நெற்பயிரில் குருத்து பூச்சி

வருமுன் காக்கும் வழிகள்

  • நாற்றங்காலில் பூச்சி நிர்வாகம் செய்வது அவசியம்.
  • நாற்றங்காலுக்கு அருகில் உள்ள மின் விளக்குகளை இரவு 7-11 மணிவரை பயன்படுத்தாமல் தவிர்க்கவும்.
  •  நாற்றங்காலுக்கு ப்யூரடான் குறுணை மருந்தினை ஒரு சென்ட் பரப்பளவிற்கு 120 கிராம் என்றளவில் மணலுடன்  கலந்து நாற்று பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன் சீராக இட வேண்டும்.
  • நாற்றங்கால் தயார் செய்து விதைப்பதற்கு முன் வேப்பம் பிண்ணாக்கு 1 சென்டுக்கு 600 கிராம் என்றளவில் இட  வேண்டும்.

வந்த பின் கட்டுபடுத்தும் வழிகள்

  •  நடவு வயலில் குருத்துப் பூச்சி உண்டாக்கும் சேதத்தைக் கண்டறிந்து பொருளாதார சேத நிலையை எட்டியவுடன் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • வந்த பின் தடுக்கும் வழிகள் ஒரு சதுர மீட்டருக்கு இரண்டு முட்டைக் குவியல்கள் மற்றும் அந்திப்பூச்சிகளின் நடமாட்டம் இருக்கும்பொழுது டிரைக்கோகிராம்மா ஜப்பானிக்கம் என்ற ஓட்டுண்ணியை ஏக்கருக்கு 2 சிசி என்றளவில் 7 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை விட வேண்டும்.
  • குருத்து காய்தல் 5 விழுக்காடாக இருக்குமானால் வேப்பம் பருப்பு சாறு 5 விழுக்காடு தெளிக்க வேண்டும்.
  • குருத்து காய்தல் 10 விழுக்காடாக இருக்குமானால் பரிந்துரைக்கப்பட்ட பூச்சி கொல்லிகளான குயினைல்பாஸ் 400மிலி (அ) மேனோகுரோட்டோபாஸ் 400மிலி /ஏக்கர் ஏதாவது ஒன்றைத் தெளிக்க வேண்டும்.
  • இதனுடன் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், நீர் நிர்வாகம் போன்ற சாகுபடி முறைகளையும் கையாள வேண்டும்.

தகவல்: வேளாண்மை அலுவலர், உழவர் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை.

நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம்

Related Posts

சேலம் மாவட்டத்தில் மாவு பூச்சி... சில ஆண்டுகளாக செடி, கொடி, மரங்களை மாவு பூச்சிகள் த...
இலை வண்ண அட்டை யூரியா தட்டுப்பாட்டை குறைக்க, விவசாயிகள், இலை வண்ண...
பக்க விளைவுகள் ஏற்படுத்தாத தாவரப் பூச்சிக் கொல்லிகள்... குறைந்த பரப்பளவு நிலத்தில், அதிக விளைச்சல் காண ...
நன்மை தரும் பூச்சிகளை பாதுகாக்கலாமே…... தமிழகத்தில் விவசாயிகள் அதிகளவில் பூச்சிக்கொல்லி மர...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *