தமிழக அரசு தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியங்கள்

வ.எண் – திட்டத்தின் பெயர் – வழங்கப்படும் மானியம் (ஒரு எக்டருக்கு) – விவசாயிகளுக்கு வழங்கப்படும் அலகு

1. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம்(HDS) – 50 சத மானியத்தில் காய்கறி விதைகள் பழச்செடிகள், மலர்ச்செடிகள் வழங்கப்படும் – 0.5 எக்டர் 1.0 எக்டர்

2. வானிலை சார்ந்த பயிர்காப்பீடுத் திட்டம் (WBCIS) – தட்பவெப்பநிலையின் மூலம்சேதாரம் ஏற்படுவதின் காரணமாக வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

3. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்(NADP) (அ) துல்லிய பண்ணையம் அமைத்தல் – ரூ.20,000 ஒரு எக்டருக்கு இடுபொருட்கள் – 0.4 முதல் 1 எக்டர் வரை
சிறு / குறு விவசாயி – 100 சத மானியம் சொட்டுநீர் பாசனம் அமைக்க – ரூ.43,816/-
இதர விவசாயி – 75 சத மானியம் சாகுபடி செய்யும் பயிர்களின் இடைவெளிக்கு ஏற்ப நுண்நீர் பாசனத்திட்டத்தில் வழங்கப்படும் மானியம் வேறுபடும் – அதிக பட்சம் 5 எக்டர்
ஆ) உயர் தொழில்நுட்பம் மூலம் உற்பத்தித் திறன் அதிகரிப்புத் திட்டம் (NADP HITECH) – கீழ்க்கண்ட காய்கறிப் பயிர்களுக்கு இடுபொருட்களுடன் மானியம் வழங்கப்படும்.
வெண்டை, கத்தரி, தக்காளி. இதர காய்கள் ரூ.75,000/- -1 எக்டர்
கீரை வகைகள் ரூ.5,000/- – 1 எக்டர்
பந்தல் காய்கறிகள் ரூ.1,55,600/- (பந்தல் அமைப்பு உட்பட) – 1 எக்டர்

4. பசுமைக்குடில் (யூனிட் மானியம்) – ரூ.3,25,000/- (1000 ச.மீ.க்கு)- 4000 ச.மீ.
பசுமைக்குடிலில் உயர் மதிப்பு காய்கறி செடிகள் சாகுபடி செய்தல் – ரூ.105/ச.மீ. – 500 ச.மீ.
பசுமைக்குடிலில் உயர் மதிப்பு மலர்செடி சாகுபடி செய்தல் – ரூ.500/-ச.மீ. – 500 ச.மீ.
நிலப்போர்வை அமைத்தல் – ரூ.10,000/- – 2 எக்டர்
நிழல்வலை கூடாரம் உயர் தொழில்நுட்பம் – ரூ.3,00,000/- – 1000 ச.மீ.
அங்கக பண்ணையம்(HDPE 12’X4X2′) – ரூ.5000/- -1 எண்.

தகவல்: அந்தந்த மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர்கள்
-கே.சத்தியபிரபா, உடுமலை.

நன்றி: தினமலர்

Related Posts

மண்புழுவே உண்மையான உழவன்! இன்றைக்கு இயற்கை வேளாண் உலகில் மண்புழு வளர்ப்பு பற...
Android போனில் மொபைல் app அன்ட்ராய்ட் போனில் பசுமை தமிழகம் படிக்க app டவுன்ல...
வறட்சியில் இருந்து பயிர் காக்கும் வழிகள்... இன்று நிலவும் வெப்பமான சூழல் பயிரில் பலவித சேதங்கள...
பசுமை தமிழகத்தை மொபைல் போனில் படிப்போர்க்கு... பசுமை தமிழகத்தை மொபைல் போனில் படிப்போர்க்கு -ந...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *