நெற்பயிரில் இலையழுகல் நோய் தடுப்பு முறைகள்

பிசான பருவத்தில் தற்போது பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரியில் இலையழுகல் நோய் பரவலாக காணப்படுகிறது.

அறிகுறிகள்

  • நெல் பயிரின் இலைகளின் அடிப்பாகமாகிய இலையுறைகளில் நீர் கோர்த்த புள்ளிகள் தோன்றும்.
  • இவை பெரிய புள்ளிகளாக மாறி இலையழுகி சிம்புகள் அழுகிவிடும்.
  • இதனால் சிம்புகள் கதிர்விடாமல் முழுமையாக அழுகிடும்.
  • மேலும் பனி, மேகமூட்டம், குளிர்ந்த காற்று, குறைந்த வெப்பநிலையுடன் கூடிய சீதோஷ்ண நிலை நிலவுவதால் இந்நோய் அதிகம் பரவி மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கட்டுபடுத்தும் முறைகள்

  • இந்நோயை கட்டுப்படுத்த கார்பன்டாசிட் ஏக்கருக்கு 250 கிராம் அல்லது டைத்தேன் எம் 45 அல்லது இசட் 78 அல்லது கெச்சாகாண்டசோல் 250 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து விசை தெளிப்பான் மூலம் ஏக்கருக்கு 8 டேங்க், கைத்தெளிப்பான் என்றால் ஏக்கருக்கு 12 டேங்க் வீதம் தெளிக்கவும்.
  • தழைத்சத்து அதிகம் இடுவதை தவிர்க்கவும்.
  • மேலும் ஏக்கருக்கு 17 கிலோ பொட்டாஷ் உரம் இடவும். நீரை வடித்துவிட்டு மருந்து தெளிக்கவும்.
  • 3 நாட்கள் வரை தண்ணீர் அடைக்க வேண்டாம்

இவ்வாறு கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்றி: தினமலர்

நெற்பயிரை பற்றிய மற்ற செய்திகளை இங்கே படிக்கலாம்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

நெற்பயிரில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு... நெல் விதைகளை 12 மணி சாண எரிவாயு கலன் கழிவுகளில்...
நெற்பயிரில் இலைக்கருகல் நோய் நெற்பயிரில் பாக்டீரியா தாக்குதலால் இலைக் கருகல் நோ...
இயற்கை விவசாயத்தில் 200 பாரம்பரிய நெல் வகைகள் புதுப்பிப்பு... கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ஸ்ரீனிவாசமூ...
திருந்திய நெல் சாகுபடி குறித்த பயிற்சி... தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் வருகிற...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *