மரவள்ளியில் நுண்ணூட்ட மேலாண்மை

மரவள்ளியில் நுண்ணூட்ட கலவை தெளிப்பதால் துத்தநாகசத்து பற்றாக்குறை நீங்கி, செடிகளின் வளர்ச்சி நன்கு இருக்கும்

  • நாமக்கல் வட்டாரத்தில், வளர்ச்சி நிலையில் உள்ள மரவள்ளியில் பல வயல்களில் இரும்பு மற்றும் துத்தநாகம் நுண்ணூட்டம் பற்றாக்குறை காணமுடிகிறது.
  • அதனால், இலைகள் வெளுத்து இளம் மஞ்சளாகி, சிறுத்து மெலிந்து காணப்படுகிறது.
  • தற்போது, வெப்பநிலை அதிகரித்துள்ளதால், வெப்பம் தாங்காமல் இலைகள் கருக ஆரம்பித்துவிடும்.
  • அதை தவிர்க்க, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம், பெரஸ்சல்பேட், 5 கிராம் ஜிங்க்சல்பேட் மற்றும், 5 கிராம் யூரியா வீதம் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு இலைகளின் மேல் நன்கு படியும்படி தெளிக்கவேண்டும்.
  • நுண்ணூட்ட கலவை இலைகளுடன் மேல் நன்கு படிய, 1 லிட்டர் தெளிப்பு திரவத்துக்கு, 1 லிட்டர் ஒட்டும் திரவம் வீதம் கலந்து தெளிப்பது சிறந்தது.
  • இதுபோல், 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
  • நுண்ணூட்ட கலவை தெளிப்பதால் இரும்பு, துத்தநாகசத்து பற்றாக்குறை நீங்கி செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

இவ்வாறு நாமக்கல் தோட்டக்கலை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

மரவள்ளி தேமல் நோய் தடுக்கும் வழிகள்... மரவள்ளி இறவை சாகுபடியில் ஹெக்டேருக்கு 10 முதல் 11 ...
லாபம் தரும் மரவள்ளி கிழங்கு சாகுபடி... ஜவ்வரிசி, சேமியா, நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருள்களுக...
மரவள்ளியில் மஞ்சள் தேமல் நோய்... மஞ்சள் தேமல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *