மா தண்டு துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள்

மா தண்டு துளைப்பான் தாக்குதலின் அறிகுறிகள்:

 • புழுக்கள் மா மரத்தைக் குடைந்து உள்ளே சென்று சேதப்படுத்துகிறது
 • துளைக்கப்பட்ட பகுதியின் கீழே மரத்தைச்சுற்றிலும் மரத்தூள்களும் புழுவின் கழிவுகளும் காணப்படும்
 • புழுக்கள் மரத்தைக் குடைந்து சென்று உணவுக்கடத்தும் திகலை உண்பதால் மரக்கிளைகள் வாடிவிடும்
 • சேதம் அதிகமாகும் நிலையில் முழுமரமும் அழிந்து போகும்

பூச்சியின் விபரம்:

 • புழு – வளர்ச்சியடைந்த புழு 10-15 செ.மீ நீளமுடையது, தலை பழுப்பு நிறத்தில் காணப்படும். புழுவின் முன்பகுதி அகன்றும் உடல்பகுதி சிறுத்தும் காணப்படும்
 • வண்டு – நன்கு வளர்ச்சியடைந்த வண்டு பெரியதாகவும் கடினமான முன் இறக்கைகளை கொண்டிருக்கும். சிகப்பு நிற புள்ளிகள் முன் இறக்கையில் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

 • சேதமடைந்த (அ) தாக்கப்பட்ட கிளைகளை அகற்றி விட வேண்டும்
 • பூச்சி எதிர்ப்புத்திறனுடைய மர ரகங்களை பயிரிட வேண்டும் (நீலம், கிமாயூதீன்)
 • வண்டு உண்ணக்கூடிய மாற்று பயிர்வகைகளை அகற்ற வேண்டும்
 • வண்ணம் பூசுதல் 20 கி காப்பரில் பவுடரை 1 லி தண்ணீரில் கலந்து மரத்தின் அடியிலிருந்து 3 அடி உயரத்தில் வண்ணம் பூச வேண்டும். இதனால் பெண் வண்டின் முட்டையிடும் தன்மை தடுக்கப்படுகிறது
 • சேதம் அதிகமாகும் தருவாயில் காப்பர் ஆக்ஷிகுளோரைடு பசையை மரத்தின் அடிப்பாகத்தில் தடவ வேண்டும்
 • வண்டு சேதப்படுத்திய துளையிலிருந்து புழுவை அகற்றி பின்பு மானோகுரோட்டாபாஸ் 10 லிருந்து 20 மிலி வரை எடுத்து பாதிக்கப்பட்ட துளையினுள் செலுத்த வேண்டும்
 • கார்போபீயூரான் குருணை மருந்தை ஒரு துளைக்கு 5 கி வீதம் செலுத்திய பின்பு களிமண் வைத்த துளையை அடைத்து விட வேண்டும்

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

மா மரத்தில் கவாத்து செய்ய புரூனர் கருவி... மாமரத்தில் கவாத்து செய்ய, புரூனர் (Pruner) கருவியை...
மாவில் அடர் முறை நடவு பால்காரன்கொட்டாய் கிராமம், கோவிந்தபுரம் அஞ்சல், ஊத...
மா மரங்களில் பூ அதிகம் பூக்க வைப்பது எப்படி?... சில மாமரங்களில் நிறைய பூவோடும், சில மரங்களில் பூ க...
மா சாகுபடியில் கவாத்து தொழிற்நுட்பங்கள்... மா மர கவாத்து தொழிற்நுட்பங்கள்சிறிய அளவிலான க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *