குறுவைப் பயிருக்கு உரமிடும் முறை

குறுவை நெல் பயிருக்கு உரமிடுவது குறித்து வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகணன் விளக்கமளித்துள்ளார்.

  • திருவாரூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 38,870 ஹெக்டேரில் குறுவை நெல் பயிரிடப்ப்டடு, தற்போது பயிர் தூர்கட்டும் பருவத்தில் மேலுரம் இடும் தருவாயில் உள்ளது.
  • மேலும், இதுவரையில் 3,353 ஹெக்டேரில் நாற்றங்கால் அமைக்கப்பட்டு விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.
  • குறுவைப் பருவத்துக்கு மேலுரம் இடும் போது முதல் மேலுரம் நடவு செய்த 15-ம் நாள் 28 கிலோ யூரியா இட வேண்டும்.
  • 2-வது மேலுரம் பஞ்சு கட்டும் தருணத்தில் 28 கிலோ யூரியாவுடன் 17 கிலோ பொட்டாஷ் சேர்த்து இடலாம்.
  • மூன்றாவதாக நடவு செய்த 45-ம் நாள் 28 கிலோ யூரியா இட பரிந்துரை செய்யப்படுகிறது.
  • பொட்டாஷ் உரம் மேலுரமாக இட முடியாத சூழ்நிலையில் கீழ்காணும் முறையில் பொட்டாஷ் சத்தை பயிருக்கு அளிக்கலாம்.
  • மண்ணில் உள்ள பொட்டாஷ் உரத்தை கரைத்து பயிருக்கு அளிக்கும் பாக்டீரியாவை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் 25 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து இடலாம்.
  • இந்த பாக்டீரியாவை யூரியா போன்ற ரசாயன உரங்களுடன் கலந்து இடக் கூடாது.
  • மல்டி கே என்ற உரத்தை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்,

மேற்காணும் முறைகளைப் பின்பற்றி பயிருக்கு சாம்பல் சத்தை அளிக்கலாம் என மயில்வாகணன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

பச்சைபாசி படர்வதால் பயிர்களில் வளர்ச்சி குறைபாடு... பச்சைபாசி வயல்களில் பாய்போல் படர்வதால் மண் ணில் கா...
நெல் பயிரில் அந்துப்பூச்சி கட்டுபடுத்துதல் எப்படி... கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடி செய்யப்பட்டு ள்ள நெல...
நெற்பயிர்களை தாக்கும் பூச்சிகள் தடுக்க யோசனைகள்... நெல் பயிரில் கார் பருவத்தில் தாக்கிய குருத்துப்...
வறட்சியில் கை கொடுக்கும் ஜே-13 நெல்... மதுரையில் விவசாயிகள் அணைக்கட்டு பாசனம் கிடைக்காத ச...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *