மா சாகுபடியில் அடர்நடவு முறை

  • அடர்நடவு முறையில் இரு அடுக்கு முறையில் 10x5x5 மீட்டர் இடைவெளியில் நெருக்கி மா நடவு செய்வதால் எக்டருக்கு 260 கன்றுகளை நடவு செய்யலாம்.
  • இரு அடுக்குகளுக்கு இடையில் 10 மீட்டர் இடைவெளி இருப்பதால் டிராக்டர் மூலம் மருந்து தெளிக்கவும், அறுவடை செய்யவும் இன்னும் பிற பயிர் பராமரிப்பு வேலைகளை செய்யவும் ஏற்றதாக இருக்கும்.
  • தற்போது அதிஅடர்நடவு முறையில் 3×2 மீட்டர் இடைவெளியில் ஒரு எக்டருக்கு 1666 மரங்கள் நடவு செய்வதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • டிசம்பர் – ஜனவரி மாதங்களில் 10 செ.மீ. அளவில் நுனிக்கவாத்து செய்வதன் மூலமாகவும் அதையொட்டி பேக்லோபூட்ரசால் 0.75 கிராம்/மரம் என்ற அளவில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஊற்றுவதன் மூலம் இடைப்பருவ காய்ப்பை பெறலாம்.
  • இலைவழியாக 20 கிராம்/லிட்டர் தண்ணீர் அளவில் சல்பேட் ஆப் பொட்டாஷ் உரத்தினைப் பூக்கும் தருணத்திலும் பின் காய்பிடிப்பு தருணத்திலும் தெளிப்பதன் மூலமாக காய்பிடிப்பினை அதிகரிக்கச் செய்வதோடு விளைச்சலையும் அதிகரிக்கலாம்.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

பழவகை மரங்களுக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள்... பழவகை மரங்களில் கூடுதல் மகசூல் பெறவும், நோய் தாக்க...
மாமரத்தில் பூவை பராமரித்து அதிக மகசூல் பெறுவது எப்படி?... இப்போது மா மரம் பூக்கத் தொடங்கி உள்ளது. சித்திரை...
மா மரத்தில் அதிக விளைச்சல் பெறுவது எப்படி?... மாமரத்தில் இனைப்படர்வு மேலாண்மை அல்லது கவாத்து ஒவ்...
மா மகசூலை பாதிக்கும் தத்துப்பூச்சிகள்... மா மகசூலை பாதிக்கும் தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *