வனவிலங்குகளை விரட்ட ..

தேனி மாவட்ட மலைப்பகுதிகளில், விளை நிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்யும் வனவிலங்குகளை விரட்ட விவசாயிகள், தோட்டங்களில் ஸ்பீக்கர்களை கட்டி அலற விட்டு வருகின்றனர்.

  • தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் கடலை, வாழை, வெண்டைக்காய், பீன்ஸ், கீரைவகைகள், புதினா, மல்லி, உட்பட தோட்டக்கலை பயிர்களை சொட்டு நீர் பாசனம் முறையில் அதிகம் சாகுபடி செய்கின்றனர்.
  • தற்போதைய வறட்சி காரணமாக வனத்திற்குள் எங்குமே தண்ணீர் கிடைக்கவில்லை.
  • இதனால் காட்டு மாடுகள், கேழையாடுகள், சிறுத்தைகள், யானைகள் உட்பட வனவிலங்குகள் விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. சில நேரங்களில் வனவிலங்குகளால் விவசாயிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. நேற்று, விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுமாடுகள் பயிர்களை நாசம் செய்தன.
  • வனவிலங்குகளை அடித்து விரட்டுவது சட்டப்படி குற்றம்.
    சாத்தியமில்லாத செயலும் கூட.
  • எனவே, விவசாயிகள் தோட்டங்களில் ஸ்பீக்கர்களை கட்டி, வெடி வெடிப்பது போலவும், யானை பிளிறுவது போலவும் பதிவு செய்து, போட்டு வருகின்றனர்.
  • இந்த வெடிச்சத்தம், யானை பிளிறும் சத்தங்களை கேட்டதும், வனவிலங்குகள் ஓடிப்போய் விடுகின்றன.
  • இரவில் தோட்டங்களுக்குள், சில மணி நேரத்திற்கு ஒருமுறை இப்படி வெடிச்சத்தத்தை ஸ்பீக்கரில் போடுகிறோம். எனவே வனவிலங்குகள் தொல்லை அறவே இல்லை, என விவசாயிகள் தெரிவித்தனர்.

நன்றி: தினமலர்

 

Related Posts

பசுமை தமிழகம் Android app பசுமை தமிழகம் மொபைல் Android app இதுவரை 5000 ப...
திண்டுக்கல்லில் விவசாய கண்காட்சி... திண்டுக்கல்லில் நேற்று துவங்கிய விவசாய கண்காட்சி 2...
எதிர்கால விவசாயம் இப்படி இருக்கலாம்!... நம் நாட்டில் விவசாயம் என்பது நிலத்தில் மட்டுமே நடக...
தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டிலை உபயோகித்து நாற்றங்கால் தயாரித்தல்... காலியான தேவையற்ற 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *