொறிகள் வைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
 • மேலும், டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 20 ஆயிரம் வீதம் விடுவதால் சுருள் பூச்சியின் தாக்குதல் குறையும்.
 • சுருள் பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் இருந்தால் ஒரு ஏக்கருக்கு பாசலோன் 4 சத தூள் அல்லது கார்பரில் 10 சத தூள் அல்லது  பெனிட்ரோத்தியான் 2 சதம் தூள் 10 கிலோ காலையில் தூவலாம்.
 • அல்லது ஒரு லிட்டர் நீரில் குயினால்பாஸ் 2 மிலி அல்லது டைமெத்தோயேட் 2மிலி  அல்லது மானோகுரோட்டபாஸ் 2 மிலி உடன் நுவான் 2 மிலி கலவையைக் கலந்து தெளிக்கலாம்.
 • இந்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வழிமுறையை  மேற்கொண்டு சுருள்பூச்சி தாக்குதலை சமாளிக்கலாம் என்றார் அவர்.

நன்றி: தினமணி 

Related Posts

நிலகடலை சாகுபடி டிப்ஸ் நிலக்கடலையில் தோன்றும் பூச்சி மற்றும் நோய் தாக்குத...
நிலக்கடலை அதிகம் மகசூல் பெறுவது எப்படி?... நிலக்கடலை பயிருக்கு உரக்கலவை கரைசல் தெளித்தல் மற்ற...
நிலக்கடலையை பிரித்தெடுக்கும் இயந்திரம்... எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலையை தரத்துடன் பிர...
நிலக்கடலை/மணிலா சாகுபடி டிப்ஸ்... நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிக மகசூல...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *